மா என்பது முக்கனிகளில் ஒன்றாகும்.மா மரச்செய்கை வியாபாரநோக்கில் செய்யப்படும் போது விவசாயிகள் பல பிரச்சனைகளை எதிர் கொள்கின்றனர்.ஆயினும் முன்னைய காலத்தில் விவசாயிகள் இவ்வாறான பிரச்சனைகளை எதிர்கொள்ளவில்லையா என்றால் ஆம் இல்லை என்ற பதில்களைத்தான் கூறவேண்டும்
சகலரினதும் வீட்டிலும் மாமரம் இருக்கும்போதும் வீட்டிலிருப்பவர்களினது எண்ணிக்கையை விட மாம்பழங்களினது எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் இழப்புக்கள் பெரிதாக பாதிக்கவில்லை.ஆனால் இந்த நவீனத்துவ உலகில் மக்களது சனத்தொகையை விட உணவின் உற்பத்தி குறைவாக இருக்கிறது ஆயினும் மாமரச்செய்கை மற்றும் கிடைக்கும் மாம்பழங்களது எண்ணிக்கையை பொறுத்தவரையில் நாட்டில் பரவலாக கிடைக்கக்கூடிய பழங்களில் மாம்பழமே முதன்மைப்பெறுகின்றதுஇன்றைய காலத்தில் செயற்கைத் தூண்டுதலினால் மாமரங்களில் மாம்பழங்களை உற்பத்தி செய்வதனால் மாம்பழ பருவம் வரும் வரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.
முன்னைய காலத்தில் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள் மனித வலு மற்றும் கிட்டிய கவணிப்புடன் முழுமை பெற்று இருந்தது.ஆனால் நவீனதொழில்நுட்பங்கள் மனித வலுவைக் குறைத்தும் செலவை குறைக்கின்ற போதிலும் முழமை பெறவில்லை.இவ்வாறு முழமை பெறாததிற்கு பெரும்பாலான தொழில்நுட்பங்கள் எளிமையானவையாக அமையாதிருப்பதும் ஆரம்ப செலவு உயர்வாக இருப்பதும் ஒன்றுடன் ஒன்று பினைந்த தொழில்நுட்பங்களாக இருப்பதுமே ஆகும்.
இந்த கட்டுரையானது www.agricultureinformation.lk எனும் இனது பதிப்புரிமைக்குரியது இதனை எழுத்து வடிவம் மற்றும் ஒளி ஒலி வடிவங்களில் பயன்படுத்துவது பதிவு செய்யப்பட்ட தனியார் கம்பனிகளது சட்டத்தின்படி குற்றமாகும். www.agricultureinformation.lk ஆனது greenlankamentors pvt ltd இனது ஒர் தயாரிப்பாகும்.
எது எவ்வாறு இருப்பினும் தொடர்சியான திட்டமிடல்கள் மற்றும் உரிய கவனிப்புக்களை சரியாக செய்கின்ற போது எந்தவொரு விவசாய முயற்சியும் சாத்தியமானதே ஆகும்.திட்டமிடுகின்ற போது நாம் எவற்றினை சரியாக செய்ய வேண்டும் என்று சிந்திப்போம்.அது போல எவற்றில் தவறுவிடுகிறோம் என்று சிந்தித்தாலும் திட்டமிடல் இன்னும் நேர்த்தியானதாக இருக்கும். அந்த வகையில் பெரும்பாலான விவசாயிகள் அல்லது முயற்சியாளர்கள் செய்கின்ற தவறுகளை ஆராய்ந்து மாமரச்செய்கையின் போது செய்யக்கூடாத பத்து விடயங்களை உங்களுக்கு தருகின்றோம்.எமது கருத்துக்கள் உங்களுக்கு பயனுடையதாக இருந்தால் அது பிறருக்கும் பயன்தரும் என்று நீங்கள் கருதினால் பிறருடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
கருத்துக்களில் தவறு இருப்பின் கொமண்ட செய்யவும். எமது தளத்தில் லொக் இன் செய்யாமலேயே கொமண்ட செய்யலாம். கட்டுரை என்கின்ற அடிப்படையில் முக்கியமான பத்து தவறுகளையே இங்கு சுட்டிக்காட்டியுள்ளோம்உங்களுக்கு தெரிந்த வேறு தவறுகள் இருப்பின் அவற்றினை கொமண்ட் செய்யவும்
- தவறு 1 மண்ணின் தண்மையை அறிநுது கொள்ளாமல் பயிர்களை நடுகை செய்வது
- தவறு 2 பொருத்தமற்ற காலத்தில் நடுகை செய்வது
- தவறு 3 காலநிலை மண்ணின் தன்மைகளை கருத்தில்கொள்ளாமல் மா இனங்களை தெரிவு செய்வது
- தவறு 4 உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லாமல் இருத்தல்
- தவறு 5 தாவர போசனை மூலகங்களை வழங்காமை
- தவறு 6 உரிய காலத்தில் நீர் வழங்காமை
- தவறு 7 தாவரத்தை பரட்டையாக கத்தரிக்காமல் விடுதல்
- தவறு 8 பொருத்தமற்ற இரசாயனங்கள் பூச்சி கொள்ளிகளை பயன்படுத்துதல்
- தவறு 9 தோட்டத்தை சுத்தமாக பேணமல் லிடுதல
- தவறு 10 பகுதி நேரமாக அல்லது நேரம் கிடைக்கும் போது மட்டும் தோட்டத்தை பராமரித்தல்
இந்த கட்டுரையானது www.agricultureinformation.lk எனும் இனது பதிப்புரிமைக்குரியது இதனை எழுத்து வடிவம் மற்றும் ஒளி ஒலி வடிவங்களில் பயன்படுத்துவது பதிவு செய்யப்பட்ட தனியார் கம்பனிகளது சட்டத்தின்படி குற்றமாகும். www.agricultureinformation.lk ஆனது greenlankamentors pvt ltd இனது ஒர் தயாரிப்பாகும்.
தவறு 1 மண்ணின் தண்மையை அறிந்து கொள்ளாமல் பயிர்களை நடுகை செய்வது
மண்ணின் தன்மை இடத்துக்கு இடம் மாறுபடக்கூடியது மண்ணின் தன்மையை அடிப்படையில் கார மற்றும் அமில இயல்பு கொண்டது என்றும் களி மணல் இருவாட்டி என பாகுபடுத்திக்கொள்ளமுடியும்.
மா மரமானது பெரும்பாலும் சகல வகை மண்ணிலும் பயிரிடலாம். 2 மீ ஆழத்துடன் நன்கு வடிகட்டிய மண் சிறந்தது. மண்ணின் pH 5.5-6.5 ஆக இருக்க வேண்டும். அதிக களிமண் உள்ளடக்கம் கொண்ட மண் அல்லது அடிக்கடி தண்ணீர் தேங்குகின்ற மண் மாம்பழத்தை வெற்றிகரமாக பயிரிடுவதற்கு ஏற்றதல்ல.
தவறு 2 பொருத்தமற்ற காலத்தில் நடுகை செய்வது
காலத்தே பயிரிடு என்று முன்னோர்கள் சொல்லியுள்ளனர்.ஆயினும் தற்போதைய நிலைமைகளில் பருவகாலங்கள் பொய்த்த போய்விட்டன.இதனால் முன்னைய காலத்pல் குறிப்பிட்டவாறு நடுகைசெய்யமுடியாது எனினும் மழையை எதிர்பார்த்திருக்கும் மாதங்களுக்கு குறைந்தது இரண்டு மாதங்கள் முன்னர் நடுகை செய்வது நல்லது.
வறண்ட வலயம் அல்லது உலர் வலயத்தை பொறுத்தவரையில் மழை பெய்யும் காலபோக காலத்தில் நடவு தொடங்கலாம். இடைநிலை மற்றும் ஈரமான மண்டல வலயங்களில்இபெரும்போகம் அல்லது சிறுபொக காலங்களில் மழை பெய்யும்போது நடவு சாத்தியமாகும்.
ஒரு வீட்டுத் தோட்டத்தைப் பொறுத்தவரை கனமழை பெய்யும் காலங்களைத் தவிர ஆண்டின் எந்த நேரத்திலும் நடவு சாத்தியமாகும். நீடித்த காலத்திற்கு வரட்சி நிலை இருந்தால் தாவரங்கள் தேவைப்படும் போது நீர்ப்பாசனம் செய்யப்பட வேண்டும்.
இந்த கட்டுரையானது www.agricultureinformation.lk எனும் இனது பதிப்புரிமைக்குரியது இதனை எழுத்து வடிவம் மற்றும் ஒளி ஒலி வடிவங்களில் பயன்படுத்துவது பதிவு செய்யப்பட்ட தனியார் கம்பனிகளது சட்டத்தின்படி குற்றமாகும். www.agricultureinformation.lk ஆனது greenlankamentors pvt ltd இனது ஒர் தயாரிப்பாகும்.
தவறு 3 காலநிலை மண்ணின் தன்மைகளை கருத்தில்கொள்ளாமல் மா இனங்களை தெரிவு செய்வது
இலங்கையில் தற்போது பரவலாக மா மரச்செய்கை செய்யப்படுகிறது. இவற்றில் நாட்டின் பல்வேறு விவசாய சூழலியல் வலயங்களில் செய்கை பண்ணக்கூடிய பொருத்தமான தாவர பேதங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஒரு மா மரத்திலிருந்து அதிக விளைச்சலைப் பெற பொருத்தமான தாவர பேதத்தை தெரிவு செய்து பயன்படுத்துவது அவசியம். வெவ்வேறு வகையான தாவர பேதங்கள் வேறுபட்ட பண்புகளையும் சுவையையும் கொண்டுள்ளது.
உலர் வலயத்துக்கு பொருத்தமானவை
- கருத்த கொளும்பான்
- வில்லார்ட்
- வெள்ளை கொளும்பான்
- அம்பலவி
- செம்பட்டான்
- மல்வான
இடைவலயத்துக்கு பொருத்தமானவை
- கருத்த கொளும்பான்
- வில்லார்ட்
- வெள்ளை கொளும்பான்
- பெட்டியாம்பா
- மல்வானா
ஈரவலயத்துக்கு பொருத்தமானவை
- வெள்ளை கொளும்பான்
- கிரா அம்பா
- பீட்டர்பிரசந்த்
- தம்பாரா
தவறு 4 உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லாமல் இருத்தல்
எந்தவொரு விவசாய நடவடிக்கை;கும் பாதுகாப்பு கட்டாயமானது உரியமுறையில் எல்லைகளை இட்டு பாதுகாப்பை உறுதி செய்துகொள்ளவேண்டும்.மாடு ஆடு பன்றி யானை போன்ற விலங்குளிலிருந்து பாதுகாப்பு இடப்படவேண்டும்.அவற்றிற்காக முள்வேலிகள் உயிர்வேலிகளான கிளிசிறிடியா பூவரசு போன்றவற்றை பயன்படுத்தலாம்
மனித நடவடிக்கையிலிருந்து பாதுகாக்க மனித காவல்கள் மற்றும் கண்காணிப்பு கமராக்களை பயன்படுத்தலாம்
இந்த கட்டுரையானது www.agricultureinformation.lk எனும் இனது பதிப்புரிமைக்குரியது இதனை எழுத்து வடிவம் மற்றும் ஒளி ஒலி வடிவங்களில் பயன்படுத்துவது பதிவு செய்யப்பட்ட தனியார் கம்பனிகளது சட்டத்தின்படி குற்றமாகும். www.agricultureinformation.lk ஆனது greenlankamentors pvt ltd இனது ஒர் தயாரிப்பாகும்.
தவறு 5 தாவர போசனை மூலகங்களை வழங்காமை
தாவர வளர்ச்சிக்கு நைட்ரஜன் பொஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் ஆகிய மூன்று மூலகங்களும் முக்கியமானவை.இவை NPK என அழைக்கப்படுகின்றன. கல்சியம் மெக்னீசியம் மற்றும் கந்தகம் ஆகியவை பிற முக்கிய முக்கியமானவை தாவரங்களுக்கு சிறிய அளவிலான இரும்பு மாங்கனீசு நாகம் செப்பு போரான் மற்றும் மாலிப்டினம் ஆகியவை தேவைப்படுகின்றன.பிரதானமான மூன்று மூலகங்களும் யூரியா TSP MOP போன்றவற்றிலிருந்தும் ஏனயவை நுண்போசனைக் கலவைகளிலிருந்தும் பெறப்படுகின்றன.
இவ்வாறான போசனைப்பதார்த்தங்களை உரிய காலத்தில் உரிய அளவில் வழங்காமையால் குளற் வளர்ச்சி வளர்ச்சியின்மை வாடல் காய்காமை, பூக்காமை, மஞ்சளாதல் போன்ற விளைவுகள் ஏற்படுகின்றன.
தவறு 6 உரிய காலத்தில் நீர் வழங்காமை
நீடித்த வறண்ட காலநிலை இருக்கும் பகுதிகளில் நடவு செய்த முதல் மூன்று ஆண்டுகளுக்கு நீர்ப்பாசனம் செய்வது கட்டாயமாகும். நீர்ப்பாசனம் செய்யவேண்டிய காலம் மற்றும் அளவு என்பன மழைகிடைக்கும் கால அளவு மற்றும் மண்ணின் பண்புகளைப் பொறுத்து வேறுபடும்.
மாம்பழத்தைப் பொறுத்தவரை பூக்கும் காலம் பழம் உருவாகும் காலம் முதிர்ச்சி காலம் போன்றவற்றில் முக்கியமாக ஈரப்பதம் தேவைப்படும்.
இலை முதிர்ச்சி முதல் மலர் மொட்டு வெடிப்பு வரை பாசனம் நிறுத்தப்பட வேண்டும். இந்த காலகட்டத்தில் நீர்ப்பாசனம் பூப்பதை மோசமாக பாதிக்கிறது.
இந்த கட்டுரையானது www.agricultureinformation.lk எனும் இனது பதிப்புரிமைக்குரியது இதனை எழுத்து வடிவம் மற்றும் ஒளி ஒலி வடிவங்களில் பயன்படுத்துவது பதிவு செய்யப்பட்ட தனியார் கம்பனிகளது சட்டத்தின்படி குற்றமாகும். www.agricultureinformation.lk ஆனது greenlankamentors pvt ltd இனது ஒர் தயாரிப்பாகும்.
தவறு 7 தாவரத்தை பரட்டையாக கத்தரிக்காமல் விடுதல்
கத்தரித்தல் மற்றும் பயிற்றுவித்தல் செயன்முறையானது மாமரத்தின் இரண்டாவது வளர்ச்சிப் பருவத்திலிருந்தே மேற்கொள்ளப்பட வேண்டும் இதன் மூலம் தாவரத்தில் சூரியஒளி படும் அளவு அதிகரிக்கப்படுவதுடன் நோய் பீடைத் தாக்கங்களும் குறைக்கப்படுகிறது. மேலும் நோய்த் தாக்கமுற்ற தாவரப் பாகங்கள் அகற்றப்படுவதுடன் தாவரமானது பராமரிக்கக் கூடிய உயரத்தில் பேணப்படுகிறது. இதன் விளைவாக மாமரத்தில் காய் கொள்ளும் தன்மை அதிகரிக்கப்படுவதுடன்இ அதன் தரமும் பேணப்படுகிறது. கத்தரித்தல் பயிற்றுவித்தலானது பொதுவாக சித்திரை– ஆடி காலப்பகுதிகளிலேயே மேற்கொள்ளப்பட வேண்டும்
தவறு 8 பொருத்தமற்ற இரசாயனங்கள் பூச்சி கொள்ளிகளை பயன்படுத்துதல்
விவசாயிகளைப் பொறுத்தவரை பயிர்கள் எப்போதும் நோய் பூச்சி தாக்கம் இல்லாமல் இருத்தல் வேண்டும்.இது கடினமான சாத்தியமாகும்.இதற்காக தொடர்ச்சியான கவணிப்பு பொறுமை அர்பணிப்பு மற்றும் நோய் பூச்சிகள் பற்றிய அறிவும் தேவை.விவசாயிகளில் பெரும்பாலானோர் வரும்முன் காப்பதை தவறாக புரிந்து கொண்டு நோய் வருமுன் விவசாய இரசாயனங்களை தெளித்து நநன்மை செய்யு; பூச்சிகளை கொல்கின்றனர்.நன்மை செய்யும் பூச்சிகளுக்கு இறையாகும் தீமை செய்யும் பூச்சிகள் நன்மை செய்யும் பூச்சிகளினது இறப்பினால்பெருகுகிறது.இதனால் தீமை செய்யும் பூச்சிகள் தீமையை தருகின்றன.பூச்சித்தாக்கம் வழியே நோயும் உருவாகிறது.
மேலும் நோய் மற்றும் பூச்சிகள் பற்றிய அறிவு குறைவாக இருப்பதனால் அவற்றினை அடையாளப்படுத்துவதிலும் தவறுகள் ஏற்படுகின்றன.இவை பொருத்தமற்ற இரசாயனங்கள் பூச்சி கொள்ளிகளை பயன்படுத்துவதில் முடிகிறது. நோய் பூச்சிகள் மற்றும் விவசாய இரசாயனங்கள் பற்றிய அறிவுபெற்றவர்களது உதவியை நாடுவதன் மூலம் இவற்றினை தடுக்கலாம்
தவறு 9 தோட்டத்தை சுத்தமாக பேணமல் விடுதல
இறந்த தாவரங்கள் பூரணமாக உக்காத கழிவுகள் விலங்குக்கழிவுகள் போன்றன பூச்சிகளுக்கு பிடித்தமான வாழிடமாகும்.மேலும் களைகள் நோய்காவிகள் பூச்சிகளது வாழிடமாக இருக்கும் எனவே இவற்றினை அழித்து தோட்டத்தை சுத்தமாக பேணுவதன் மூலம் மேலதீக செலவுகளை குறைத்து இலாபகரமான மாமரச்செய்கையை மேற்கொள்ளமுடியும்
இந்த கட்டுரையானது www.agricultureinformation.lk எனும் இனது பதிப்புரிமைக்குரியது இதனை எழுத்து வடிவம் மற்றும் ஒளி ஒலி வடிவங்களில் பயன்படுத்துவது பதிவு செய்யப்பட்ட தனியார் கம்பனிகளது சட்டத்தின்படி குற்றமாகும். www.agricultureinformation.lk ஆனது greenlankamentors pvt ltd இனது ஒர் தயாரிப்பாகும்.
தவறு 10 பகுதி நேரமாக அல்லது நேரம் கிடைக்கும் போது மட்டும் தோட்டத்தை பராமரித்தல்
தற்போதைய காலகட்டத்தில் விவசாயம் என்பது குறைந்தளவு முழுநேர விவசாயிகளையும் பகுதி நேர விவசாயிகளையும் ஓய்வுகால விவசாயிகளையும் கொண்டுள்ளது.முழுநேர விவசாயிகள் தற்போதைய காலகட்டத்தில் குறைவானவர்களே.மா நீண்ட காலப்பயிர் ஆகினும் பராமரிப்பு நடவடிக்கைகள் அதிகம் தேவைப்படுகின்றன.நடுகை களைபிடுங்குதல் நீர்ப்பாசனம் உரமிடுதல் பூச்சி நோய் பராமரிப்பு கத்தரித்தல் என அந்தந்த காலப்பகுதியில் செய்யப்படவேண்டிய விடயங்கள் அதிகமுள்ளன.எனவே அதிமான நேரச்செலவு தேவை மெனக்கெடல்கள் தேவை.இல்லையாயின் வேலையாட்கள் மற்றும் முழுமையாக பூரணப்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள் தேவை.
தவறு 11 நிதியை யோசிக்காமல் தனித்து மாமரத்தோட்டத்தை ஆரம்பித்தல்
மாமரச்செய்கையை தனித்தோட்டமாக ஆரம்பிக்கும் போது அறுவடைக்காலம் வரை காத்திருக்கவேண்டியதாகிறது.மற்றும் தாவரம் வளரும் வரையுள்ள காலப்பகுதி வரை தரை முழுவதுமாக பயன்பாடற்றதாகிறது. காணியை முழுவதுமாக பயன்படுத்துவதுடன் இரண்டாவது வருமானமாக மா அறுவடை வரை முதலாவது வருமானத்தை பெற்றுக்கொள்ளமுடியும்.மரக்கறி சிறுதானியங்கள் அன்னாசி போன்ற பழவகையையும் நடுகை செய்து இலாபமடையலாம்
தவறு 12 காற்று மறைப்புக்கள் இடாமை
பலத்த காற்று மாம்பழத்தில் கீறல்களை ஏற்படுத்தக்கூடும். இதனால் தீங்கு விளைவிக்கும் பங்கசு மற்றும் பாக்டீரியா இந்த காயங்கள் மூலம் பழத்தில் நுழையலாம். இதனால் சந்தை மதிப்பெண்களைக் கொண்ட பழம் சந்தைப்படுத்துவதற்கு ஏற்றுக்கொள்ள முடியாததாகிறது.பலத்த காற்று வீசினால் பூக்கள் உதிர்கப்படுகின்றன இதன் விளைச்சல் குறைவாக இருக்கும். எனவே காற்றுத்தடைகளை ஏற்படுத்தி விளைச்சல் குறைவை தடுக்கலாம்.மிகப்பெரிய மரங்களுக்கும் பலத்த காற்று வீசும் இடங்களுக்கும் வேலியோரத்தில் பணை மரங்களை நாட்டியிருத்தல் சிறந்தது
மேற்குறித்த 12 விடயங்களை தவிரவும் ஏதேனும் விடயம் இருப்பின் அதனை கொமண்ட் செய்யவும்.இந்த தகவல் உங்களுக்கு பயனுடையதாக இருப்பின் எமது கருத்துக்கள் உங்களுக்கு பயனுடையதாக இருந்தால் அது பிறருக்கும் பயன்தரும் என்று நீங்கள் கருதினால் பிறருடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
இந்த கட்டுரையானது www.agricultureinformation.lk எனும் இனது பதிப்புரிமைக்குரியது இதனை எழுத்து வடிவம் மற்றும் ஒளி ஒலி வடிவங்களில் பயன்படுத்துவது பதிவு செய்யப்பட்ட தனியார் கம்பனிகளது சட்டத்தின்படி குற்றமாகும். www.agricultureinformation.lk ஆனது greenlankamentors pvt ltd இனது ஒர் தயாரிப்பாகும்.
நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
1.மேற் குறித்த தகவலை உங்கள் நண்பர்களும் பயன்பெறுவதற்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.
2.மேலதீக கருத்துக்கள் உங்களுக்கு தேவைப்பட்டால் தேவைப்படுபவற்றை கொமண்ட் செய்யவும்.எமது தளத்தில் login /sign-up செய்யாமலே கொமண்ட செய்ய முடியும்(முகநூல் வழியாக)
3.எமது தகவல்களை முகநூலில் அறிந்து கொள்ள எமது விவசாயத்தகவல்கள் முகநூல் பக்கத்துடன் இணைந்து கொள்ளுங்கள்
https://www.facebook.com/விவசாய-தகவல்கள்-582332455436969/?ref=pages_you_manage
ஆண்கள் பெண்கள் என வேறுபாடின்றி பாதுகாப்பு தன்மையுடன் உங்கள் தொலைபேசி இலக்கத்தை பிறர் அறிந்து கொள்ள முடியாத வகையில் எமது வைபர் கொமியூனிட்டியில் இணைந்து கொள்ளுங்கள்
https://invite.viber.com/?g2=AQB6eG9WRodwG0yyQo300oUspfENgull%2Bx471GwTQ77OxNvkkMoI5IEIn7elac1O
எமது தகவல்களை காணொளி வடிவில் அறிந்து கொள்ள எமது யூரிப் சனலை subscribe செய்து கொள்ளுங்கள்
https://www.youtube.com/channel/UCvKmAicWA4Im-DD-j0yIKeg