பிரதானம் புதியவை விவசாய முடிவுகள்

இரசாயன பூச்சிக்கொல்லிகளின் இறக்குமதி பற்றிய அறிக்கையின் தமிழ் வடிவம்

நாட்டில் பயன்படுத்தப்படும் அனைத்து விவசாய இரசாயன   பூச்சிக்கொல்லிகளும் முடிக்கப்பட்ட தயாரிப்புகளாக அல்லது தொழில்நுட்பப் பொருட்களாக இறக்குமதி செய்யப்படுகின்றன.பின்னர் அவை உள்நாட்டில் வடிவமைக்கப்படுகின்றன.

1977 இல் இறக்குமதி தாராளமயமாக்கலுக்கு முன்னர் இறக்குமதி அரசாங்கத்தின் டெண்டர் அடிப்படையில் செய்யப்பட்டது. தாராளமயமாக்கல் கொள்கைகளுடன் இறக்குமதி செய்யப்படும் பூச்சிக்கொல்லிகளின் அளவுகளில் திட்டவட்டமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. (பதிரானா,1983)

உரிமம் பெற்ற பிறகு பைரோத்ராய்டுகளைத் தவிர இறக்குமதி செய்ய வேண்டிய தொகைகளுக்கு வரம்புகள் இல்லை. பூச்சிக்கொல்லிகளின் இறக்குமதி அதிகரிப்பதற்கு இது ஒரு காரணமாக இருக்கலாம். பைரோத்ராய்டுகளில்இ ஒரு குறிப்பிட்ட அளவு மட்டுமே இறக்குமதி செய்யப்படுகிறது  இது விவசாய செய்யப்படும்   காணியின் அளவின்  அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது.

சில தனியார் மற்றும் பொது நிறுவனங்கள் இலங்கையில்  பூச்சிக்கொல்லி விற்பனை  சந்தையினை ஒலிகோபோலிஸ்டிக் சந்தையாக அதாவது புதிதாக ஓரு விற்பனையாளரை அணுமதிக்க விடாத  நிலைமைளை உருவாக்குகின்றனர் . இவர்கள் பன்னாட்டு நிறுவனங்களின் உள்ளூர் விநியோகஸ்தர்களாக அல்லது முகவர்களாக செயல்படுகின்றன. கிட்டத்தட்ட பதினேழு நிறுவனங்கள் பூச்சிக்கொல்லி இறக்குமதியில் ஈடுபட்டுள்ளன ஹேலிஸ் லிமிடெட், ஹாரிசன்ஸ் கெமிக்கல் (பிரைவேட்) லிமிடெட்,லங்கேம் லிமிடெட், சிஐசி மற்றும் சிபிசி ஆகியவை சந்தையின் பெரும்பகுதியைப் பகிர்ந்து கொள்கின்றன.

கடந்த பத்து ஆண்டுகளின் இறக்குமதி மதிப்பீடுகளை பரிசீலிக்கும்போது, ​​தொழில்நுட்பப் பொருட்களின் இறக்குமதி குறைந்துவிட்டது மற்றும் முன்னர் இறக்குமதி செய்யப்படாத இறுதிப் பொருட்களின் இறக்குமதி அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் பல சிறிய நிறுவனங்களும் வடிவமைக்கப்பட்ட  இறுதி தயாரிப்புகளை இறக்குமதி செய்தமையினாலாகும்.

பெரிய நிறுவனங்களின் கருத்து  என்னவென்றால் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது பொருட்களின் எண்ணிக்கையை அதிகரிக்கக்கூடும் அதனால் ஏற்படும்  ​​கலப்படம் போரித்தன்மை போன்ற பிரச்சனைகளை  ஒழுங்குபடுத்துவதில் சிரமத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்

1989 முதல் 1994 வரை 21 வளரும் நாடுகளில் பூச்சிக்கொல்லி பொருட்கள் குறித்து ஜி.டி.இசட் நடத்திய பகுப்பாய்வு ஆய்வில்  வளரும் நாடுகளின் சந்தையில் கிடைக்கும் பூச்சிக்கொல்லிகளில் மூன்றில் ஒரு பங்கு சர்வதேச தரங்களுக்கு இணங்கவில்லை என்பது தெரியவந்தது.(தரமான செயல்திறன்மிக்க பொருட்களுக்களாக அவை இல்லை) (ராஜபக்ஷ 1997)

பூச்சிக்கொல்லிகளின் விற்பனை

2001 ஆம் ஆண்டிற்கான பூச்சிக்கொல்லிகளின் மொத்த விற்பனை அளவு கிட்டத்தட்ட 5897 மெட்ரிக் ஆகும்.   இது முந்தைய ஆண்டை விட 100 மெட்ரிக் டன் அதிகரிப்பு ஆகும். பூச்சிக்கொல்லிகளின் விற்பனை கடந்த ஐந்து ஆண்டுகளாக வளர்ச்சியைக் காட்டியுள்ளது இது நாட்டில் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது என்பதை பிரதிபலிக்கிறது.

இலங்கையில் 570 வர்த்தக பெயர்களில் தனியார் நிறுவனங்களால் 75  பொருட்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த அதிக எண்ணிக்கையிலான பெயர்கள் காரணமாக விவசாயிகள் பெரும்பாலும் குழப்பமடைந்து.அவை வேறுபட்ட தயாரிப்புகள் என்று நினைத்து வேறுபட்ட இரசாயணங்களை பயன்படுத்துகிறார்கள்.

பூச்சிக்கொல்லித் தொழிலில் ஈடுபட்டுள்ள விற்பனையாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் ‘பூச்சிக்கொல்லிகளைக் கட்டுப்படுத்தும் சட்டத்தின்’ அமலாக்க அதிகாரியாகச் செயல்படும் அப்பகுதியின் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியிடமிருந்து சான்றிதழைப் பெற வேண்டும்.

இந்த சான்றிதழை ஒவ்வொரு 12 மாதங்களுக்கும் புதுப்பிக்க வேண்டும். ஆனால் இந்த பதிவு செயல்முறைக்கு அனைத்து பூச்சிக்கொல்லி விற்பனையாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களின் ஈடுபாட்டைப் பெறுவது பெரும்பாலான பகுதிகளில் சாத்தியமில்லை. பதிவுசெய்தல் பணியைத் தொடங்க முறையான அமைப்பு இல்லாததே இதற்குக் காரணம். ‘பூச்சிக்கொல்லிகளைக் கட்டுப்படுத்தும் சட்டத்தின்’ அதிகாரத்தைப் பயன்படுத்த அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகளது அண்ணிக்கையில்  குறைபாடுகள் உள்ளமையால் இந்த  சிக்கல்  காணப்படுகிறது

விற்பனையாளர்கள் மற்றும் சில்லறை

விற்பனையாளர்கள் சட்டத்திற்கமைவாக விற்பனை செய்வதற்காக மேலதீக செலவு செய்தல் வேண்டும் திட்டமான அமைப்புகளை உருவாக்க வேண்டும்  மற்றும் தேவையான பராமரிப்பு  வசதிகள் இல்லாததால் பதிவை புறக்கணிக்கின்றனர். சில நேரங்களில் பூச்சிக்கொல்லிகளின் விற்பனை குறித்த ஒரு பருவத்திற்கு மட்டுமாக இருப்பதால்   சில்லறை விற்பனையாளர்கள் பதிவைத் தவிர்க்கிறார்கள். இந்த சிக்கலைக் குறைக்க  சரியான கண்காணிப்பு முறையை உருவாக்க வேண்டும்.

சில்லறை வர்த்தகர்கள் பெரும்பாலும் விவசாயிகளுடன் வலுவான மற்றும் செல்வாக்குமிக்க உறவைக் கொண்டுள்ளனர். செல்வாக்கின் அளவு ஒவ்வொரு இடத்திற்கும் மாறுபடலாம் ஆனால் விவசாயிகள் அனைத்து உள்ளீடுகளுக்கும் சில்லறை விற்பனையாளர்களை நம்பியுள்ளனர். எனவே அவற்றை சில்லறை விற்பனையாளர்கள் எளிதில் தவறாக வழிநடத்துகிறார்கள்(திசாநாயக்கஇ 2001)

 

Related posts

error: Alert: Content is protected !!