தகவல்கள் பிரதானம் புதியவை

கள்ளி வகை தாவர பராமரிப்பில் பொதுவான ஐந்து தவறுகள்:

கள்ளி வகை தாவரம் நம்பமுடியாத அளவுக்கு வலுவான தாவரமாகும் அதேபோல் அவை மிகச்சிறந்த  உணர்திறன் கொண்டவை மற்றும் கவனமாக பராமரிக்கப்படவேண்டியவை. அதிகப்படியான நீர் அல்லது குறைவான நீர் விநியோகம் போன்ற காரணிகளோடு ஏராளமான காரணிகள் கள்ளி வகை தாவர வளர்ச்சியை பாதிக்கும்.

நவீன காலத்தில் கள்ளி வகையானது வீட்டிலேயே உட்புறத்திலும் வெளிப்புறத்திலும்  வளர்க்கவும் பராமரிக்கவும் ஒரு பிரபலமான தாவர இனமாக மாறியுள்ளது. இவற்றிற்கு  மிகக் குறைந்த பராமரிப்பு தேவைப்படுவதால் வீடுகளில் வளர்க்கப்படும் தாவரங்களுள்  மிகச்சிறந்த தாவர வகையாக இது உள்ளது. ஒரு தோட்டத்தில் வைத்திருக்கும் பெரும்பாலான தாவரங்களுடன் ஒப்பிடும்போது இவை தனித்துவமான தேவைகளை கொண்டு இருப்பதால் கவனிப்புக்குரியதோடு குறிப்பிட்ட வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும். பல தவறான தகவல்கள் மற்றும்  தவறான  பாதுகாப்பு உத்திகள் கள்ளி தாவரங்களின் வளர்ச்சியை  வெகுவாக பாதிக்கும்.

 

கள்ளி வகை தாவர பராமரிப்பில் காணப்படும் பொதுவான ஐந்து தவறுகள்:

  1. எல்லா கள்ளி வகை தாவரகளையும் ஒரே மாதிரியாக கவனித்தல் அல்லது பராமரித்தல்
  2. அதிகப்படியான நீர் பாவனை  அல்லது குறைந்த நீர் பாவனை
  3. சிறிய கொள்கலன்கள் பயன்பாடு மற்றும் மோசமான மண்  தெரிவு
  4. மிகக் குறைந்த சூரிய ஒளியை வழங்குதல் அல்லது அதிகமான சூரிய ஒளியை வழங்குதல்
  5. பூச்சிக்கொல்லிகளை தவறாகப் பயன்படுத்துதல்

தவறு 1 கள்ளி வகை தாவரங்கங்களை ஏனைய தாவரங்களை போலவே கவனித்துக்கொள்கின்றமை

ஒவ்வொரு உயிரினங்களும் அவற்றின் இயற்கையான சூழலில் வெளிப்படும் நிலைமைகளை போலவே கள்ளி வகை தாவரங்களினது இயற்கையான நிலைமைகளை அறிந்து வைத்திருக்க வேண்டும்..எடுத்துக்காட்டாக  கள்ளி வகை தாவர குடும்பத்தில்  மாமில்லேரியா (Mammillaria)  இனமானது   மற்ற  கள்ளி வகை தாவரங்களுடன்  ஒப்பிடும்போது  வறண்டு இருக்க விரும்புகிறது. அவ் மாமில்லேரியா கள்ளி வகையை சிறப்பாக பேண  மற்ற கள்ளி வகைளை  விட குறைவாக நீர் பாய்ச்ச வேண்டும்.  சில வகை கள்ளி தாவரங்கள் ஏனைய வகை கள்ளி தாவரங்களுடன் ஒப்பிடும்போது சாதாரண நிலைமைகளின் கீழ் இயல்பாகவே சிறந்த   வளர்ச்சியை வெளிப்படுத்துகின்றன.சில இனங்கள் விசேட நிலைமைகளின் கீழ் சிறந்த வளர்ச்சியை வெளிப்படுத்துகின்றன.

ஓபன்ஷியா: முட்கள் நிறைந்தவை.ஓபன்ஷியாவுக்கு இளம் தாவரங்களுக்கு பிரகாசமான வெளிச்சமும் வளர்ந்த தாவரங்களுக்கு  முழுமையான சூரிய ஒளியும் தேவை.   அதிக வெப்பநிலை மற்றும் வறண்ட சூழல்களைத் தாங்கி இவை வளரக்கூடியவை.ஆயினும் நாற்றுகள் தொடர்ந்து ஈரப்பதமாக இருக்க வேண்டும்

எக்கினோப்சிஸ்: எக்கினோப்சிஸ் இனமானது குமிழ் கள்ளி தாவர இனங்களுக்குள்   வகைப்படுத்தப்படுகிறது. இவை தீவிர ஒளியை விரும்புகின்றவை.  அவற்றின் மண் வறண்டு போகும் போது முழுமையான நீர்ப்பாசனம் தேவை அத்துடன் நல்ல வடிகால் தேவைப்படுகிறது , உரப்பாவனைக்கு சிறந்த வளர்ச்சியை வெளிப்படுத்தும்.

மாமில்லேரியா: இவை பிறவகை கள்ளி தாவரயிரினங்களை விட குறைவான சூரிய ஒளி தேவையுடையது.இவை அதிக நீரை விரும்புவது இல்லை மற்றும் வேகமாக நீரை இழக்க கூடிய வடிகட்டிய மண் தேவை.

ரெபுட்டியா: வெவ்வேறு வகையான ரெபுட்டியாவுக்கு மாறுபட்ட சூரிய நிலைமைகள் தேவைப்படுகிறது பெரும்பாலானவை அதிக வெப்பநிலையை விரும்பவில்லை.

பரோடியா: இவற்றுக்கு  மண் ஈரப்பதமாக இருக்க வேண்டும்  எனவே வழக்கமான நீர்ப்பாசனம் போதுமானது.

ஃபெரோகாக்டஸ்: இவை பெரும்பாலும் பீப்பாய் அல்லது பரல்  வடிவ கள்ளி தாவரமாகும்   இவை நேரடி சூரிய ஒளி  நன்கு வடிகட்டிய மண் மற்றும் வரையறுக்கப்பட்ட நீர் பயன்பாட்டுடன் நல்ல வளர்ச்சியை காட்டும்

தவறு 2 அதிகப்படியான நீர்ப்பாவனை  அல்லது குறைவான நீர்ப்பாவனை

சதைப்பற்றுள்ளவையாகக் கருதப்படும் கள்ளி தாவரங்களின்  சிறப்பு   அம்சங்களில் ஒன்று தண்ணீரைச் சேமிக்கும் திறனாகும். பெரும்பாலான கள்ளி தாவரங்கள்  தண்ணீரைத் தண்டுகளில் சேமித்து வரண்ட  சூழலிலும் செழித்து வளரும். வீட்டில் கள்ளி தாவரங்ககளை பராமரிக்கும் போது நீர் மூலம் எப்போதும் அருகிலிருத்தல் வேண்டும் .  ஒவ்வொரு நாளும் நம்முடைய வழமையான தாவரங்களுக்கு நாம் தண்ணீர் ஊற்றுவது போல் கள்ளி தாவரங்களுக்கு நீர் வழங்க கூடாது.

 

அப்படியானால் நீர்த்தேவையை எவ்வாறு அறிந்து கொள்வது

 

தாவரமானது நிலையான ஒரு அமைவிடத்தில் இருக்கும் போது தினசரி அவதானத்துடன்  கிழமைக்கு  ஒரு தடவை மாத்திரம் நீர்ப்பபாசனம் செய்யவும்..மண்ணின் தன்மை சூழல் வெப்பப்ப நிலைக்கு ஏற்ப  ஈரப்பதன் மாறுபாடும் அதேவேளை    நீரினது இருப்புத்தன்மை மற்றும் தாவரப்பயன் பாட்டினை யும் கணித்துக்கொள்ள முடியும். தாவரம் வாடுதல் மண் ஊடகம் உலர்ந்து போதல் போன்ற அறிகுறிகளைக் கொண்டு நீர்ப்பாசனத்தை திட்டமிடலாம்

வெவ்வேறு நிலைகளில் கள்ளி தாவரமானது நீர்ப்பாசனத்தின் தேவைகளை அல்லது தவிர்ப்புகளுக்குரிய அறிகுறிகளை காண்பிக்கும் இவற்றினை கவனித்து செயற்பட்டால் கள்ளி தாவரத்தினை வெற்றிகரமாக வளர்க்க முடியும்.

 

நிறமாற்றம்: தாவரங்களுக்கு கணிசமான நேரத்திற்கு நீர்  பாய்ச்சவில்லை என்றால் பச்சை தாவரங்கள் பெரும்பாலும் அதிக மஞ்சள் நிறத்தில் தோன்றும். தீவிர சூழ்நிலைகளில்  கள்ளி தாவரத்தினது  பகுதிகள் பழுப்பு அல்லது கருப்பு நிறமாக மாறும்  இது அவை இறந்தமையை குறிக்கிறது.

 

வீங்கி மென்மையானதாக காணப்படல்: கள்ளி மிகவும்   மென்மையாகத் தெரிந்தால்இ நீங்கள் அதை மிகைப்படுத்தியிருக்கலாம். இவ்வாறான சந்தர்ப்பத்தில் நீர்ப்பாசனம் செய்வதைக் கட்டுப்படுத்துங்கள் இதனால் அவை சிறந்த நிலைமைகளுக்குத் திரும்ப வாய்ப்பு உள்ளது.

சுருக்கங்கள்: இலைகள் அல்லது வெளிப்புறத் தோற்றம் சுருங்கிவிட்டால்  இதுவரட்சிக்கான அறிகுறியாகும்.   கொள்கலன்கள் போதுமான அளவு பாய்ச்சப்படுவதை உறுதிசெய்க

  1. சிறிய கொள்கலன்கள் மற்றும் மோசமான மண் வகைகளைப் பயன்படுத்துதல்

கள்ளி தாவரங்கள் வைக்கப்படும் பௌதீக நிலைமைகளும் அவற்றின் உயிர்வாழும் திறனில் குறிப்பிடத்தக்களவு தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த பொதுவான தவறினை இரண்டு பகுதிகளாக பார்ப்போம்.

1.மோசமான மண் தேர்வு

2.மிகச் சிறியதாக இருக்கும் கொள்கலன்களைப் பயன்படுத்து

பல கள்ளி இனங்களுக்கு பொருந்தாத சூழலை வழங்க இந்த இரண்டு காரணிகளும் காரணமாக அமைகின்றன..நீங்கள் ஒரு பானையில் ஒரு கள்ளி வளர்க்கிறீர்கள் என்றால்  நீங்கள் கள்ளியின் அளவு மற்றும் அதன் வேர்கள் இரண்டையும் ஆராய வேண்டும். பலர் கள்ளி வளர்ப்புக்கு மிகச் சிறிய கொள்கலளையே தேர்ந்தெடுப்பார்கள்  இது கள்ளியின்  வளர்ச்சி திறன்களைக் பாதிக்கும் .நீண்ட வேர்கள் இருந்தால்  ஆழமான கொள்கலன் தேவைப்படும். கள்ளியின் பூரண வளர்ச்சிக்கு கள்ளியை விட சற்றே பெரிய கொள்கலனைத் தேர்வு செய்ய வேண்டும்.கொள்கலன்களிலும் நேரடியாக  தரையில் உள்ள தாவரங்களுக்கும்  மண் முக்கியமானதாகும். கள்ளிக்கு வழக்கமான பூச்சட்டியை  பயன்படுத்துவதும் வழமையான தோட்ட மண்ணைப் பயன்படுத்துவதும்  தவறாகும்.  சரியான வடிகட்டுதல் வசதி இல்லாத போது கள்ளி விரைவாக வேர் அழுகலுக்கு உள்ளாகும்.பாலைவன சூழல்களில் கள்ளி வளரும் என்பதை கருத்தில் கொண்டு அதற்குரிய  நிலைமைகளில் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

கள்ளிக்குரிய  சிறந்த மண் பின்வரும் பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும்

பாறை: இது  நீரினை பற்றிக் கொள்ளாமல்   மண்ணின் வழியாக எளிதில் செல்ல அனுமதிக்கிறது.

ஊட்டச்சத்துக்கள்: கள்ளிக்குரிய போசனை கலவைகளில் நைட்ரஜன்  பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் ஆகியவை அடங்கியிருக்க வேண்டும்

சேதன கூ று: கள்ளி தாவரங்கள் மிகவும் வறண்ட சூழலில் வைத்திருப்பதால் தாவரங்கள் ஈரப்பதத்தை பராமரிக்கவும் வைத்திருக்கவும் சேதனக் கூறு பெரும்பாலும் உதவுகிறது.இதனால் மண் மிக வேகமாக வறண்டுவிடாது.

கள்ளியின் வளர்ச்சிக்கு உதவ  ஒவ்வொரு இரண்டு மாதங்களுக்கும் மண்ணில் உரங்களைச் சேர்க்க வேண்டும்.கூடுதலாக தேவையில்லை. பாஸ்பரஸ் நிறைந்த உரம் வளர்ச்சிக்கு சிறந்தது.

நீங்கள் கள்ளி நடும் கொள்கலன்களில்  வடிகால் ஏற்பட அனுமதிக்க கீழே துளைகளும் இருக்க வேண்டும். துளைகள் இல்லாமல் மண் ஈரப்பதமாக இருக்கும் போது  வேர்களின் சிதைவுக்கு வழிவகுத்து    முன்கூட்டிய இறப்புக்கு காரணமாகிறது.

  1. மிகக் குறைந்த சூரிய ஒளியை வழங்குதல் அல்லது அதிக சூரிய ஒளியை வழங்குதல்

ஒளிச்சேர்க்கைக்கும் தாவரங்களின் வளர்ச்சிக்கும் சூரிய ஒளி முக்கியமானது. கள்ளியும் ஒளிச்சேர்க்கையில் ஈடுபடுகிறது ஆனால் இது இரவில் கார்பன் டை ஆக்சைடை சேகரிப்பதன் மூலம் ஈரப்பதத்தை பராமரிக்க அனுமதிக்கிறது. கள்ளிக்கு வழங்கப்படும் ஒளியின் அளவு தாவரத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க மிக முக்கியமான காரணிகளில் ஒன்றாகும். ஒரு பொதுவான தவறு அவர்களுக்கு மிகக் குறைந்த அல்லது அதிக வெளிச்சத்தை வழங்குவதாகும்.

சூரிய ஒளியைப் பொருத்தவரை இரண்டு முக்கிய சிக்கல்கள் உள்ளன:

  • குறைந்த வெளிச்சம் உள்ள இடங்களில் அவற்றை வீட்டுக்குள் வைத்திருத்தல்
  • கடுமையான வெயில் உள்ள இடங்களில் வீட்டுக்கு வெளியில் வைத்திருத்தல்

கள்ளி வகைக்கு ஏற்ப  ஒளி சமநிலையை பேண வேண்டும்  சில கள்ளிகளுக்கு மறைமுக சூரிய ஒளிஇ பிரகாசமான ஒளி அல்லது வெளிப்படும் மணிநேரங்களுக்கு ஏற்ப  ஒரு கட்டுப்பாடு தேவைப்படுகிறது.உங்கள் கள்ளி மிகக் குறைந்த ஒளியைப் பெறுகிறது என்றால் அவற்றுக்கான சில பொதுவான தீர்வுகள் உள்ளன:

ஒரு சாளரத்தின்/ஐன்னல்  அருகே வைக்கவும்: கள்ளி ஒளிக்கு  எரிவது  தவிர்க்கப்படுவதோடு  அதிக வெளிச்சமும் அனுமதிக்கப்படுகிறது,ஒரு கள்ளியை ஒரு சாளரத்தின் அருகே வைத்திருப்பதால் அதற்கு  தேவையான ஒளியை அது பெற்றுக் கொள்ளும்.

பெரும்பாலான கள்ளிகளுக்கு ஒரு நாளைக்கு 4 முதல் 6 மணி நேரம் சூரிய ஒளி தேவைப்படும்குறிப்பிட்ட இனங்கள் முழு சூரிய ஒளிக்கு ஏற்றதாக இருக்கும்.

  1. பூச்சிக்கொல்லிகளை தவறாகப் பயன்படுத்துதல்

உகந்த வளர்ச்சிக்காக   கள்ளி  தாவரங்களிலிருந்து பூச்சிகளை விலக்கி வைக்க நாங்கள் விரும்புவதால்  தீங்கு விளைவிக்கும் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவது  தவறு. சரியான  பூச்சிக்கொல்லிகளைப்  சரியான நேரத்தில் சரியான அளவில் பயன்படுத்த வேண்டும்.பூச்சிகள் இலைகள் மற்றும் தண்டுகளில் குவிந்துள்ள ஊட்டச்சத்துக்களை உண்ணும்

வெண்மூட்டுப்பூச்சி/மீலிபக்ஸ்: இவை இலைக்கு ஆபத்தானவை மற்றும் தண்டுகளைத் தாக்கும். அவை சிறிய வெள்ளை நிறத்தாலானவை விரைவாக இனப்பெருக்கம் செய்து கள்ளியை  சேதப்படுத்தும். இரசாயன பாவணைக்கு  முன் தண்ணீர்   கொண்டு அகற்ற முயற்சிக்கவும். வேப்பங்கரைசல் அல்லது  வேப்ப எண்ணெய் மற்றும் ஆல்கஹால் கரைசல்களை   தீவிரமான பூச்சிக்கொல்லி பயன்பாடுகளுக்கு முன்பு பயன்படுத்தப்படலாம்

 

Related posts

error: Alert: Content is protected !!