பிரதானம் புதியவை மாணவர் ஒளி

காளான் வளர்ப்பு ஒரு அறிமுகம் (மாணவர் ஒளி)

காளான் என்பது ஒரு வகை பங்கசினுடைய கனிய உடலமாகும். ஒளித்தொகுப்பிற்குரிய நிறப்பொருள் ஆன குளோரோபில் கொண்டிராமையினால் இதனால் ஒளித்தொகுப்பு செய்ய முடியாது. இது தனக்கு தேவையான சத்துக்களை தான் வளரும் ஊடகத்தில் இருந்து பெற்றுக் கொள்கின்றது. காளான் பல சத்துக்களை உள்ளடக்கிய சதைப்பற்றுள்ள கனிய உடலமாகும்.

இதில் காணப்படும் ஊட்டச்சத்துக்கள் ஆவன புரதம் சிறிதளவு கொழுப்பு கல்சியம், தயமின், நியசின், விட்டமின், றைபோபிலோவின் அத்துடன் காளான் பல மருத்துவ குணங்களையும் உள்ளடக்கியது.

தற்போதய காலப்பகுதியில் மிகுந்த இலாபம் ஈட்டும் விவசாயத்தறையில் காளான் வளர்ப்பு பெரும் பங்கு வகிக்கின்றது. எனெனில் குறைந்த மூலதனத்தில் அதிக இலாபம் ஈட்டக்கூடிய செய்கைஇ குறைந்த இடப்பரப்பில் போதுமானதுb ஊழியர்கள் அதிகம் தேவையில்லை. அடுத்து நாம் காளான் செய்கையை எடுத்து நோக்குவோமானால் பிரதானமாக மரத்தூசு வைக்கோல் போன்ற மூலப்பொருட்கள் பயன்படுத்தி காளான் உற்பத்தி செய்யலாம்.

மரத்தூசு பயன்படுத்தி செய்யும் முறை

தேவையான பொருட்கள்
100 Kg மரத்தூசு
10 Kg தவிடு
1 Kgகடலைமாவு
2 Kg CaCO3

200 g    MgSO4

செய்முறை

தொற்றுநீக்கப்பட்ட இடத்தில் மரத்தூசு தவிடு கடலைமாவு CaCO3 என்பவற்றை ஒன்றின்பின் ஒன்றாக சேர்த்து பின் MgSO4 இனை நீருடன் கலந்து கலவையில் ஊற்றி கலக்க வேண்டும். கலவையின் ஈரப்பதன் கையினால் பிடிக்கும் போது பிடிபடக்கூடிய அளவிற்கு இருத்தல் வேண்டும்.

கலவையினை தயாரித்த பின் கலவையினை 200 gauge பொலித்தின் பையினுள் இடுதல் வேண்டும்.( 7”x13” – 500g) பின் பொலித்தின் பையின் வாய் பகுதியிற்கு PVC குழாய் (1”x12” ) வைத்து அதனை Rubber band  ஆல் இருக்கமாக கட்ட வேண்டும். அதன் பின் அத்துவாரத்தினை தூய்மையான பஞ்சினால் அடைக்கவும் பொதி செய்யப்பட்ட பையினைBarrel ஒன்றில் வைத்து தொற்று நீக்கல் வேண்டும். (Barrel இன் அடியில் இருந்து 9’உயரத்திற்கு பொதி வைக்க வேண்டும் 6′ உயரத்திற்கு நீர் ஊற்ற வேண்டும் )

தொற்று நீக்கிய பின் வித்திகளை இடல் வேண்டும். தொற்றுநீக்கப்பட்ட மற்றும் அறை வெப்பநிலையில் வித்திகள் இடப்பட வேண்டும். ( 10-15 வித்தி/01பை ) பின் பஞ்சினால் மூடி 70-80% ஈரப்பதன் இல் பேண வேண்டும். 21-25 நாட்களில் கனிய உடலம் அரும்பியிக்கும் இடத்திற்கு அண்மையில் பென்சிலினால் துளையிடல் வேண்டும்.

பாரமரிப்பு நடவடிக்கை

 இருநாள் இடைவெளியில் நீர் தெளித்தல்

 காளானினை தூய்மையான கூரான கத்தியினால் அறுவடை செய்ய வேண்டும்

 வைக்கோலினை பயன்படுதல்

வைக்கோலினை 2% சுண்ணாம்பு நீரில் ஊறவைத்த பரல் ஒன்றில் இட்டு 6 மணித்தியாலங்கள் அவித்து தொற்று நீக்கம் செய்து நிழலில் உலர்த்தி எடுத்தல். ஈரலிப்பு 60-65 % இல் பொதிசெய்தல் மற்றும் வளர்ச்சி பராமரிப்பு மேற்குறிப்பிட்டவாறு செய்தல் வேண்டும்.

அறுவடை செய்த காளானை 10-12 மணித்தியாலம் அறை வெப்ப நிலையிலும் குளிரூட்டியில் 2-3 நாட்களும்  உலர்த்திய காளான் எனின் 1-2 வருடமும் பேண முடியும்.

ஆக்கம்:- T.நிவேதனா
NVQ6  மாணவி
யாழ்ப்பாணக்கல்லூரி விவசாய நிறுவனம்
மருதனார்மடம்.

 

காளான் ஊடகம் தயாரிப்பது எப்படி

காளான் ஊடகம் தயாரிப்பது பற்றிய வீடியோ காணொளி இங்கு தரப்பட்டுள்ளது இதனை பார்வையிட்டு பயனடையுங்கள்

Related posts

error: Alert: Content is protected !!