விலங்குகளுக்கு ஏற்படும் அசாதாரன நிலையே நோய் எனப்படும். ஆகவே நோய் நிலைமைகளை இனங்காண்பதற்கு விலங்குகளை அவதானிப்பது அவசியமாகும். விலங்குகளுக்கு நோய் ஏற்படுவதால் பண்ணையின் உற்பத்தி குறைதல்இ இனப்பெருக்கம் தடைப்படல் விலங்குகள் இறத்தல் பண்ணையாளர்கள் நட்டமடைதல் போன்ற பாதிப்புக்கள் ஏற்படலாம்.
சிறந்த ஆரோக்கியத்தைக் கொண்ட விலங்குகள் இயல்பான தன்மைகளைக்கொண்டிருப்பதுடன் நோயுற்ற விலங்குகள் இத்தன்மைகளிலிருந்து மாற்றம் கொண்டவையாக காணப்படும்.
கோழிகளுக்கு நோய்கள் ஏற்படுவதை கட்டுப்படுத்த கீழ் காணும் செயற்பாடுகளை பின்பற்ற வேண்டும்.
;பண்ணைகளைச் சுகாதாரமாக பேணவேண்டும்
உரிய நேரத்தில் தடுப்பு மருந்துகளை கொடுத்தல்
நோய்வாய்ப்பட்ட கோழிகளுக்கு சிகிச்சை அளித்தல்
நோய்வாய்ப்பட்ட கோழிகளை அகற்றுதல்
• கோழிக் குஞ்சுகளுக்கு தடுப்பு மருந்து வழங்குதல் கட்டாயமானது.
கோழிக் குஞ்சுகளுக்கு தடுப்பு மருந்து வழங்கப்படும் திட்டம்
வழங்கப்படும் வயது தடுப்பு மருந்து
1 ஆம் நாள் மரெக்ஸ் கம்போரா மருந்து
3 ஆம் நாள் 1 ஆம் முறை ரனிக்கற் மருந்து
4 ஆம் நாள் 1 ஆம் முறை புழு மருந்து
6 ஆம் வாரம் 1 ஆம் முறை கோழி அம்மை மருந்து
13 ஆம் வாரம் 2 ஆம் முறை ரனிக்கற் மருந்து
14 ஆம் வாரம் 2 ஆம் முறை புழு மருந்து
18 ஆம் வாரம் 2 ஆம் முறை கோழி அம்மை மருந்து
கோழிகளுக்கு ஏற்படும் நோய்கள்
1.தொற்று நோய்கள்
பற்றீரியா நோய் – புள்ளோரம் (salmonellosis)
வைரசு நோய் – கம்போறா
கோழி அம்மை
மரெக்ஸ்
ரனிக்கற்
புரட்டசோவன் நோய் – கொக்சிடியோசிஸ்
பூச்சி நோய்கள் – கொழுக்கிப்புழு
வட்டப்புழு
2.தொற்றாத நோய்கள் – கால் முடமாதல் (Curly toe paralysis)
– தன்னினமுன்னல் (canabolism)
நோய் | நோய் அறிகுறி | கட்டுப்பாடு | சிகிச்சை |
கொக்சிடியோசிஸ்
|
இரத்தம் கலந்த கழிச்சல்
வயிற்றோட்டம் உணவில்விருப்பமின்மை உற்பத்தி குறைவடைதல் குஞ்சுகள் இறத்தல் |
நோயுற்ற கோழிகளை அகற்றுதல்
மனையையும் உபகரணங்களையும் சுத்தமாக பேணுதல்
|
கொக்சிடியோசிஸ்ரற் எனும் மருந்தை வழங்குதல்
வைத்தியரின் ஆலோசனைப்படி சிகிச்சை அளித்தல்
|
புள்ளோரம் | கழிவறையைச் சுற்றி வெண்ணிறக் கழிவுகள் ஒட்டிக் காணப்படும்
கோழிகள் சோர்வாகக் காணப்படும் சுவாசிக்க சிரமப்படும் உற்பத்தி குறைவடைதல்
|
அடை வைப்பதற்கு நோயற்ற முட்டைகளை தெரிவு செய்தல்
அடைப்பொறியை தொற்று நீக்கல் |
கால்நடை வைத்தியரின் ஆலோசனைப்படி சிகிச்சை அளித்தல்
|
கோழியம்மை | பூக்கள் தலை தாடைகாதுச்சோணை ஆகிய பகுதிகளில் சிறிய கொப்பளங்கள் ஏற்;படும்.
உணவில் விருப்பமின்மை சோர்வாக இருக்கும் |
முறையாக தடுப்பூசி வழங்குதல். | நோய் ஏற்பட்ட பின்னர் சிகிச்சை இல்லை |
கம்போறா | நிணநீர் தொகுதி சார்ந்த நோய் ஆகும்
கழிவறையைச் சுற்றி ஈரமாகக் காணப்படும் உடல் வெப்பநிலை முதலில் அதிகரித்து பின்னர் குறைவடையும் திடீர் இறப்பு ஏற்படும்
|
முறையாக தடுப்பூசி வழங்குதல்.
பண்ணை சுகாதாரத்தை பேணல்
|
நோய் ஏற்பட்ட பின்னர் சிகிச்சை இல்லை
|
மரெக்ஸ் | நரம்புத்தொகுதி பலவீனமடையும்
இறகுகள் குழம்பிய நிலையில் காணப்படும் கால்கள் சோர்ந்த நிலையில் காணப்படும் 15-50% இறப்பு ஏற்படும்
|
நோயுற்ற கோழிகளை அகற்றுதல்
1ஆம் நாள் முறையாக தடுப்பூசி வழங்குதல். |
நோய் ஏற்பட்ட பின்னர் சிகிச்சை இல்லை
|
ரனிக்கற் | உடல் வெப்பநிலை உயரும்
பச்சை கழிச்சல் கழுத்தை கீழாக தொங்கப்போடல் புரண்டு படுத்தவாறு கால்களை அடிக்கும் 90-100% இறப்பு ஏற்படும் |
முறையாக தடுப்பூசி வழங்குதல்.
|
நோய் ஏற்பட்ட பின்னர் சிகிச்சை இல்லை
|
புழு நோய்
நோய் அறிகுறிகள் –
• குஞ்சுகளின் வளர்ச்சி மந்தமடையும்;
• கோழிகள் சோர்வாக காணப்படும்
• இறகுகளை சிலிர்த்தவாறு காணப்படும்
• பூ, தாடை ஆகியன நிறம் மங்குதல்
• முட்டையிடுதல் குறைவடையும்
• மலத்துடன் குருதி கலந்து காணப்படும்
சிகிச்சையும் கட்டுப்பாடும்
• 2-3 மாதங்களுக்கு ஒரு தடவை புழு மருந்து கொடுத்தல்
• கனகூழத்தை உலர்வாகவும் சுத்தமாகவும் பேணுதல்
• சுத்தமான சமநிலை உணவை வழங்குதல்
கட்டுரையாக்கம்
Mrs.G.S.Piruntha
NVQ5 & 6 மாணவி
யாழ்ப்பாணக்கல்லூரி விவசாய நிறுவனம்
மருதனார்மடம்..