பிரதானம் புதியவை விவசாயம் சார்ந்தது

சேதன உரத்தினை வயல்களுக்கு போட்டால்வயல் மேட்டு நிலமாகாதா???

வணக்கம் நண்பர்களே
இன்று நமது தளத்தில் நாம் சேதன விவசாயம் தொடர்பாக விவசாயிகள் கேட்கின்ற ஒரு சுவாரசியமான கேள்வி பற்றி பார்ப்போம்.

சேதன உரத்தினை வயல்களுக்கு இடும் போது வயல் நிலங்கள் மேட்டு நிலமாக மாறுமா? என்று பல விவசாயிகள் கேட்கிறார்கள்.இந்த கேள்வியை நாம் விஞ்ஞான ரீதியாக பார்ப்போம்

ஏக்கருக்கு பயன்படும் சேதன உரத்தின் அளவைப்பொறுத்தவரையில் விவசாயத்திணைக்களத்தினது பரிந்துரையின் படி

1.மாட்டெரு 4000 கிலோ ஏக்கருக்கு பயன்படுத்தப்பட வேண்டும்.

2.கூட்டெருவானது 2000 கிலோ பயன்படுத்த முடியும்.

3.செறிவூட்டப்பட்ட சேதன உரம் 200 கிலோ போதுமானது.

4000 கிலோ மாட்டெருவினை ஏக்கருக்கு இடும் போது 4046 சதுர மீற்றர் பரப்பளவிற்கே இது இடப்படுகிறது.எனில் சராசரியாக ஒரு சதுர மீற்றர் பரப்பளவிற்கு ஒரு கிலோ கிராம் உரமே இடப்படுகிறது.

சாதாரணமாக கூட்டெருவினது அடர்த்தியானது 400 கிலோ/கனவளவு ஆகும்.

எனில் ஒரு கிலோ உரம் கொள்ளக்கூடிய கனவளவு ஆனது 1/400 எனக்கொள்ள முடியும்.இது 0.0025 இற்கு சமமாகும்.

அலகு சதுரபரப்பு மற்றும் கனவளவுகளைக் கொண்டு உரம் இடப்படுகின்ற உயரத்தினை கணித்துக் கொள்ள முடியும்.


உரம் இடப்படும் உயரமானது 0.0025 மீற்றர் ஆகும்.இது 2.5 மில்லி மீற்றருக்கு சமமாகும்.எனில் ஒரு தடவை சேதன உரத்தினை வயல்களுக்கு இடுவதால் 2.5 மில்லி மீற்றர் உயரம் அதிகரிக்கும்.விஞ்ஞானத்தின் படி 10 வருடங்களுக்கு இவ்வாறு இட்டால் கூட 2.5 சென்ரி மீற்றர் உயரம் அதிகரிக்க கூடும்.

இந்தளவு கூட அதிகரிக்காது ஏனெனில் தாவரம் அகத்துறுஞ்சுவுது நுண்ணங்கித் தொழிற்பாடு போன்ற காரணிகளால் இதனை விட குறைந்தளவே உயரும் எனவே விவசாயிகள் தைரியாக சேதன உரத்தினை வயல்களுக்கு இடமுடியும்..
நன்கு உக்கியது என்பதை மாத்திரம் உறுதி செய்து கொள்ளுங்கள்

Related posts

error: Alert: Content is protected !!