பிரதானம் புதியவை

சேதன உரப்பாவணையுடன் நெற்செய்கை செய்து நட்டம் ஏற்பட்டால் இழப்பீடு வழங்கப்படுமா???

கண்டி புனித ஆலயத்தில் இடம்பெற்ற பாரம்பரிய யால அஸ்வானு பூஜையில் அமைச்சர் சமல் ராஜபக்ஷ கலந்துகொண்டபோது இயற்கை உரப்பாவணையோடு நெற்செய்கை செய்து விளைச்சல் குறைந்தால் குறைந்த விளைச்சல் விவசாயிகளுக்கு நஷ்டஈடு கொடுப்பேன் என தெரிவித்தார்

விவசாயிகள் மத்தியில் சேதன உரங்களை ஊக்குவிப்பதிலும் அதனை எவ்வாறு உற்பத்தி செய்வது என்பது குறித்து அவர்களுக்குக் கற்பிப்பதிலும் குறைபாடுகள் காணப்படுவதாக நீர்ப்பாசன அமைச்சர் சமல் ராஜபக்ஷ ஏற்றுக்கொண்டார்.

சேதன உரங்களை எவ்வாறு உற்பத்தி செய்வது என்பதை கமநல சேவைகள் நிலையத்திடம் இருந்து கூட விவசாயிகள் கற்றுக் கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.எவ்வாறாயினும் உர விவகாரம் தற்போது அரசியல்மயமாகியுள்ளது என்றார். நாடு முழுவதும் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டங்கள் மூலம் இது தெரிகிறது.

சேதன உரம் தொடர்பான விவாதம் புதியதல்ல என்றும் பல தசாப்தங்கள் பழமையானது என்றும் நீர்ப்பாசன அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

‘பொதுமக்களுக்கு விஷம் இல்லாத ஆரோக்கியமான உணவு கிடைக்கச் செய்வது அரசின் பொறுப்பு. இந்த முயற்சியில்இ விவசாயிகள் சிறந்த கொடி ஏந்தியவர்கள்இ” என்றார்.

உரப் பிரச்சினை காரணமாக பருவத்தில் அறுவடை குறைந்தால் அவ்வாறான நிலையில் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் ராஜபக்ஷ தெரிவித்தார்.

 

Source : Daily News (02,Nov,2021)

Related posts

error: Alert: Content is protected !!