திட்டங்கள் பிரதானம்

சேதன விவசாயத்துக்காக மாடு மற்றும் கோழிகளை இலவசமாக வழங்கப்படுகிறது

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் எண்ணக்கருவிலான நச்சுத்தன்மையற்ற சேதனப் பசளை பயிர்ச் செய்கைத் திட்டம் தொடர்பில் விவசாயிகளை உள்வாங்கும் வகையில் வடமத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத்தின் முயற்சிக்கு அமைய இயற்கை விவசாய செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்காக ஒரு குடும்பத்திற்கு மூன்று கறவைப் பசுக்களை விலைக்கு கொள்வனவு செய்து கொள்வதற்காக அவர்களின் 50 வீத பங்களிப்புடன் வடமத்திய மாகாண விவசாய அமைச்சு மூலம் நிதி வழங்கப்பட்டுள்ளது.அத்துடன் கோழிக் குஞ்சுகளும் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.

மிருகங்களின் கழிவுகளை பசளைகளாகப் பயன்படுத்தி விவசாயிகள் ஊடாக சேதனப் பசளைகளை உற்பத்தி செய்வதுடன் அதனை அவர்களின் விவசாயத்திற்கு பயன்படுத்துவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதனூடாக இரசாயன பசளைகளில் இருந்து விலகி சேதனப் பசளைக்கு விவசாயிகள் பழக்கப்படுவார்கள்.

கறவைப் பசுக்கள் மற்றும் முட்டைகள் மூலம் மேலதிக வருமானத்தை பெற்றுக் கொள்வதுடன் மாகாணத்தில் விவசாய மக்களின் பொருளாதாரத்தை அதிகரித்துக் கொள்ளவும் முடியும். பசும்பால் மற்றும் முட்டைகளின் மூலம் மாகாண மக்களின் ஊட்டச்சத்து நிலையை அதிகரிப்பதே மாகாண ஆளுநரின் எதிர்பார்ப்பாகும்.

அனுராதபுரம் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 35 விவசாயிகளுக்கு கறவைப் பசுக்கள் மற்றும் கோழிக்குஞ்சுகளை பெற்றுக் கொள்ள நிதி மற்றும் காசோலைகளை ஆளுநர் வழங்கியுள்ளார்.

வடமத்திய மாகாணத்தில் விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்திற்குரிய திறப்பனை விலங்கு பண்ணையில் இந்நிதி வழங்கும் நிகழ்வு ஆளுநர் தலைமையில் அண்மையில் இடம்பெற்றது.

அனுராதபுரம் கமநல சேவை அதிகார பிரிவிற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட 500 விவசாயிகளில் இருந்து 35 பேர் இதற்கென தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இதற்காக குறைந்த பட்சம் இரண்டு ஏக்கர் காணி உள்ள குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், தெரிவு செய்யப்பட்டுள்ள விவசாயிகளுக்கு சிறப்புப் பயிற்சி விலங்கு பண்ணையால் வழங்கப்படும்.

இயற்கை விவசாயம் என அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தத் திட்டம் ‘உயிரியலுடன் விவசாயம் செய்து பூமியை குணப்படுத்துவோம்’ தொனிப்பொருளின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்திய நாட்டவரான சுஹாஷ் பலேப் கார் மூலம் இந்த இயற்கை விவசாயம் முதன் முதலில் உலகில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், அங்கு உயிரியல் இல்லாத இயற்கை அல்லாத பசளைகளும் விவசாய நிலங்களுக்கு பொருந்துகின்றன.

வடமத்திய மாகாண விலங்கு மற்றும் சுகாதார திணைக்களத்தின் மூலம் விவசாயிகள் பயிற்றுவிக்கப்படுவார்கள். தற்போது 1500 விவசாயிகளுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.விவசாய பயிற்றுவிப்பாளர்கள், கால்நடை அபிவிருத்தி ஆலோசகர்கள் இவர்களுக்கான பயிற்சியினை வழங்கி வருகின்றனர். இதற்காக 155 இலட்சம் ரூபாவும் இத்திட்டத்திற்கு 650 இலட்சம் ரூபாவும் வழங்கப்பட்டுள்ளது.

வடமத்திய மாகாண மக்கள் மத்தியில் பரவி வரும் சிறுநீரக நோய், புற்றுநோய் நோய் ஆபத்துகளை இயற்கை திட்டத்தின் மூலம் குறைப்பதே மற்றுமொரு எதிர்பார்ப்பாகும்.

Related posts

error: Alert: Content is protected !!