பிரதானம் புதியவை விவசாயம் சார்ந்தது

தலைமை அதிகாரிகள் இல்லாமல் வடமாகாண விவசாயத் திணைக்களம் ஓய்வு பெற்றவர்களையா மீண்டும் மீண்டும் பணியமர்த்துவது???

வடமாகாண விவசாயத்துறையின் பங்களிப்பு இலங்கையின் மொத்த உற்பத்தியில் கவணிக்க தக்களவு பங்களிக்கிறது.விவசாயம் சார்ந்த விடயங்களை மாகாண ரீதியில் முன்னெடுப்பது மாகாண  விவசாயத்திணைக்களமாகும்.

மாகாண பணிப்பாளருடன் ஐந்து மாவட்டங்களுக்னுமாக பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர்கள் மாகாண விவசாயத்திணைக்கள கட்டமைப்பு உருவாக்கப்பட்டு இயங்குகிறது.

மாகாண பணிப்பாளர் மற்றும் பிரதிமாகாண விவசாயப்பணிப்பாளர்கள் பதவியானது இலங்கை விவசாய நிர்வாக சேவை பரீட்சை மூலம் உள்வாங்கப்படுகிறார்கள்.

சரி விவசாயத் திணைக்களத்தில் தலைமை அதிகாரிகளாக ஓய்வு பெற்றவர்களை மீண்டும் மீண்டும் பணியமர்த்துவதற்கு காரணம் என்ன என்று இப்போது பார்ப்போம்.

முன்னர் குறிப்பிட்டது போல இந்த நியமனங்கள் பரீட்சை நடாத்தப்பட்டு பெறுபேறுகள் அடிப்படையில் நியமிக்கப்படுகிறார்கள்.

இந்த இலங்கை விவசாய நிர்வாக சேவை பரீட்சை நடாத்தப்பட்டு பல வருடங்களாகின்றன.பரீட்சை தொடர்பான பல முரண்பாடுகள் கானப்படுவதுடன் நீதிமன்றம் வரை வழக்கும் தொடரப்பட்டு இருக்கிறது.

என்ன தான் பிரச்சனை???

இலங்கை நிர்வாக சபையின் கீழ் நடாத்தப்படும் பல பரீட்சைகள் திறந்த மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட பரீட்சைகளாக நடாத்தப்படுவது வழமை.

திறந்த பரீட்சாத்திகள் பட்டத்துடன்   பரீட்சை எழுத அணுமதிக்கப்படுவார்கள்.திறந்த பரீட்சாத்திகளுக்கு  அதிக வீத நியமனங்கள்(குறைந்தது 60 வீதம் வரை) கிடைக்கும் மட்டுப்படுத்தப்பட்ட பரீட்சாத்திகளுக்கு தொழில் அனுபவம் வருடங்களுடன் பரீட்சை எழுத அணுமதிக்கப்படுவார்கள்.மட்டுப்படுத்தப்பட்ட பரீட்சாத்திகளுக்கு கூடியது 40 வீதம் வரை) கிடைக்கும்

விவசாயத்திணைக்களத்தினைப் பொறுத்தவரை விவசாயப்பட்டதாரிகள் மிக குறைவு டிப்ளோமாதாரிகளே அதிகம் காணப்படுகிறார்கள்.

அதனால் திறந்த போட்டிப்பரீட்சைதாரிகளது எண்ணிக்கையை முன்னனைய காலத்தில் வழக்குப்பதிவு செய்து 60 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக்கிகொண்டார்கள் அதேபோல் மட்டுப்படுத்தப்பட்ட பரீட்சாத்திகளுக்கு  40 சதவீத நியமனத்திலிருந்து 50 சதவீத நியமனத்தைப்பெற்றுக்கொண்டார்கள்.

இதன் பின்னரும் பரீட்சை நடாத்தப்பட தீர்மானிக்கப்பட்ட போதும் பரீட்சை நடாத்தப்படவில்லை.

மேற்குறித்த சிக்கல்தன்மையினாலேயே  பரீட்சை நடாத்தப்படாமல் விவசாயத்  திணைக்களத்தில் தலைமை அதிகாரிகளாக  ஓய்வு பெற்றவர்களை மீண்டும் மீண்டும்  பணியமர்த்தப்படுகிறார்கள்.

ஓய்வு பெற்றவர்களை மீண்டும் மீண்டும்  பணியமர்த்துவதால் என்ன பிரச்சனை
  • வயது முதிர்ந்தவர்களை அடுத்தடுத்து ஒப்பந்த அடிப்படையில் நியமிப்பதால் பரீட்சை பிற்போடப்படுகிறது.
  • வயது முதிர்ந்தவர்களை அடுத்தடுத்து ஒப்பந்த அடிப்படையில் நியமிப்பதால் பரீட்சை பிற்போடப்படுகிறது பரீட்சை பிற்போடப்படுகின்ற போது பரீட்சை மூலமான சித்தியடையாதவர்களை அணுபவ ரீதியில் உள்ளவர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.
  • முக்கியமான பாரிய செயற்றிட்டங்களில் கைiயாப்பமிடும் சந்தர்ப்பங்களில் தவறுகள் ஏற்படுமாயின் அது பாரிய பிரச்சனைகளை ஏற்படுத்த கூடும்.

ஓய்வு பெற்றவர்களையும் அதிக காலம் வேலையில் வைத்திருக்க முடியாததாகையால் தற்போது மன்னார் வவுனியா கிளிநொச்சி முல்லைத்தீவு ஆகிய நான்கு மாவட்டங்களிலும் தலைமை அதிகாரிகள் இல்லாமலே இருக்கிறது.இதற்கான தீர்வு விரைவில் முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கலாம்

இந்த தகவல் உங்களுக்கு பயனுடையதாக இருப்பின் எமது கருத்துக்கள் உங்களுக்கு பயனுடையதாக இருகந்தால் அது பிறருக்கும் பயன்தரும் என்று நீங்கள் கருதினால் பிறருடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

கருத்துக்களில் தவறு இருப்பின் கொமண்ட செய்யவும்.

எமது தளத்தில் லொக் இன் செய்யாமலேயே கொமண்ட செய்யலாம்.

Related posts

error: Alert: Content is protected !!