ஆய்வுச் சுருக்கம்
ஆய்வுக்கான முதன்மைத்தகவல்கள் 48 வினாக்கொத்தினது வினாக்கள் மற்றும் நேரடியாக தனிப்பட்ட முறையில் மீனவர்களிடம் பேட்டி கண்டு பெறப்பட்டது.இதன்படி ஆய்வில் பங்கு பற்றியவர்கள் நண்டு மீனவர்கள் நண்டு சிறு விற்பனையாளர்கள் ஏலமிடுபவர்கள் மொத்தவியாபாரிகளாவர். இவர்களின் வயதுகளின் சராசரி முறையே 43.3 வருடங்கள் 47.5 வருடங்கள் 33 வருடங்கள் மற்றும் 35.6 வருடங்கள் ஆகும்.
இவர்களில் 20 சதவீதமான நண்டு மீனவர்கள் மற்றும் 12.5 சதவீதமான நண்டு சிறு விற்பனையாளர்கள் ஆரம்ப கல்வியை மட்டுமே பெற்றுள்ளனர்.(தரம் 1 தொடக்கம் தரம் 5) ஆயினும் ஏலமிடுபவர்கள் மற்றும் மொத்தவியாபாரிகள் அனைவரும் இரண்டாம் நிலைக் கல்வியை முடித்துள்ளார்கள்
20.8 சதவீதமான நண்டு மீனவர்கள் மாத்திரமே சொந்தமாக நண்டு வாடிகளை கொண்டள்ளனர்.சொந்தமாக நண்டு வாடி வைத்திருத்தல் மற்றும் கல்விக்கும் அவர்களது சம்பளத்திற்கும் நேரடி தொடர்பை காண முடிகிறது.
நண்டு மீனவர்களது வருடாந்த சம்பளம் 180000 இலிருந்து 600000 வரை வேறுபடுகிறது.அதே போல் மாதத்திற்கு 212.8 கிவோ நண்டே அறுவடை செய்யப்படுகிறது.குடிபோதைப் பழக்கம் முறையற்ற நிதி கையாளுகை முறையற்ற கமிவு முகாமைத்துவம் போன்றன இப்பகுதியில் காணப்படும் பிரதான பிரச்சனைகளாகும்
அறிமுகம்
நண்டுகளுக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அதிக நுகர்வுத் தேவை உள்ளதால் அதிக விலை கிடைக்கிறது. போர்ச்சுனஸ் பெலஜிகஸ் மற்றும் ஸ்கில்லா செர்ராடா ஆகியவை பொருளாதார ரீதியாக முக்கியமான நண்டு இனங்கள் ஆகும்இ அவை யாழ்ப்பாணத்தில் பிடிபடுகின்றன.யாழ்ப்பாண கடலோரப் பகுதிகளிலும் குறிப்பாக யாழ்ப்பாணக் கழிமுகப்பகுதியிலும் மற்றும் குளங்களிலும் காணப்படுகின்றன. சுற்றுச்சூழல் சமநிலையில் நண்டுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன மற்றும் அவை கடலோர உணவு வலையமைப்பில் ஒரு முக்கிய அங்கமாகும்.
யாழ்ப்பாணத்தில் நண்டு மீன்பிடித்தல் தொழிலானது பழமையானது.அதே நேரத்தில் எளிய தொழில் நுட்பம் குறைந்த முதலீடு மற்றும் அதிக இலாபம் காரணமாக இந்த தொழில் சிறு மீனவர்களிடையே மிகவும் பிரபலமானது. யாழ்ப்பாணத்தில் நண்டு மீன் பிடித்தல் என்பது முக்கியமாக உப்பு வளங்களிலிருந்து நண்டுகளைப் பிடிப்பதும் உள்ளூர் மற்றும் ஏற்றுமதி சந்தைகளில் உயிருடன் அல்லது உறைந்த பொருளாக விற்பதும் ஆகும் அத்துடன் அந்நிய செலாவணி சம்பாதிக’கின’ற தொழிலுமாகும்.. யாழ்ப்பாணத்தில் உள்ள கணிசமான எண்ணிக்கையிலான மீனவர்கள் வர்த்தகர்கள் மற்றும் டிரான்ஸ்போர்ட்டர்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நண்டு மீன்வளத்தில் ஈடுபட்டுள்ளனர்
ஆய்வின் நோக்கங்கள்
• நண்டு மீனவர்கள் மற்றும் சந்தைப்படுத்துபவர்களின் பொதுவான பின்னணி மற்றும் சமூக-பொருளாதார நிலையை கண்டறிவதே இந்த ஆய்வின் நோக்கங்கள் ஆகும்
• நண்டு அறுவடை மற்றும் செயலாக்க விவரங்களை தீர்மானிக்க மற்றும் வாழ்வாதாரம் தொடர்பான பிரச்சினைகளை அடையாளம் காண அங்கீகரிக்கப்பட்ட பிரச்சினைகளை சமாளிக்க பொருத்தமான பரிந்துரைகளை முன்மொழிய இந்த ஆய்வு உதவும்
• இந்த ஆய்வின் முடிவுகள் கொள்கை வகுப்பாளர்களுக்கு உரிய தகவல்களை தருவதோடு நண்டு மீனவ சமுதாயத்தினது வளர்ச்சிக்கும் இந்த சமூகத்தின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்காக வாழ்வாதார மேம்பாட்டு அணுகுமுறைகளை அடையாளம் காண உதவும்.
ஆய்வில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் மற்றும் ஆய்வு முறை
நாவந்துறை மீன்பிடி கிராமத்தில் மார்ச் 2012 முதல் பிப்ரவரி 2014 வரை வினாக்கொத்து மற்றும் நேரடி நேர்காணல் மூலம் ஆய்வு நடத்தப்பட்டது.கிராமத்தின் நெட்டாங்கு மற்றும் அகலாங்குகள் முறையே 80° 00′ E , 9°40′ N
ஆய்வு செய்யப்படும் இடத்தின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதற்காக எழுந்தமானமாக வேறுபட்ட மீனவ சமூகத்தைச் சேர்ந்த பல்வேறு வகை மக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த ஆய்வில் முழு நேர நண்டு மீனவர்களின் 30 குடும்பங்கள் 8 சில்லரை வியாபாரிகளின் குடும்பங்கள் மொத்த வியாபாரிகளின் 5 குடும்பங்கள் மற்றும் 5 ஏலதாரர்களின் குடும்பங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.
ஆய்வுக்காக முதன்மை மற்றும் இரண்டாம் நிலை தரவு சேகரிக்கப்பட்டது. முன்கூட்டியே சோதிக்கப்பட்ட கேள்வித்தாள் மற்றும் தனிப்பட்ட நேர்காணல்கள் மூலம் மீனவர்கள்இ வர்த்தகர்கள் சில்லறை விற்பனையாளர்கள் மொத்த விற்பனையாளர்கள் ஏலதாரர்கள் மற்றும் கிராமத்தில் வசிப்பவர்களுடன் குழு விவாதங்கள் மூலம் முதன்மைத் தகவல்கள் சேகரிக்கப்பட்டன. முறையான கள அவதானிப்புகள் மூலம் கூடுதல் தகவல்கள் சேகரிக்கப்பட்டன.
கேள்விகளில் தனிப்பட்ட தகவல் (வயது கல்வி மதம் சுகாதாரம் மற்றும் குடும்ப அளவு) மீன்பிடி தகவல் (கைவினை வகை உரிமை கியர் வகை மற்றும் அறுவடை அளவு) பொருளாதார தகவல் (தொழில் வருமான ஆதாரங்கள் தினசரி செலவு கடன் வசதிகள்) சந்தைப்படுத்தல் முறை (சேகரிப்பு போக்குவரத்து மற்றும் விற்பனை அமைப்பு) அத்துடன் தற்போதைய பிரச்சினைகள் போன்றன கேட்கப்பட்டன.
மீன்பிடி மற்றும் நீரியல் வள அமைச்சகம் (MOFAR), மீன்வளத் துறை மாவட்ட அலுவலகம், யாழ்ப்பாணம், மாவட்டச் செயலகம், தொடர்புடைய கிராம அலுவலர் அலுவலகங்கள் மற்றும் தொடர்புடைய இணைய தளங்களில் இருந்து இரண்டாம் தரவுகள் சேகரிக்கப்பட்டன. வினாத்தாளில் இருந்து சேகரிக்கப்பட்ட தரவு SPSS (சமூக அறிவியலுக்கான புள்ளிவிவர தொகுப்பு) மூலம் பகுப்பாய்வு செய்யப்பட்டது.)
ஆய்விலிருந்து முடிவுகள் மற்றும் விவாதம்
நண்டு-மீனவர்களின் சமூக-பொருளாதார பண்புகள்நாவந்துறை மீனவ கிராமத்தில் 425 மீனவ குடும்பங்கள் உள்ளன இதில் 2152 பேர் அடங்குவர் உறுப்பினர்கள் (ஆண்கள் மற்றும் பெண்கள்)அவர்கள் அனைவரும் தமிழர்களாக இருக்கின்ற அதே வேளை அவர்களில் 52.1மூ கிறிஸ்தவர்கள் மற்றவர்கள் இந்துக்கள். இந்துக்கள் வெள்ளிக்கிழமைகளிலும் கிறிஸ்தவர்கள் ஞாயிற்றுக்கிழமையிலும் மீன்பிடித்தலைத் தவிர்க்கின்றனர்.சுகாதார வசதிகள் மோசமாக உள்ளது. இந்த பகுதியில் கிணற்று நீர் குடிக்க பயன்படுத்தப்படுவது இல்லை உப்பு நீர் ஊடுருவியதால். யாழ்ப்பாண மாநகராட்சியில் இருந்து குடிநீர் வழங்கப்படுகிறது
வயது
நண்டு மீனவர்கள் சில்லறை விற்பனையாளர்கள் ஏலதாரர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்களின் சராசரி வயதுகள் முறையே 43.3 47.5 33.0 மற்றும் 35.6 ஆண்டுகள் ஆகும்.
ஏலதாரர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள் ஏனெனில் படித்த இளைஞர்கள் பெரும்பாலும் வர்த்தகம் மற்றும் மொத்த நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டுகின்றனர் மற்றும் பெரும்பாலான சில்லறை விற்பனையாளர்கள் (62.5மூ) பெரியவர்கள். நண்டு மீனவர்களில்இ கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு 45 வயதுக்கு மேற்பட்டவர்கள்.நண்டுபிடித்தலுக்காக இளைஞர்கள் மற்றும் படித்தவர்கள் குறைவான ஆர்வத்தை இது குறிக்கிறதுஆயினு மீன்பிடித்தல் மீன்பிடி திறன் அவர்களின் உடல் தகுதியைப் பொறுத்தது.
குடும்ப அளவு
நண்டு மீனவர்கள் சில்லறை விற்பனையாளர்கள் ஏலதாரர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்களின் சராசரி குடும்ப அங்கத்தவர்களது எண்ணிக்கை முறையே 5 5 4 4 ஆகும்.
இவர்களில் நண்டு மீனவர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களின் குடும்ப அளவுகள் ஒப்பீட்டளவில் அதிகமாக இருந்தன. நண்டு மீனவர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களை விட மொத்த விற்பனையாளர்கள் மற்றும் ஏலதாரர்கள் இளையவர்கள்
கல்வி நிலை
பொதுவாக மீனவர்களின் கல்வி நிலை நாட்டின் சராசரி கல்வியறிவு விகிதத்தை விட குறைவாக உள்ளது. பெரும்பாலான குழந்தைகள் க.பொ.த சாதாரண தரத்திற்கு மேல் படிக்கவில்லை.எனினும் பெண்கள் க.பொ.த உயர்தரம் வரை படித்தவர்கள் மற்றும் உற்பத்தி சார்ந்த தொழில் மையங்கள் பிரதேச செயலகங்கள் மற்றும் சமுர்த்தி அலுவலகங்களில் பணியாற்றுகின்றனர்.இவர்களில் 20 சதவீதமான நண்டு மீனவர்கள் மற்றும் 12.5 சதவீதமான நண்டு சிறு விற்பனையாளர்கள் ஆரம்ப கல்வியை மட்டுமே பெற்றுள்ளனர்.(தரம் 1 தொடக்கம் தரம் 5) ஆயினும் ஏலமிடுபவர்கள் மற்றும் மொத்தவியாபாரிகள் அனைவரும் இரண்டாம் நிலைக் கல்வியை முடித்துள்ளார்கள்.மொத்த விற்பனையாளர்கள் ஏலதாரர்கள் நண்டு மீனவர்களை விட உயர் கல்வி பெற்றுள்ளனர்.
மாத அறுவடை
மாதாந்தமாக 25 முதல் 500 கிலோ வரை நண்டு அறுவடை செய்யப்படுகிறது.சராசரியாக 212.8 கிலோ அறுவடை செய்கின்றன அதேவேளை 50சதவீதமான நண்டு மீனவர்கள் மாதத்திற்கு 200 கிலோ இற்கு மேல் அறுவடை செய்கின்றனர். மீனவ சமுதாயத்தின் மாதாந்த வருமானம்ஏறக்குறைய அனைத்து கிராம மக்களும் மீன்பிடித்தலை தங்கள் முக்கிய வருமான ஆதாரமாக நம்பியுள்ளனர். சிலர் முழுநேர அல்லது பகுதிநேர வேலைகளாக தச்சுஇ கொத்து மற்றும் தொழிலில் ஈடுபடுகின்றனர்
நண்டு மீனவர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மற்றவர்களை விட (மொத்த விற்பனையாளர்கள் மற்றும் ஏலதாரர்களை விட) ஒப்பீட்டளவில் குறைந்த மாத வருமானத்தை சம்பாதிக்கின்ற அதேவேளை ஏலதாரர்கள் அதிக வருமானம் ஈட்டுகிறார்கள் ஏனெனில் பிடிக்கப்படுகின்ற நண்டுகள் மொத்த அளவாக ஏலம் விடப்படுகிறது.
சில ஏலதாரர்கள் வேறு வகையான பகுதி நேர வேலைகளிலும் ஈடுபடுகின்றனர்.ஏனென்றால் அவர்களுக்கு போதுமான நேரம் இருக்கின்றது. மொத்த விற்பனையாளர்கள் முக்கியமாக ஏற்றுமதி சந்தையை கையாளுகின்றனர் இதனால் அதிக வருமானம் கிடைக்கின்ற அதேசமயம் நண்டு மீனவர்கள் மீன்பிடியில் தீவிரமாக ஈடுபடுகின்றனர்
மற்ற வருமானம் ஈட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட போதுமான நேரம் இல்லை. எனவே அவர்கள் பிடிப்பை மட்டுமே சார்ந்திருக்க வேண்டியிருந்தது.எந்தவொரு வாழ்வாதாரத்தின் நிலைத்தன்மைக்கு வருமானம் மிக முக்கியமான காரணியாகும்.நண்டு மீனவர்களைப் பொறுத்தவரையில் 58.3% மீன்பிடித்தலை மட்டுமே அவர்களின் முக்கிய வருமான ஆதாரமாக நம்பியுள்ளனர் நண்டு மீனவர்களின் ஆண்டு வருமானம் ரூ.180 000.00 மற்றும் ரூ. 600 000.00.
கல்வி நிலைக்கும் மாத வருமானத்துக்குமான தொடர்பு
இளநிலை இடைநிலைக் கல்வியை மட்டுமே முடித்த மீனவர்களில் 42.4 சதவீதமானோர் மாத சம்பளமாக 20 000.00 அல்லது அதற்கும் குறைவாக சம்பாதிக்கின்றனர். அதேசமயம் உயர் கல்வி பெற்ற நண்டு மீனவர்கள் (93.3 சதவீதமானோர்) மாதாந்திர வருமானமாக 20,000.00 ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கின்றனர்.
மீனவர்களிடம் காணப்படும் விலை உயர்ந்த பொருட்கள்
நண்டு மீனவர்களின் விலையுயர்ந்த பொருட்களாக கைவினைப்பொருட்கள் கியர் மிதவைகள் எரிபொருள் மற்றும் தூண்டில்கள் அடையாளம் காணப்பட்டன. செலவு அடிப்படையில் மூலதனசெலவு செயல்பாட்டு செலவு என பிரிக்கப்பட்டது.
• கைவினைகளுக்கான செலவு,கியர், மிதவைகள் மூலதன செலவுகளாக அடையாளம் காணப்பட்டன. சராசரி மூலதன செலவு ரூ.ஆண்டுக்கு 11இ000.00 முதல் 95,000.00 வரை வேறுபட்டு காணப்படுகிறது
• முக்கிய செயல்பாட்டு செலவுகள் எரிபொருள் மற்றும் தூண்டில் ஆகும்
கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர்
இந்த பகுதியில் 3 மீன்வள கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. அதே நேரத்தில் 70.8 சதவீதமானோர் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர்களாக இருக்கின்றனர்.
மீன்பிடி காலம்
நண்டு மீனவர்களில் சுமார் மூன்றில் இரண்டு பங்கினர் ஜூன் முதல் ஆகஸ்ட் காலம் பருவமில்லாத காலம் என்று குறிப்பிட்டுள்ளனர்.நண்டுகள் குறைவாக கிடைப்பதானாலும் பருவமழை மற்றும் நீரால் இவை பாதிக்கப்படுகிறது.ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்கு நண்டு மீனவர்கள் பருவகால விளைவுகளால் தங்கள் வாழ்வாதாரத்தில் செல்வாக்கு இல்லை எனக் குறிப்பிட்டுள்ளனர்.
பொதுவாக இலங்கை மீன்வளம் இரண்டு பருவ மழைக்காலங்களால் பாதிக்கப்படுகிறது.வடமேற்கு பருவமழை முதன்மையாக நவம்பர் முதல் பிப்ரவரி வரையும் மற்றும் தென்மேற்கு பருவமழை முதன்மையாக மே முதல் ஆகஸ்ட் வரையும் ஆகும்
நண்டு முட்டையிடுவது பற்றிய அறிவு
நாவந்துறை பகுதியில் 27.3 சதவீதமானோர் நண்டு மீனவர்கள் முட்டையிடுதல் பற்றிய சரியான அறிவைப் பெற்றிருந்தனர்.எஞ்சியோருக்கு நண்டுகளின் முட்டையிடும் காலம் பற்றிய எந்த யோசனையும் இல்லை. 90 சதவீதமான மீனவர்கள் பெர்ரி நீல நீச்சல் நண்டுகளை பிடிக்கின்றனர்.அதிக விலை மற்றும் தேவை காரணமாக முட்டையிடும் பருவத்திலும் நண்டுகளை பிடிக்கின்றனர் இதில் 10 சதவீதமானோர் மட்டுமே முட்டையிடும் பருவ நண்டுகளை கடலில் விடுகின்றனர்
முடிவுகளும் பரிந்துரைகளும்
நண்டுகள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அதிக விலை பெறுகிறது. இந்த பகுதியில் வசிக்கும் பெரும்பாலான நண்டு மீனவ குடும்பங்கள் திருப்திகரமான பொருளாதார பின்னணியில் உள்ளனர்.மேலும் படகுகளின் உடைமை மற்றும் கல்வி நிலை மீனவர்களின் வருமானத்துடன் கணிசமாக தொடர்புடையது.
- குறைந்த பொருளாதார தரமுள்ள மீனவர் குடும்பங்கள் மீன்வள விரிவாக்க உத்தியோகத்தர்களால் அடையாளம் காணப்பட வேண்டும்.
- இந்த பகுதியில் செயல்படும் மீன்வள கூட்டுறவு சங்கத்தின் மூலம் அரசு மற்றும் அல்லது அரசு சாராத நிறுவனங்கள் குறைந்த வட்டி கடன் வசதிகளை அறிமுகப்படுத்த வேண்டும்.
மீன் பதப்படுத்தல் துறையில் பெண்களை ஊக்குவிக்க வேண்டும். - தேசிய நீர் வள ஆராய்ச்சி மற்றும் மீன் வளத்தின் அபிவிருத்தி முகமை ((NARA) உதவியுடன் மீன்வளத்தை ஊக்குவிக்க வேண்டும்
- மீன்வள மற்றும் நீர் வள அமைச்சகம் மீனவ சமூகத்திற்கு மாற்று வேலை வாய்ப்புகளை வழங்குதல் வேண்டும்.இது இந்த பகுதியில் உள்ள மீனவர் குடும்பங்களின் பொருளாதார தரத்தை உயர்த்த வழிவகுக்கும்
தமிழில் ரவிநாதன் ரஜீவன்
விவசாயப் பட்டதாரி