வட மாகாணத்துக்கான விவசாய கள நிலவரம்
இந்த பகுதியினுடாக வடமாகணத்தில் நடைபெற்ற நடைபெறுகின்ற மற்றும் நடைபெறவுள்ள இந்தவாரத்துக்குள் விவசாயம் சார்ந்த நடவடிக்கைகளை தொகுத்து வழங்கியுள்ளோம்.
யாழ்ப்பாணம்
- முன்னைய வாரங்களில் பெய்த மழை சின’ன வெங்காயத்தில் பங்கசு நோயை ஏற்படுத்தி பாரிய பிரச்சனையை ஏற்படுத்தி இருந்தது.
- தம்புள்ள சந்தையில் பிறநாட்டு உதவியுடன் பெறப்பட்ட வெங்காய இறக்குமதி பொருளாலும் யாழ்ப்பாண வெங்காய விலை குறைந்து காணப்பட்டது.
- வெங்காயத்தின் விலை இறக்கம் இரசாயணப் பொருட்களின் தட்டுப்பாடு நோய்தாக்கம் போன்ற காரணிகளால் 10 சதவீதமான வெங்காய உற்பத்தி குறைய வாய்ப்புள்ளது
- மற்றும் சின்ன வெங்காயம்இ குரக்கன் செய்கைக்காக நிலப்பண்படுத்தல் மற்றும் நாற்றுமேடை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுள்ளது.
மன்னார்
நெற்செய்கை
- கட்டுக்கரை குளத்திற்கு கீழான சிறுபோகத்திற்கான ஈவு 12 இற்கு ஒன்றாக பிரிக்கப்பட்டு கடந்த வாரத்தில் இடம்பெற்ற கட்டுக்கரை குளக் கூட்டத்தில் 10 இற்கு ஒன்றாக விவசாயிகள் கேட்டுக்கொண்டனர்.
- ஏப்ரல் 9 ஆம் திகதி சிறுபோக செய்கை ஆரம்பிக்கப்பட உள்ளது.
சிறுதானிய செய்கை
- விவசாயத்திணைக்களத்தினால் சிறுதானிய பயறு விதை முழு விலைக்கு வழங்கப்பட்டு வருகிறது.கடந்த வாரத்தில் பயறு விதைக்கு தட்டுப்பாடு இருந்தது குறிப்பிடத்தக்கது.
- உழுந்துக்கான விதை கிடைக்க கூடிய தன்மை அதிகமாகவே உள்ளது.
- விதைகள் விவசாயத்திணைக்களத்தில் ஒரு இலட்சம் கிலோ உழுந்து விதை உள்ளது.
முல்லைத்தீவு
- முல்லைத்தீவில் நெற்செய்கை ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது.
- முத்தையன்கட்டு தண்ணிமுறிப்பு போன்ற பகுதிகளில் ஒருமாதப்பயிராகவும் விசுவமடு பகுதியில் நான்கு கிழமைப்பயிராகவும் நெல்பயிர்காணப்படுகிறது
- நிலக்கடலை அறுவடைக்கு செய்யப்பட்டு வருகிறது
வவுனியா
சிறுபோக நெல் விதைப்பு 100 சதவீதம் நிறைவடைந்துள்ளது.
சிறுதானியச்செய்கை
நிலக்கடலை பயறு எள்ளு போன்றன செய்கை பண்ணப்பட்டு களத்தில் வேறுபட்ட வயது நிலைகளில் உள்ளது.
மரக்கறிகளில் கத்தரி மிளகாய் தக்காளி போன்ற பயிர்கள் செய்யப்பட்டு வருகிறது.
கிளிநொச்சி
சிறுபோக நெல் விதைப்பு
100 சதவீதம் நிறைவடைந்துள்ளது.
சிறுதானியச் செய்கை பெரும் அளவில் இன்னமும் ஆரம்பிக்கப்பட இல்லை.
பொதுவான விடயங்கள்
- .பெற்றோலியத்தை பெறுவதில் இப்போதும் விவசாயிகள் பிரச்சனையை எதிர் கொள்கிறார்கள்.
- அசேதன பசளை மற்றும் விவசாய இரசாயணங்களது கிடைக்கும் அளவு இதுவரை கேள்விக்குறியாக உள்ளது.
மேலே குறிப்பிடப்பட்ட தகவல்கள் யாவும் விவசாயிகள் அமைப்புத்தலைவர்கள் அரச உத்தியோகத்தர்கள் மூலம் பெறப்பட்டு உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் ஆகும்
எமது இந்த தகவல்களை மேலும் உறுதிப்படுத்த எமக்கு உதவ கூடியவர்கள் தொடர்புகொள்ளவும்.தொடர்புக்கு 0772984757