வானிலைத் தகவல்கள்

2023 ஏப்ரல் 23 ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு

weather-forecast

2023 ஏப்ரல் 23 ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு

கிழக்கு, ஊவா, வடக்கு, வடமத்திய, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் பல இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும்.

பிற இடங்களில் பிற்பகல் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படும் பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

மழையின் நிலை:
புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
காற்று:
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்று தென்மேற்கு திசையாக வீசுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு (20-30) கிலோமீற்றர் வரை காணப்படும். காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு (40-45) கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும்.
கடல் நிலை:
காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாக காணப்படும். புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் மிதமான நிலை காணப்படும்.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புக்கள் சிறிதளவு காணப்படும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன் கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

பிரதானநகரங்களுக்கானவானிலைமுன்னறிவித்தல்                                                                திகதி : 2023-04-23
நகரம் வெப்பநிலை (0C) சாரீரப்பதன் (%) வானிலை
உச்ச குறைந்த உச்ச குறைந்த
அனுராதபுரம் 36 25 95 60 பி.ப. 2.00 மணிக்குப்பின்னர்மழைஅல்லதுஇடியுடன்கூடியமழைபெய்யும்
மட்டக்களப்பு 33 26 90 70 சிறிதளவில்மழைபெய்யும்
கொழும்பு 33 26 90 65 அடிக்கடிமழைபெய்யும்
காலி 32 26 90 75 அடிக்கடிமழைபெய்யும்
யாழ்ப்பாணம் 35 24 90 65 சிறிதளவில்மழைபெய்யும்
கண்டி 32 22 95 60 பி.ப. 2.00 மணிக்குப்பின்னர்மழைஅல்லதுஇடியுடன்கூடியமழைபெய்யும்
நுவரெலியா 23 12 95 60 பி.ப. 2.00 மணிக்குப்பின்னர்மழைஅல்லதுஇடியுடன்கூடியமழைபெய்யும்
இரத்தினபுரி 34 24 95 65 பி.ப. 2.00 மணிக்குப்பின்னர்மழைஅல்லதுஇடியுடன்கூடியமழைபெய்யும்
திருகோணமலை 37 25 85 60 சிறிதளவில்மழைபெய்யும்
மன்னார் 34 26 90 65 பி.ப. 4.00 மணிக்குப்பின்னர்மழைஅல்லதுஇடியுடன்கூடியமழைபெய்யும்

 

Related posts

error: Alert: Content is protected !!