இலங்கை சர்வதேசம் திட்டங்கள் திட்டவரைபுகள் பிரதானம் புதியவை

2023 வரவு செலவுத் திட்டமும் இலங்கை விவசாயமும்

இலங்கை மக்கள் மற்றும் இலங்கையின பொருளாதார சிக்கல்கள் பற்றி இக்கறை கொண்டுள்ள பரலது கவனம் 2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் ஆகும், 2023 ஆம் நிதியாண்டுக்கான முன் கூட்டிய ஒதுக்கீட்டு சட்ட மூலம், 2023 வரவு செலவுத் திட்டமானது நிதி அமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பாராளுமன்றில் முன் வைக்கப்பட்டுள்ளது. இது நாட்டின் 77 ஆவது பாதீடு என்பதுடன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன் வைக்கப்படும் முதலாவது பாதீடாகும். 2023 ஆம் நிதியாண்டுக்கான பாதீட்டில் அரசாங்கத்தின் செலவீனத்திற்கு 7,885 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 21 ஆம் நூற்றாண்டின் நவீன உலகிற்கு ஏற்ற புதிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் பணி, 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின் ஊடாக ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் நீண்டகால (2023-2048) அபிவிருத்தி, பிரபலமான தீர்மானங்களில் அன்றி, சரியான தீர்மானங்களை அடிப்படையாகக் கொண்டது.இளைஞர், யுவதிகளின் சிறந்த நாளைய தினத்திற்காக ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், பணிநிறுத்தங்கள் போன்ற பாரம்பரிய அரசியல் முறைகளைத் தாண்டி புதிய அணுகுமுறை மற்றும் புதிய வேலைத்திட்டம் மூலம் இளைஞர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற புதிய பொருளாதாரத்தை உருவாக்குவோம்.என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 8.3 வீதமாக உள்ள தேசிய மொத்த வருமானத்தை 2025 ஆம் ஆண்டில் 15 வீதமாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது

விவசாயத்துக்காக கொண்டு வரப்பட்ட முக்கிய தீர்மானங்கள்

 • விவசாயத்துறைக்கு தனியான சட்டம் நடைமுறைப்படுத்தப்படும். அதற்குள் தொழிற்சங்கங்கள், தனியார் உாிமையாளர்கள் ஆகியோர் உள்வாங்கப்படுவர். நவீன விவசாய ஏற்றுமதியை ஊக்குவிக்க எதிர்பார்த்துள்ளோம்.
 • எண்மாண(DIGITAL) தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்காக நிபுணர்கள் குழு அமைக்கப்படும்.
 • கறுவா உற்பத்தி மேம்பாட்டுக்கு தனியான திணைக்களம் ஸ்தாபிக்கப்பட்டு, அதற்காக 200 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
 • சுற்றுலாத்துறையை மேம்படுத்த புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. இந்தத்திட்டங்களுக்கு 50 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும்.
 • காலநிலை தொடர்பில் சர்வதேச பல்கலைக்கழகத்தை உருவாக்க 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

 • 2023-2032 காலப்பகுதியில் புதிய ஏற்றுமதிகளின் ஊடாக 03 பில்லியன் டொலர் வருடாந்த வருமான அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுகிறது.
 • அடுத்த 10 ஆண்டுகளில் ஆண்டுதோறும் 03 பில்லியன் டொலர்கள் அந்நியச் செலாவணியை நேரடி முதலீடாக பெறுவதற்கான திட்டங்கள் வகுக்கப்படும்.
 • உலகின் புதிய போக்குகளுக்கு ஏற்றவாறு புதிய பொருளாதார அடித்தளத்தை தயாரிக்க வேண்டும். தனிநபர் வருமானத்திற்கு ஏற்ற வாழ்க்கை முறைக்குப் பதிலாக இளைஞர்கள் எதிர்பார்க்கும் வாழ்க்கை முறைக்கு உகந்த வகையில் தனிநபர் வருமானத்தை அதிகரிப்பதற்கான புதிய பொருளாதார முறைமை அறிமுகப்படுத்தப்படும்.
 • உலகளாவிய போக்கைக் கருத்தில் கொண்டு, குறிப்பாக காலநிலை மாற்றம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தி, சமூக பொருளாதார மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும்.
 • சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமை மற்றும் நீலப் பொருளாதாரம் மற்றும் எண்மாண பொருளாதாரம் என்பன தொடர்பில் புதிய பொருளாதாரத்தின் கீழ் விசேட கவனம் செலுத்தப்படும்.
 • ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட போட்டித் தன்மை மிகு பொருளாதாரம் உருவாக்கப்படும.
 • தனியார் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கவும் புதிய தொழில் முயற்சியாளர்களை உருவாக்கவும் தேவையான வசதிகள் வழங்கப்படும்.

இந்த வரவு செலவு திட்டத்தால் விவசாயத்தில் ஏற்படும் மாற்றங்கள்

 • இயற்கை விவசாயத்துக்கு அதிக முன்னுரிமை அளிக்க படுவதுடன் செயற்கை பசளை பாவனை கட்டுப்படுத்தப்படும் மற்றும் இயற்கை பசளை பயன்படுத்தும்போது மானியம் வழங்கப்படும்.
 • மற்றும் விவசாயிகளுக்கு வெளிநாட்டு சந்தை வாய்ப்பு மற்றும் உள்ளாட்டு சந்தை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கப்படும் இதனால் விவசாயிகள் தமது உற்பத்திகளை இலகுவாக அதிகவிலைக்கு விற்பனை செய்யக்கூடியவாறு இருக்கும்.
 • வரவு செலவு திடடத்தின் மூலம் சந்தை போட்டித்த்தன்மை அதிகரிக்க வாய்ப்புக்கள் காணப்படுகிறது
 • .விவசாயத்துக்கு தேவையான புதிய தொழிநுட்பங்கள் அறிமுக படுத்த படும் மற்றும் புதிய விதை வர்க்கங்களுக்கும் சந்தைக்கு அறிமுகமாக இருக்கிறது இதனால் விவசாயிகளுக்கு இடையில் போட்டி தன்மை குறைவாக காணப்படுவதுடன் அதிக விளைச்சலையும் பெறமுடியும்.
 • விவசாயிகளை வெளிநாட்டு சந்தை வாய்ப்பை நேரடியாக ஏற்படுத்தி கூடுக அரசாங்கம் முயல்கிறது எது விவசாயிகளுக்கு கிடைத்த வாய்ப்பாக இருக்கிறது.
 • ஏற்றுமதி பயிர்கள் ஆன தேயிலை ரப்பர் கோப்பி கறுவா ஏலம் போன்ற பயிர்களை செய்யும் விவசாயிகளுக்கு பல சலுகைகள் வழங்க காத்து இருக்கிறது.
 • விவசாயிகள் வங்கியில் குறைந்த வட்டியில் கடனை பெற்று கொள்ள அரசாங்கம் முயற்சிகள் செய்கிறது.
 • மற்றும் காலநிலை தொடர்பான பல்கலைகழகங்களை உருவாக்கி காலநிலை தகவல்களை எவ்வாறு கையாள முயல்கிறது அரசாங்கம் இதனால் தொழில் வாய்ப்பு அதிகரிப்பதுடன் பல்கலை கலக்கம் செல்லும் மாணவர்கள் எண்ணிகை அதிகரிக்கப்படும் காலநிலை பல்கலைகழகம் மூலம் காலநிலை தகவல்களை முன் கூட்டியே துல்லியமாக அறிய செய்து விவசாயிகளை பாதுகாக்கிறது.
 • தென்னை பனை சார் உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி பொருட்களாக வெளிநாடுகளினுடாக அனுப்பி அதனுடாக இலங்கைக்கு அந்நியச் செலாவணியை நாட்டுக்கு கொண்டு வர முயல்கிறது.மற்றும் நாட்டுக்கு தேவையான உணவு பொருட்களை நாட்டிலே உற்பத்தி செய்யும் பொறிமுறையை கடைபிடிக்கும் மற்றும் இறக்குமதியை இயன்ற அளவுக்கு குறைக்க முயலும் அரசாங்கம் இதனால் உள்நாட்டு விவசாய பொருட்களுக்கு அதிக கேள்வி உருவாகும் ஏற்படும்.

கட்டுரையாக்கம்
uthayanan achsuthan

Related posts

error: Alert: Content is protected !!