மே.16.2023 வானிலை முன்னறிவிப்பு-Weather-forecast for May 16.2023
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும்.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு-weather-forecast
வங்காள விரிகுடா மற்றும் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் கடற்றொழில் மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபடும் போது கடற்படை மற்றும் மீனவ சமூகங்கள் அவதானமாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளது.
மழையின் நிலை:weather-forecast
புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
காற்று:weather-forecast
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்று தென்மேற்கு திசையிலிருந்து வீசுவதுடன் காற்றானது மணிக்கு (30-40) கிலோமீற்றர் வேகத்தில் காணப்படும். நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு (55-60) கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்.
கடல் நிலை:weather-forecast
தீவைச் சுற்றியுள்ள கடற்பரப்புகள் ஓரளவு கொந்தளிப்பாகவும், சில சமயங்களில் மிகவும் கொந்தளிப்பாகவும் இருக்கும்.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன் கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.
பிரதானநகரங்களுக்கானவானிலைமுன்னறிவித்தல் | திகதி : | 2023-05-15 | |||
நகரம் | வெப்பநிலை (0C) | சாரீரப்பதன் (%) | வானிலை | ||
உச்ச | குறைந்த | உச்ச | குறைந்த | ||
அனுராதபுரம் | 33 | 26 | 95 | 70 | பிரதானமாக சீரானவானிலை |
மட்டக்களப்பு | 36 | 26 | 90 | 55 | பிரதானமாக சீரானவானிலை |
கொழும்பு | 32 | 27 | 95 | 70 | அவ்வப்போது மழைபெய்யும் |
காலி | 31 | 28 | 90 | 75 | அவ்வப்போது மழைபெய்யும் |
யாழ்ப்பாணம் | 32 | 24 | 90 | 70 | பிரதானமாக சீரானவானிலை |
கண்டி | 31 | 23 | 95 | 65 | அவ்வப்போது மழைபெய்யும் |
நுவரெலியா | 21 | 14 | 95 | 70 | அவ்வப்போது மழைபெய்யும் |
இரத்தினபுரி | 33 | 25 | 95 | 70 | அவ்வப்போது மழைபெய்யும் |
திருகோணமலை | 34 | 26 | 90 | 60 | பிரதானமாக சீரானவானிலை |
மன்னார் | 32 | 29 | 95 | 80 | பிரதானமாக சீரானவானிலை |