பிரதானம் புதியவை

2023 சிறு போகத்தில்  பருவத்தில் யூரியா உரத்தின் விலை மேலும் குறைக்கப்படும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர

சிறு போகத்தில்  பருவத்தில் யூரியா உரத்தின் விலை மேலும் குறைக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
 சீன அரசாங்கம் அகுனகொலபலஸ்ஸ பிரதேசத்தில் விவசாயிகளுக்கு எரிபொருளை நன்கொடையாக வழங்கும் போது அவர் மேற்படி விடயத்தை பேசினார்.
 மேலும், விவசாயிகளுக்கு யூரியா மூட்டைகள் விலை குறைக்கப்படும் என்றும், அவை கடந்த விவசாய போகங்களில்  7,500 –  9,000 ரூபாக்களுக்கு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டவை எனவும் கூறினார்
 மேலும் இதுவரை அரசினால் வழங்கப்பட்ட பணம் கிடைக்காத விவசாயிகளுக்கு 1,500 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.  6,500 மில்லியன் அவர்களின் கணக்குகளில் ரூ.  ஏக்கருக்கு 10,000 ரூபா  ஏற்கனவே வங்கிவைப்பில் இடப்பட்டு விட்டது எனவும் கூறினார்
 இந்தச் சலுகைகள் அனைத்தும் விவசாயிகளின் உற்பத்திச் செலவைக் குறைப்பதற்காகவும், விவசாயிகள் மற்றும் நுகர்வோர் இருவரையும் பாதுகாப்பதற்காகவும் அரசாங்கத்தால் வழங்கப்பட்டவை என்று  அமைச்சர் கூறினார்.
ஆங்கில மூலம் –
 துர்க்காயினி பார்த்திபன்
தமிழில் – மகேஸ்வரன் ரஜிதன்

Related posts

error: Alert: Content is protected !!