விலை நிலவரம்

30.03.2023 வரையிலான தேங்காய் ஏல விலை

தேங்காய் ஏல விலை

கொழும்பு தேங்காய் ஏலம்

அனைத்து விற்பனையாளர்களும் நன்மை அடையும் பொருட்டு உரித்த தேங்காய் மற்றும் உரிக்காத தேங்காய்கான விலையை தென்னை அபிவிருத்தி அதிகாரசபை ஒவ்வொரு வியாழக்கிழமையும் கொழும்பு நகரில்  ஏலமுறை மூலம் விலை தீர்மானிக்கப்படுகிறது. இந்த ஏலம் தென்னை அபிவிருத்தி அதிகாரசபை உத்தியோகத்தரினால் அல்லது  உரிமம் பெற்ற ஏலதார அதிகாரிகளால் நடத்தப்படுகிறது

ஏலத்தில் போட்டி முறை  மூலம் தேங்காய் ஏலம் விடப்படுகின்றன. சப்ளையர் திருப்தி அடையும் அதிகபட்ச ஏலத்திற்கு தேங்காய் ஏலம் விடப்படுகிறது.

குளியாப்பிட்டிய தேங்காய் ஏலம்

ஒவ்வொரு மாதமும் 2வது செவ்வாய்க் கிழமை காலை 10.00 மணிக்கு குளியாப்பிட்டியில் உள்ள சிறிமதுர வரவேற்பு மண்டபத்தில் ஏலம் நடத்தப்படுகிறது

ஏல விற்பனை விலை மூலம் சாதாரண தென்னை பண்ணையாளர்கள் எவ்வாறு இலாபமடைவது

தென்னை பண்ணை வைத்திருப்பவர்கள் இந்த விலையை அறிந்து கொள்வதன் மூலம் மொத்த கொள்முதல் செய்பவர்களிடம் விலையை பேசி தீர்மாணிக்க முடியும்.

தேங்காய் விரைவில் பழுதடையும் பொருள் இல்லை என்பதால் ஏலவிலைத்தளம்பல்களை அணுசரித்து விற்பனை செய்யலாம்.

Auction Details – 2023
தேதி வழங்கப்படும் அளவு விற்கப்பட்ட அளவு (சராசரி விலை) ரூ./1000
 05/01/2023  800,438  655,086 82,452.09
12/01/2023 415,059 317,407 79,037.36
19/01/2023 538,269 422,970 84,116.85
26/01/2023 469,564 300,983 80,811.89
02/02/2023 593,513 370,006 75,396.69
09/02/2023 778,515 694,723 73,480.97
16/02/2023 339,874 298,128 80,736.72
23/02/2023 399,797 358,567 85,014.15
02/03/2023 711,308 579,801 84,355.08
09/03/2023 876,948 658,494 82,151.06
16/03/2023 574,807 416,815 82,260.58
23/03/2023 900,010 583,291 83,219..45
30/03/2023 1,122,984 780,932 78,225.84
Next Auction on ——06/04/2023

Related posts

error: Alert: Content is protected !!