கல்வி பிரதானம்

விவசாயப் பட்டம் படித்தால் என்ன வேலைக்கு போகலாம்

விவசாயப் பட்டம்  படித்தால் என்ன வேலைக்கு போகலாம்

இந்த கேள்வியை இரண்டு விதமான மக்கள் இரண்டு விதமாக பார்ப்பார்கள்.

1.பொதுவானவர்கள்

விவசாயம் படித்தால் விவசாயம் பார்க்கவேண்டியது தானே என்று ஒரு தொகுதி மக்கள் யோசிப்பார்கள்

சிலர் விவசாயம் படித்தால் என்ன வேலைக்கு போக முடியும் என்று யோசிப்பார்கள். 

2.விவசாயம் படித்தவர்கள்

விவசாயம் படித்தவர்கள் எவ்வாறு இதனை நோக்குவார்கள் என்றால்   நாம ஏன் விவசாயம் படிச்சம் என்டு நமக்கும் தெரியாது நமக்கு ஏன் விவசாயம் படிப்பிச்சவங்கள் என்று படிப்பிச்சவங்களுக்கும் தெரியாது.(இவ்வாறு  என்று நினைப்பவர்கள் இதனை மிக சாதாரணமாக கடந்து போவர்கள். அவர்கள் நிலைப்பாடும் சரியானது தான்).

ஏனென்றால் இலங்கையில் கற்ற கல்விக்கும் வேலைக்கும் சரியான தொடர்பு உண்டு  என்றால்  மருத்துவர்களை  மட்டுந்தான்  குறிப்பிட முடியும்.(சில மருத்துவர்கள் கடையும் நடத்துகிறார்கள், சில மருத்துவர்கள் இயற்கை விவசாயம் தொடங்கி விட்டார்கள்.) முன்னர் பொறியியல்  படித்தவர்கள் பொறியியலாளர் வேலையை  தான் செய்தார்கள். இப்போது அப்படி இல்லை. மீம்சு முதல் யூரிப் வரை பொறியலாளர்கள்  கிடைக்கும் எந்த வேலையையும் செய்ய தொடங்கி விட்டார்கள்.

சட்டத் தரணிகனைப் பொறுத்தரை காணிகள் தொடர்பாகவும் அரசியலிலும் அவர்களது பிற தொழில்கள்  சிறப்பாக நடக்கின்றன.

சரி விவசாயம் படித்தால் என்ன வேலைக்கு போகலாம் என்று பார்ப்பதற்கு முன் 

வேலை என்பது நமது முழுநாளையும் ஆக்கிரமிக்கும் விசயமாக இருக்க கூடாது.அது  நமது தனிப்பட்ட விடயங்கள் விருப்பு வெறுப்புகளுக்கு தடையாகவும் இருக்க கூடாது.

பின்வரும் தொழில்களை பட்டியலிட்டு இருக்கிறோம் அவற்றினை பார்வையிடுங்கள்.அதன் பின்னர் நீங்கள் என்ன வேலைக்கு செல்ல விரும்புகிறீர்கள் என கருத்துரைக்கவும்.

இந்த கட்டுரையானது www.agricultureinformation.lk  எனும் இனது பதிப்புரிமைக்குரியது இதனை எழுத்து வடிவம் மற்றும் ஒளி ஒலி வடிவங்களில் பயன்படுத்துவது பதிவு செய்யப்பட்ட தனியார் கம்பனிகளது சட்டத்தின்படி குற்றமாகும். www.agricultureinformation.lk ஆனது  greenlankamentors pvt ltd இனது ஒர்  தயாரிப்பாகும். 

அரசாங்க வேலைகள்

(விவசாயம் சாராது)

போட்டிப்பரீட்சை மூலம் கோரப்படும் பெரும்பாலாக  அரசாங்க வேலைகளுக்கு விண்ணப்பித்து பரீட்சை எழுதி சித்தியடைந்து   வேலையில் சேர்ந்து கொள்ள முடியும்.

  • ஆசிரியர்
  • அபிவிருத்தி உத்தியோகத்தர்
  • நிர்வாக சேவைகள்
  • திட்டமிடல் சேவைகள்  
  • விஞ்ஞான சேவைகள்
  • கல்வி நிர்வாக சேவைகள்
  • வெளிநாட்டு சேவைகள்
  • சுங்க சேவைகள் 
  • இறைவரி சேவைகள் 
  • பல்கலைக்கழக பதிவாளர் சேவைகள் 

போன்ற பரீட்சைகள் எழுதி சித்தியடைவதன் மூலம்

  1. பிரதேச செயலாளர் 
  2. உதவி பிரதேச செயலாளர்
  3. உதவி ஆணையாளர்
  4. உதவி அமைச்சு செயலாளர் என பல தரப்பட்ட பதவிகளில் பணியாற்ற முடியும்.

அரசாங்க வேலைகள்

(விவசாயம் சார்ந்தது)

விவசாய அமைச்சின் கீழ் காணப்படும் திணைக்களங்களது உத்தியோகத்தர் பதவிகளான

  • விவசாய போதனாசிரியர்
  • கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர்
  • செயற்றிட்ட உத்தியோகத்தர்
  • ஆராய்சி  உத்தியோகத்தர்
  • ஆராய்சி  அபிவிருத்தி உத்தியோகத்தர்
  • அபிவிருத்தி உத்தியோகத்தர்  போன்ற பதவிகளும் இலங்கை விவசாய சேவை பரீட்சை மூலம் பிரதிப்பணிப்பாளர் உதவிப்பணிப்பாளர் பிரதி செயலாளர் பணிப்பாளர் ஆராய்ச்சி உத்தியோகத்தர் போன்ற பதவிநிலைகளை இடைந்து கொள்ள முடியும்.

(இவை மாகாண சபை மற்றும் மத்திய அமைச்சு என வேறுபடும்)

  • விஞ்ஞான சேவைகள் பரீட்சை கூலம் விவசாயம் சார்ந்த ஆராய்சி மற்றும் தத்துவ வேலைகளுக்கு விவசாயப்பட்டதாரிகளிடமிருந்தே விண்ணப்பம் கோரப்படும் 
  • இதை தவிரவும் ஆராய்சி மற்றும் விவசாய பண்னைகளுக்கும் விவசாய பட்டதாரிகளுக்கு வாய்ப்புண்டு 
  • வன ஜீவராசிகள் மற்றும் சூழலியல் சார்ந்த திணைக்களங்களிலும் விவசாய பட்டதாரிகளுக்கு வாய்ப்புண்டு 
  • கடல் வளம் நன்னீர் மீன் வளம் போன்றவற்றுடன் தொடர்புடைய திணைக்களங்களிலும் விவசாய பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புண்டு 
  • அரசினால் மேற்கொள்ளப்படும் விசேட செயற்றிட்டங்களில் ஒப்பந்த அடிப்படையில் கடமையாற்ற அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருங்கிணைப்பாளர் திட்ட முகாமையாளர் போன்ற பதவிகளிலும் விவசாய பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு உண்டு.

இந்த கட்டுரையானது www.agricultureinformation.lk  எனும் இனது பதிப்புரிமைக்குரியது இதனை எழுத்து வடிவம் மற்றும் ஒளி ஒலி வடிவங்களில் பயன்படுத்துவது பதிவு செய்யப்பட்ட தனியார் கம்பனிகளது சட்டத்தின்படி குற்றமாகும். www.agricultureinformation.lk ஆனது  greenlankamentors pvt ltd இனது ஒர்  தயாரிப்பாகும். 

பல்கலைக்கழகங்கள்

சார்ந்த வேலைகள்

  • விரிவுரையாளர் ஆகலாம்
  • பதிவாளர் ஆகலாம்(பரீட்சை மூலம்)
  • ஆராய்சி உத்தியோகத்தர்
  • ஆய்வு கூட உதவியாளர்
  • தொழில்நுட்ப உதவியாளர் 
  • பண்னை முகாமையாளர்
  • தரைத்தோற்ற வடிவமைப்பாளர்
  • நூலக உதவியாளர் (பரீட்சை)

தனியார் வேலைகள்

மற்றும் NGO’S

விவசாயத்துறையில் தனியார் துறைகளது பங்களிப்பு அரசின் பங்களிப்பினை விட அதிகம் என்றே கூறலாம்

சிறு தனியார் முதல் பன்னாட்டு கம்பனிகள் வரை ஏராளமான வேலைவாய்ப்புக்களை பெற்றுக்கொள்ள முடியும்

சம்பளம் வேலையினது நிரந்தரத்தன்மை வேலையில் ஈடுபடக்கூடியதன்மை தகைப்புகளை தாங்கும் திறன் திறமைகள் வெளிப்படு தன்மை போன்ற பல காரணிகளில் தனியார் வேலையில் நீடித்து இருக்கும் தன்மையும் பதவி உயர்வுகளும் தேடியும் வரும் ஓடியும் போகும்

 

விவசாயம் படித்தவர்கள் விவசாயம் செய்ய வேண்டும் என்ற கருத்து மிக சிறந்தது ஆனால் அதில் பல காரணிகள் தங்கியிருந்தாலும் மனித விருப்பங்கள் முக்கியமானது ஆகும்.விவசாயம் சார்ந்து யாரும் விவாதிக்க முடியும் தொழிலில் ஈடுபட முடியும் முன்னேற்றங்களை அடைந்து கொள்ள முடியும் காரணம் விவசாயம் ஒரு பொதுவுடமை என்பதாலாகும்.ஆயினும் விவசாயத்தை கற்றவர்கள் தொடர்சியாக ஈடுபடுபவர்கள் கூட்டாக ஒரு குழுவாக இணைந்து செயற்படும் போது ஏராளமான நன்மைகளையும் சாதனைகளையும் செய்ய முடியும்.

இந்த கட்டுரையானது www.agricultureinformation.lk  எனும் இனது பதிப்புரிமைக்குரியது இதனை எழுத்து வடிவம் மற்றும் ஒளி ஒலி வடிவங்களில் பயன்படுத்துவது பதிவு செய்யப்பட்ட தனியார் கம்பனிகளது சட்டத்தின்படி குற்றமாகும். www.agricultureinformation.lk ஆனது  greenlankamentors pvt ltd இனது ஒர்  தயாரிப்பாகும். 

Related posts

error: Alert: Content is protected !!