தொழில்நுட்ப தகவல்கள் பிரதானம் விழிப்புணர்வு

AGRITECH 102 நிகழ்வும் விவசாய ஆராய்ச்சி புத்தாக்கம் மற்றும் மாற்று வளங்கள் பயன்பாடு

AGRITECH 102 என்பது சுயாதீனமாக இயங்கும் யாழ்.பல்கலைக்கழக விவசாயப்பட்டதாரிகள் குழு (அக்ரி-டாஸ்-போஸ்) விவசாய பீடம், யாழ்பல்கலைக்கழக வியாபார அலகு, விவசாய பீட மாணவர் ஒன்றியம், உள்ளுர் மற்றும் புலமபெயர் அமைப்புகளின் ஒருங்கிணைவினால் நிகழ்த்தப்படும் நிகழ்வாகும். விவசாயத்துறையில் காணப்படும் ஆய்வு மூலம் தீர்க்கப்பட கூடிய பிரச்சனைகளுக்கு பல்கலைக்கழகத்தின் இறுதியாண்டு மாணவர்களின் ஆய்வின் மூலம் தீர்வை நோக்கியும் அதன் மூலம் புதிய தொழில்வாய்ப்புக்கள் புத்தாக்கங்களை உருவாக்க முயல்வதே இந்த நிகழ்வின் நோக்கம். விவசாயிகள்,  விவசாய உற்பத்தி நிறுவனங்கள் விவசாயத்திற்கு உதவும் உற்பத்தி நிறுவனங்கள்  , தொழில்முயற்சியாளர்கள் ,  விவசாயம் சார்ந்த அரச மற்றும் தனியார் கல்வி, வணிக, ஆராய்ச்சி நிறுவனங்கள் , பண்னையாளர்கள் , சூழலியல் செயற்பாட்டாளர்கள் போன்றோரை ஒன்றிணைந்து வலுவான தொடர்பாடலோடு தொழிற்படக்கூடிய சூழலை உருவாக்குவதும் இந்நிகழ்வின் இன்னுமொரு நோக்கமாகும்.

அக்ரி-டாஸ்-போஸ்

யாழ்ப்பாணபல்கலைக்கழகத்தின்  விவசாய பட்டதாரிகள் நால்வரினது தொடர்ச்சியான கூட்டு முயற்சியினது வடிவமே அக்ரி டாஸ் போஸ் ஆகும் .2018 இன் இறுதிப்பகுதியில் குழுவாக இணைந்த இவர்கள் விவசாயத்துறையில் சவாலாக காணப்படும் பல விடயங்களை களப்பயணங்கள் நேர்கானல்கள் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளினூடாக அறிந்து கொண்டு அதற்கான தீர்வுகளுக்காக தொடர்ந்து பணியாற்றி வருவதோடு தற்போது 15 இற்கும் மேற்பட்ட உறுப்பினர்களுடன் இயங்கி வருகின்றனர். மேலும் தொடரும் காலங்களில் ஒருமித்த கருத்துக்கள், சித்தாந்தங்களுடைய விவசாயத்துறையில் தொடர்ந்து ஈடுபட விரும்புகின்றவர்களை இணைத்துக்கொள்ளவும் தயராக உள்ளார்கள். 

படம் 1. AGRITEH 101 நிகழ்வு ஒருங்கிணைப்பு பற்றிய ஆரம்ப கூட்டத்தில் AGRITASK FORCE இன் ஆரம்ப குழுவினரும் யாழ் பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தின் தற்போதைய பீடாதிபதியும் ( SUNDAY, 24.11.2019 JAFFNA)
AGRITEH 101 நிகழ்வு ஒருங்கிணைப்பு பற்றிய ஆரம்ப கூட்டத்தில் AGRITASK FORCE இன் ஆரம்ப குழுவினரும் யாழ் பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தின் தற்போதைய பீடாதிபதியும் ( SUNDAY, 24.11.2019 JAFFNA)

 

AGRITECH 101

இந்த நிகழ்வானது  2019 டிசம்பர் 12 ஆம் திகதி காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் விவசாய பீட கேட்போர் கூடத்தில், ( அறிவியல் நகர் , கிளிநொச்சி) நடைபெற்றது.  

இந்த நிகழ்வில் சுமார் 150 பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டனர். இதில் பல்வேறு விவசாய சங்கங்களைச் சேர்ந்த சுமார் 60 பங்கேற்பாளர்கள் மற்றும் விவசாயத்துறை தொடர்பான பொது மற்றும் தனியார் பங்குதாரர்கள் மற்றும் விவசாய பீடத்தைச் சேர்ந்த சுமார் 70 மாணவர்கள் மற்றும் 20 பணியாளர்கள் உள்ளனர். சர்வதேச நீர் மேலாண்மை நிறுவனத்தைச் சேர்ந்த (IWMI) மூன்று சர்வதேச பங்கேற்பாளர்களும் இந்த  நிகழ்வில் பங்கேற்று தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டனர். 

பங்கேற்பாளர்களுக்கு விவசாயம் தொடர்பான  சமூக மட்டத்தில் அடையாளப்படுத்தப்பட்ட   பிரச்சனைகள் தெரிவிக்கப்பட்டன. பங்கேற்பாளர்களால் சுமார் 20 பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டன. பின்னர் விவசாய சங்கம் மற்றும் விவசாயம் தொடர்பான பொது மற்றும் தனியார் பங்குதாரர்களின் பிரச்சனைகளின் விருப்பத்தின் அடிப்படையில், பணியாளர்கள் மற்றும் விவசாய பீட மாணவர்கள் பல்வேறு குழுக்களை உருவாக்கப்பட்டு விவாதிக்கப்பட்டன. கலந்துரையாடலை சரியான முறையில் வழிநடத்த ஒவ்வொரு குழுவிற்கும் வழிகாட்டிகள் நியமிக்கப்பட்டனர். கலந்துரையாடல் நிறைவடைந்த பின்னர் ஒவ்வொரு குழுவிலிருந்தும் மாணவர்கள் பங்குதாரர்களால் வழங்கப்பட்ட பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான யோசனைகள் முன்வைக்கப்பட்டன.

“”அக்ரி டெக் 101 நிகழ்வில் பங்குபற்றிய முக்கியமான தொகுதியினர்””

AGRI TECH 101  நிகழ்வின் முக்கிய தரவுகள் 

Posters – https://photos.app.goo.gl/E8QV9vfgrhebikm59

FB Page – https://www.facebook.com/Agritech-Sri-Lanka

Event – https://www.facebook.com/events/758133708023505/

 

AGRI TASK FORCE இன் ஏனைய செயற்பாடுகள் 

 

தொடர்சியாக நாட்டில் ஏற்பட்ட அசாதரண சூழ்நிலைகள் காரணமாக நேரடியான நிகழ்வையோ அல்லது செயற்பாடுகளை நடத்த முடியாமல் போனாலும்   கொரோனா பெரும் தொற்று காலத்தில் இணையவழி மூலம் பல பயிற்சி வகுப்புக்களை நடத்தியதோடு 2020 ஆம் ஆண்டில் வடமாகாணத்தில் இயங்கும் இளம் விவசாயிகள் கழகங்களின் நெல் நாற்று நடுகை இயந்திரத்தினை பெற்று அதனை விவசாயிகள் மத்தியில் நடுகை செய்வதற்கான பயிற்சி மற்றும் சேவைகளை வழங்கி வருகின்றனர். 2021 ஆம் இறுதியில் இலங்கையில் விவசாய இரசாயணங்கள் தடைசெய்யப்பட்டன. இதன் போது நெல் செய்கையில் 40 சதவீத இழப்பை ஏற்படுத்தகூடிய களைகளை கட்டுப்படுத்த முடியாமலும் களைகளால் ஏற்படும் ஏனைய நோய் மற்றும் பூச்சித்தாக்கங்களை கட்டுப்படுத்த முடியாமல் விவசாயிகளது விளைச்சல் பாரிய வீழ்ச்சியை அடைந்தது. ஆயினும் நெல் நாற்று நடுகை மூலம் நடுகை செய்யப்பட்ட வயல்களில்  உற்பத்தி ரீதியலான செலவு குறைவாகவும் இரசாயண பயன்பாடு குறைவாகவும் விளைச்சல் வழமையானதாகவும் காணப்பட்டது.

ஆய்வு வெளியீடுகள் 

 

ஆராய்சிகள் பல செய்யப்பட்டாலும் அவை விவசாயிகளை சென்று அடைவது குறைவாக இருக்கிறது. ஆயினும் பெரும் தொற்றுக்கு பின்னர் அதிகமான மக்களிடம் அலைபேசிகள் உள்ளன. மேலும் விவசாயத் சார்ந்து இயக்க கூடிய பலரிடம் இணையவசதி மற்றும் அலைபேசி உள்ளன. எனவே விவசாய ரீதியில் செய்யப்படும் ஆய்வுகளை எளிய தமிழில் தொழி பெயர்ந்து வெளியிட்டு வருகிறோம். இது சிரமமான பணியாகினும் இதனை மேலும் அனைவரிடமும் கொண்டு செல்வதற்கான முயற்சிகளை தொடர்து எடுத்து வருகிறோம்

வரவேற்கின்றோம் 

கள ரீதியிலான அனுபவம்  விவசாயிகளுடன் சிறந்த இடைவினைத்தொடர்பு,  ஆராய்சி மட்டத்திலான சிந்தனை, புத்தாக்கங்கள், மாற்று சிந்தனை போன்ற தன்மைகளுடன் விளங்கும் சிறந்த மனித  ஆளனி வளங்களை எம்முடன் இணைந்து கொள்ள அழைக்கிறோம் 

தொடர்புகளுக்கு

 மகேஸ்வரன் ரஜிதன் 0777 90 6383 

Email- agritaskforceteam@gmail.com

website agritaskforce.com

உசாவுத்துணை 

https://ubl.jfn.ac.lk/index.php/agritech-101/

https://www.agricultureinformation.lk/அக்ரி-டாஸ்-போஸ்/

https://www.facebook.com/photo/?fbid=574894696626333&set=pcb.574894753292994

https://hi-in.facebook.com/inthiragroups.lk/posts/5732805326734246/

 

கட்டுரையாக்கம் 

ரவிநாதன் ரஜீவன்,விவசாய பட்டதாரி

யாழ் பல்கலைக்கழகம்

 

 

Related posts

error: Alert: Content is protected !!