அக்ரி ரெக் 101 என்கின்ற நிகழ்வு 2019 ஆம் ஆண்டு கிளிநொச்சி அறிவியல் நகரில் உள்ள விவசாயபீடத்தில் இடம்பெற்றது.இந்த நிகழ்வானது விவசாயிகளது பிரச்சனைகளை பல்கலைக்கழக மாணவர்களது இறுதியாண்டு ஆய்வுடன் இணைப்பதற்கான முயற்சியாக நிகழ்த்தப்பட்டது.ஆனாலும் இந்த நிகழ்வின் குறிக்கோளை அடைய முடியாமல் போய்விட்டது.அன்றைய தினத்தில் விவசாயிகளால் முன்மொழியப்பட்ட பல பிரச்சனைகள் இன்னமும் உள்ளது.அவற்றினை பொது வெளியில் கொண்டு வருவதன் மூலம் இதற்கான தீர்வினை யாராவது செய்வார்கள் என எதிர்பார்க்கிறோம்.
இலங்கையின் வடக்குப் பகுதியில் விவசாய இரசாயனங்கள் விற்பனைக்கான விதிமுறைகள் ஒழுங்குபடுத்தப்பட இல்லை.
நவீன விவசாயத்துக்கு விவசாய இரசாயணங்கள் மிகவும் தேவையான ஒன்று.அதிகரித்து வரும் சனத்தொகைக்கு ஏற்ப உணவளிக்க வேண்டிய தேவை இருக்கிறது.இதனை உறுதி செய்ய வேண்டியது அரசாங்கங்களின் பொறுப்பாகும்.இருப்பினும் இரசாயணம் இல்லாத விவசாயத்தை இலங்கை அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது.இந்த அக்ரி ரெக் 101 நிகழ்வு 2019 ஆம் ஆண்டு இடம் பெற்றது.அந்தஆண்டு மற்றும் அதற்கு முந்திய காலத்திலும் கட்டுபாடில்லாத விவசாய இரசாயணங்களே விற்பனை செய்யப்படுகிறது.
இலங்கையில் பல இடங்களில் விவசாய இரசாயணங்களை விற்பனை செய்வதற்கு என தனிப்பட்ட விற்பனை நிலையங்கள் இல்லை கட்டிட பொருட்கள் விற்பனை செய்யப்படும் விற்பனை நிலையங்களிலேயே இவை விற்பனை செய்யப்படுகின்றது.
விவசாய இரசாயனங்கள்
தொடர்பான சட்டங்கள்
2011.07.27 ஆம் திகதியின் இலக்கம் 1716/23 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமாணியின் மூலம் வெளியிடப்பட்ட ஒழுங்கு விதி
இது பீடை கொல்லிகள் விற்பனை நிலையங்களில் விவசாய இரசாயன விற்பனை
தொழில்நுட்ப உதவியாளர் ஒருவர் இருத்தல் வேண்டும் என்பதுடன் அவர்களை பயிற்றுவித்தல் மற்றும் பதிவு செய்தல் தொடர்பாக ஒழுங்கு விதி ஆகும்
2010.05.25 ஆம் திகதியின் இலக்கம் 1665/7 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமாணியின் மூலம் வெளியிடப்பட்ட ஒழுங்கு விதி
பீடைகளை கட்டுப்படுத்தும் சேவை நிலையங்களுக்கு அனுமதி பத்திரம் பெறப்பட வேண்டும்.என்பதுடன்
அனுமதிப்பத்திரத்தை பெற்றுக் கொள்ளும் நடைமுறை மற்றும் அதனுடன் தொடர்பாக ஏனைய கட்டளைகளை உள்ளடக்கிய ஒழுங்கு விதியாகும்.
2000.01.05 ஆம் திகதியின் இலக்கம் 1113/15 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமாணியின் மூலம் வெளியிடப்பட்ட ஒழுங்கு விதி
1.சகல பீடைகொல்லி விற்பனைக்கும் ஒரு பற்றுச்சீட்டு ஒன்று வழங்கப்பட வேண்டும்
2. விற்பனை நிலையங்களில் உள்ள பீடை கொல்லிகள் தொடர்பான தொகை அறிக்கை பேணப்படல் வேண்டும்
3.18 வயதிலும் குறைவானவர்களுக்கு பீடை கொல்லி விற்பனை செய்யக்கூடாது
4.உணவுப் பொருட்கள் விற்பனை செய்யும் கட்டிடம் ஒன்றில் பீடைகொல்லி பொருட்கள் விற்பனை செய்யப்படும் ஆயின் குறித்த பகுதிக்கு வாயுப் பரிமாற்றம் அடையமுடியாதனவாக காணப்பட வேண்டும் என்பதனை குறிப்பிடும் ஒழுங்கு விதியாகும்.
1985.05.02 ஆம் திகதியின் இலக்கம் 347/7 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமாணியின் மூலம் வெளியிடப்பட்ட ஒழுங்கு விதி
பீடை கொல்லி அடங்கிய சகல கொள்கலன்களிலும் காணப்படும் பெயர் சுட்டியில் உள்ளடங்க வேண்டிய விவரங்களும் பாவனை மட்டுப்படுத்தப்படுள்ள பீடை பெயர் சுட்டிகளில் அது தொடர்பாக அச்சிடலும் மட்டுப்படுத்தப்பட்டுள்ள பீடைக்கொல்லிகளை விற்பணை தொடர்பாக கட்டளைகள் அடங்கி ஒழுங்கு விதியாகும்
மேற்குறித்த சட்டங்கள் விவசாய விற்பனை நிலையங்களில் பேணப்படுகிறதா என்பது கேள்விக்குரியது என்றாலும் இதனை தொடர்ச்சியாக அணுமதிக்க முடியாது.
முதலில் விற்பனை நிலையங்களை திணைக்களத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும்
அவற்றின் நிலையங்களை அடையாளப்படுத்தி அவர்கள் வேறு ஏதும் கட்டிட பொருட்கள் விற்பதை தவிர்க்க வேண்டும்.
உரிய விவசாயப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை உறுதிப்படுத்தல் வேண்டும்.
இரசாயணப் பொருட்கள் தடை செய்யப்பட்டு இறக்குமதி இல்லாத நிலையில் என்ன செய்வது.
இரசாயணப் பொருட்கள் இறக்குமதி அரசினால் தடை செய்யப்பட்ட போதும் முறையற்ற வகையில் தடைசெய்யப்பட்ட பலஇரசாயணங்கள் விவசாயிகள் மத்தியில் புழக்கத்தில் உள்ளது..இதனால் சரியான தெளிவூட்டல் விவசாய விற்பனையாளர்களுக்கு வழங்குதல் வேண்டும்
தொடர்ச்சியான அவதானங்கள் ஊடாக வியாபரத்தை மட்டும் அடிப்டையாக கொண்டு விவசாயிகளை ஏமறாற்றும் விற்பணையாளர்களை அடையாளம் கண்டு அவர்களை தொடர்ச்சியான அறிக்கைப்படுத்தல் மூலம் கட்டுப்படுத்தலாம்.சட்டம் மூலம் விற்பனை செய்வதை தடுக்கலாம்