ATF ஆராய்சி முடிவுகள் இலங்கை சூழல் சார்ந்தது பிரதானம் புதியவை புதுமை

இலங்கை எந்தளவிற்கு சூடாகி கொண்டு வருகிறது

இந்த கட்டுரையானது விவசாயத்திணைக்களத்தினதும் வளிமண்டலவியல் திணைக்களத்தினதும் கூட்டிணைப்பாக செய்யப்பட்ட “Recent trends of extreme weather events in Sri Lanka” எனும் ஆய்வினது விஞ்ஞான சுருக்கத்தின் மொழி பெயர்க்கப்பட்ட தமிழ் வடிவமாகும்.

 

ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்தின் காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள் பல காரணிகளைப் பொறுத்தது மாறுபடும்.புவியியல் அமைப்புகள்இ வானிலை காரணிகள் மற்றும் சமூக-பொருளாதார சூழ்நிலை போன்றவற்றை பிரதான உதாரணங்களாக குறிப்பிடலாம். எனவே

வானிலை காரணிகள் மாறுவது குறித்து சரியான நேரத்தில் பதிவுகளை வைத்திருப்பது முக்கியம்

தகுந்த கணிப்புக்கள்  மற்றும் தொகுப்புக்களை கொண்டு ஒரு நாட்டில் புவியியல் சார்ந்த மதற்றங்களை செயல்படுத்த வேண்டும்…

தீவு முழுவதும் சிதறிக்கிடக்கின்ற வானிலை கண்காணிப்பு நிலையங்களது தினசரி மழை மற்றும் வெப்பநிலையைப் பயன்படுத்தி ஓர்  ஆய்வு மேற்கொள்ளப்பட்டது

1961 முதல் 1984 வரை 2019 வரையிலான 30 ஆண்டுகளுக்கும் மேலான காலவரிசையில் சேகரிக்கப்பட்ட தகவல்கள் இதற்கு பெரிதும் உதவின .

வெப்பநிலைமாறுபாடுகள் தொடர்பாக எட்டு குறியீடுகளையும்  மற்றும்   மழைப்பொழிவுதொடர்பாக ஆறு  குறியீடுகளையும் பயன்படுத்தி காலத்தின் தீவிர காலநிலை நிகழ்வுகளை   ClimPACT2 மென்பொருளைப் பயன்படுத்தி பகுப்பாய்வு செய்யப்பட்டது

இலங்கையிலுள்ள மூன்று பிரதான காலநிலை மண்டலங்களிலும்    சராசரி தினசரி வெப்பநிலைஇ அதிகபட்ச தினசரி வெப்பநிலை  மற்றும் குறைந்தபட்ச தினசரி வெப்பநிலை என  மூன்று தட்பவெப்ப நிலைகளிலும்   குறிப்பிடத்தக்க அதிகரிப்புப் போக்கைக் காட்டியுள்ளது

உலர் வலயத்தில் குளிரான நாட்கள் மற்றும் குளிர் இரவுகள் குறைதோடு சூடான நாட்கள் மற்றும் வெப்பமான  இரவுகளது எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. வருடாந்த மொத்த மழைப்பொழிவு  தொடர்ச்சியான வறட்சி நாட்கள் மற்றும் தொடர்ச்சியான ஈரமான நாட்கள் போன்றவற்றில் குறிப்பிடத்தக்களவு  அதிகரிப்பு அல்லது குறைவு  காட்டப்படவில்லை. இருப்பினும்  அதிக மழைப்பொழிவு நிகழ்வுகள் மற்றும் சாதாரண நாளின்  தீவிர நிலை குறியீட்டுகளில் வெளிப்படையான அதிகரிக்கும் போக்கு காணப்படுகிறது

உலர் வலயமானது முக்கிய விவசாயப் பகுதி என்பதால்  சுற்றுப்புற வெப்பநிலை மற்றும் அதிக மழைப்பொழிவு நிகழ்வுகளின் போக்குகள் அதிகரித்து வருகின்றமை நாட்டின் விவசாய உற்பத்தியை எதிர்மறையான முறையில் பாதிக்கும்.

Related posts

error: Alert: Content is protected !!