பிரதானம் புதியவை

கோவா,உருளைக் கிழங்கு,லீக்ஸ்,கத்தரி, தக்காளி, மிளகாய், கறிமிளகாய் பயிர்களில் பக்றீரியா அழுகல்

பல்வேறு வகையான பக்றீரியாக்கள் பயிர்களில் அழுகல் நிலையை ஏற்படுத்தும். இவ்வாறு அழுகல் ஏற்படுத்தும் பக்றீரியாக்களுல் அர்வீனியா (Ervinia), பெக்டோ பக்றீரியா (Pectobacterium) மற்றும் சியுடொமொனாஸ் (Pseudomonas) என்பன விஷேடமானவை. இவ் பக்றீரியா பழங்கள்,மரக்கறி, பூ மற்றும் அலங்காரத் தாவரங்களிற்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும். பிரதானமாக தாவரங்களில் சதை இழையங்களில் பாதிப்பை ஏற்படுத்துவதோடுஇளம் அங்குரம், இளம் கிளை மற்றும்இலைகளிற்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

இலிருந்து 32 சென்றிகிறேட் வெப்பநிலைக்குஇடையில் இவ் பக்றீரியாக்களின் வளர்ச்சி நன்கு இடம் பெற்றாலும் உகந்த வெப்பநிலை வீச்சானது 21 இலிருந்து 26 சென்றிகிறேட ஆகும். அதிக ஈரலிப்பின் கீழ் இத் தாக்கத்தை அதிகளவில் காணலாம். அழுகலை ஏற்படுத்தும் பக்றீரியாக்களில் விஷேட தன்மையானது களத்தில் மாத்திரமல்லாது அறுவடையை களஞ்சியப்படுத்தும் போது மற்றும் போக்குவரத்தின் போதும் பாதிப்பை ஏற்படுத்தும்.

             பிரதான நோய் அறிகுறிகள்

– இவ் பக்றீரியாவினால் ஏற்படுத்தப்படும் நோய் அறிகுறிகள் பயிருக்குப் பயிர் வேறுபடக்கூடும்
– பொதுவாக சதைப்பற்றுள்ள பகுதிகளில் கறுப்பு நிறமாகி அழுகி காணப்படும். இது துர்நாற்றம் வீசும்

உதாரணங்கள்:
 உருளைக் கிழங்கு : இதில் கிழங்கு மற்றும் தண்டின் அடிப்பகுதி என்பன பாதிக்கப்படும்.
 கோவா இன பயிர்கள்: முட்டைகோவாவின் தண்டுப் பகுதி, மற்றும் இலைகளின் அடிப்பகுதி
கிழங்கு வகைப் பயிர்கள்: கிழங்கு
தக்காளி, மிளகாய், கறி மிளகாய், குடை மிளகாய் (பெல் பெப்பர்): என்பனவற்றின் காய்
லீக்ஸ், கங்குன்: என்பனவற்றின் இலை

கோவா பயிர்ச் செய்கையில் எர்வினியா எனும் பக்றீரியாவினால் அழுகல் ஏற்படுத்தப்படும். இது கறுப்பு நிறமானதாகவும், ஈராமானதாகவும்,துர்நாற்றமுடையதாகவும் இருக்கும்
– கரட்டில் (கிழங்கில்) பாதிப்பு ஏற்படும் போது, கிழங்கு முழுமையாக அழுகி தோல் மாத்திரம் எஞ்சியிருக்கும்.
– உருளைக் கிழங்கில் ஏற்படும் அழுகல் மங்கலான கபில நிறமானதாக காணப்படும்.
முழு கிழங்கும் கரைந்த தன்மையை அடையும்
– மிளகாய், தக்காளி என்பனவற்றின் காய்களில் சேதம் ஏற்படும் போது அவற்றின் உட்பகுதி கரைந்து நீர் நிரப்பப்பட்ட பைகளைப் போன்று கிளைகளில் தொங்குவதை
காணலாம்.
– இவ் பக்றீரியாவானது தாவர கலங்களில் காணப்படும் பெக்டின் எனும் சேர்வையை கரைக்கக் கூடிய ஆற்றலைக் கொண்ட நொதியத்தைச் சுரப்பதால் பாதிக்கப்பட்ட இழையங்கள் விரைவாக கரைந்த (திரவ) நிலையை அடையும்

                 பரவும் வழிமுறைகள்

– இவ் பக்றீரியாவானது மண்ணில் காணப்படுவதனால் இலகுவாக பயிர்களை சேதப்படுத்தும்
– பாதிக்கப்பட்ட உருளைக்கிழங்கு விதைகள் மூலம் பரவும்
– மண்ணில் உள்ள பக்றீரியாவானது காயங்களின் வழியாக அல்லது தாவரங்களிலுள்ள இயற்கையான துளைகளினூடாக தாவரத்திற்குள் உட்புகும

சாதகமான சூழல் நிபந்தனைகள் காணப்படும் போது, இப் பக்றீரியாக்கள் விரைவாக பெருகி அதிக சேதத்தை ஏற்படுத்தும்
– சிறியளவில் பாதிக்கப்பட்ட அறுவடையை களஞ்சியப்படுத்தும் போது, அல்லது அவற்றை கொண்டு செல்லும் போது இப்பக்றீரியாவினால் ஏற்படும் சேதம் காரணமாக
பாரியளவு விளைச்சல் பாதிப்பு ஏற்படும்;

             கட்டுப்படுத்தும் முறை

பக்றீரியாவினால் ஏற்படுத்தப்படும் நோய்களை கட்டுப்படுத்துவதற்கும், அவற்றின் பரவுதலை குறைப்பதற்கும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான வழிமுறைகளே காணப்படுகின்றன
– மரக்கறி பயிர்ச் செய்கைக்கென நன்றாக நீர் வடிந்தோடக் கூடிய நிலத்தை தெரிவு செய்ய வேண்டும்.
– நன்றாக நீர் வடிந்தோடக் கூடிய வகையிலான ஆழமான கான்களை அமைத்துக்கொள்ள வேண்டும்
– பயிரிற்கு நன்றாக சூரிய ஒளி படுமாறு செய்தல். இதற்காக பொருத்தமான அளவு பயிர்களுக்கிடையிலான இடைவெளியை
பேணுதல்
– களைகளின் கட்டுப்பாட்டின் போதும்,பசளைகளின் பாவனையின் போதும், ஏனைய பயிர் முகாமைத்துவ நடவடிக்கைகளின் போதும் பயிர்களில் காயம் ஏற்படுவதை தவிர்த்துக் கொள்ளவும்
– நீர் பாய்ச்சும் போது பயிர்களின் மேல் மண் விசிறுப்படுவதை தவிர்க்கவும்
– நோயினால் பீடிக்கப்பட்ட பயிர்களை அவதானித்த உடனேயே பிடுங்கி அகற்றி விடவும்

இலைகளை உண்ணும் பூச்சிகளானது
நோயாக்கிகள் உட்செல்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும். அத்தோடு ஈக்கள் மூலம் நோயாக்கிகள் பரவும். எனவே பூச்சிகளையும் ஈக்களையும் கட்டுப்படுத்தவும்
– உலர்ந்த சூழல் காணப்படும் போது அறுவடை செய்யவும்
– அறுவடையின் போதும், ஏனைய பயிர் நடவடிக்கைகளின் போதும் பயன்படுத்தப்படும் உபகரணங்களை
நன்றாக சுத்தம் செய்து திரும்பவும் பாவிக்கவும்
– அறுவடையின் பின் நோய் பாதிப்பு இல்லாத பகுதிகளை மாத்திரம் களஞ்சியப்படுத்தவும்
– களஞ்சியப்படுத்துவதற்கு முன் அல்லது கொண்டு செல்வதற்கு முன் மரக்கறிகளை கழுவுவதால் அழுகுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கக்கூடும். எனவே இயலுமானவரை இத்தகைய
சந்தர்ப்பங்களை தவிர்த்துக்கொள்ளவும்
– அறுவடை அல்லது வித்துகள் (உருளைக்கிழங்கு) களஞ்சியப்படுத்தும் போது ஈரலிப்பு இல்லாத நல்ல காற்றோட்டமுள்ள நிபந்தனையின் கீழ் களஞ்சியப்படுத்தவும்
– பக்றீரியாக்களுக்கு ஓரளவு ஈடுகொடுக்கக்கூடிய சோளம், போஞ்சி போன்ற பயிர்களை பயிரிடலாம்.
இவை பக்றீரியா அழுகலுக்கும் ஓரளவு ஈடுகொடுக்கும் பயிர்களாகும். இவற்றை சுழற்சி முறை பயிர்ச்செய்கையின் போது பயன்படுத்த முடியும்.

Related posts

error: Alert: Content is protected !!