விவசாயத்துறையில் தற்போது சேதன உரம் முக்கியமானது.ஏக்கருக்கு மாட்டெரு 5000 கிலோ நன்கு உக்கிய ஆட்டெரு 3000 கிலோ தேவைப்படுகிறது.கூட்டெரு எனில் 2000 கிலோ போதும் ஆனால் இது தயாரிப்பது கடினமானதாக விவசாயிகள் கருதகின்றனர்.ஆனால்
செறிவூட்டபட்ட உரம் ஏக்கருக்கு 200 கிலோ போதுமானது.சரி செறிவூட்டப்பட்ட உரம் என்றால் என்ன??
செறிவூட்டபட்ட உரம்
மனித உடல் வளர்ச்சி மற்றும் விருத்திக்கு அமினோ அமிலம் தேவைப்படுகிறதைப் போல தாவரத்துக்கு நைதரசன் தேவை
மனிதன் அமினோ அமிலத்தைப்பெற்றுக் கொள்ள அமினோ அமிலம் செறிந்த உணவுகளான முட்டை இறைச்சி சோயா உணவுகளை செறிவு முறையில் பெற்றுக் கொள்ள வேண்டும்.அதைப்போல தாவரத்துக்கு நைதரசன் நிறைந்த போசனை இடப்பட வேண்டும்.
இரசாயண உரம் இல்லாத சந்தர்ப்பத்தில் சேதன உரத்தினது போசணைப்பெறுமதியை அதிகரித்துக் கொள்ள வேண்டும்.சேதன உரத்தில் தாவர வளர்ச்சி மற்றும் விருத்திக்கு தேவையான மூலக்கூறுகளை செறிவாக்கி கொள்ளுதலை செறிவூட்டல் எனலாம்.அவ்வாறு செறிவூட்டப்பட்ட உரம் செறிவூட்டப்பட்ட சேதன உரம் என அழைக்கப்படும்.
செறிவூட்டப்பட்ட உரத்தில் பயன்படுத்தப்படும் தாவரக் கூறுகள்(பசுமையானவை)
கிளிசிறிடியா,பூவரசு,எருக்கலை,காட்டுச்சூரியகாந்தி,வாகல்,இப்பில் இப்பில்,அசோலா,உழுந்து பயறு நிலக்கடலை குலை,சணல்,முள்முரங்கை,மாவிலை.வாலையிலை
செறிவூட்டப்பட்ட உரத்தில் பயன்படுத்தப்படும்
தாவரக் கூறுகள்(காய்ந்தவை)
- உமி
- வைக்கோல்
- காய்ந்த உழுந்து பயறு நிலக்கடலை குலை
- காய்ந்த பனையோலை
- காய்ந்த தென்னோலை
- காய்ந்த வாழைப்பாகங்கள்
செறிவூட்டப்பட்ட உரத்தில் பயன்படுத்தப்படும்
விலங்குக் கூறுகள் (பசுமையானவை)
பசுஞ்சாணம்,பண்றி கழிவுகள்,உயிர் வாயுக்கழிவுகள்,பசுமையான ஆட்டெரு,பசுமையான கோழியெரு
செறிவூட்டப்பட்ட உரத்தில் பயன்படுத்தப்படும்
விலங்குக் கூறுகள் (காய்ந்தவை)
சாணம்,பண்றி கழிவுகள்,ஆட்டெரு,கோழியெரு
செறிவூட்டப்பட்ட உரத்தில் பயன்படுத்தப்படும்
ஏனைய கூறுகள்
பொசுப்போ பக்ரீயா,றைக்கோடேர்மா,பஞ்சகவ்வியா,காய்ந்த மீன் கழிவுகள்
200 கிலோ உரம் தயாரிக்க என்ன பொருட்கள் எந்தளவில் தேவை
- 150 கிலோ காய்ந்த மாட்டெரு (4-5 வீல் பரோ)
- 4 வீல் பரோ கடலை அல்லது உழுந்து அல்லது பயறு குலை
- 1 வீல் பரோ கிளிசிரிடியா அல்லது பூவரசு
- 1 வீல் பரோ எருக்கல
- 1 வீல் பரோ காய்ந்த இலைகள்
2000 கிலோ உரம் தயாரிக்கதேவையான பொருட்கள்
- 1 லோட் கூட்டெரு
- 1 லோட் (கடலை அல்லது உழுந்து அல்லது பயறு குலை அல்லது கிளிசிரிடியா அல்லது பூவரசு அல்லது எருக்கல)
- 1 லோட் காய்ந்த இலை குலைகள்