திட்டங்கள் திட்டவரைபுகள் பிரதானம் புதியவை

குறைவான நீரைப்பயன்படுத்தி கௌபீ செய்கை

இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாலும்‌, குறைந்த நீருடன்‌ செய்கை பண்ண முடியுமாகையால்‌ இச்‌ சிறுபோகத்தில்‌ கெளபீயைப்‌ பயிரிடுவதன்‌ மூலம்‌ அதிக வருமானத்தைப்‌ பெற்றுக்‌ கொள்ள முடியும்‌.உலர்‌, இடை வலயங்களில்‌ நிலவும்‌ காலநிலை இதனைப்‌ பயிரிட மிகவும்‌ பொருத்தமானது.தற்போது அதிகளவில்‌ பயிர்‌ செய்யப்படும்‌ வர்க்கங்கள்‌ கீழே  தரப்பட்டுள்ளன.

வர்க்கம்‌
  • வருணி செங்கபில நிறம்‌
  • தவல வெண்ணிறம்
  • MI  35 மினுங்கும்‌ இளம்‌ மஞ்சள்‌ நிறம்
  • MICP 1   வெண்ணெய்‌ நிறம்‌
  • ANKCP 1  இளங்‌ கபில நிறம்‌
  • ANKCP 2 இளங்‌ கபில / வெண்ணிறம்
விதைப்பு

உலர்‌ காலத்தில்‌ அறுவடையை மேற்கொள்ளும்‌ வகையில்‌ செய்கையை ஆரம்பிக்கும்‌ காலத்தை தீர்மானிக்கவும்‌.விதைத்‌ தேவை – ஏக்கறிற்கு 14 – 15 கிலோ கிராம்‌.

விதைகளை தோட்டத்தில்‌ நடுகை செய்ய முன்னர்‌ முளைதிறனை பரிசோதிக்கவும்‌.முளைதிறன்‌ குறைவாகக்‌ காணப்படுமாயின்‌ விதைகளைப்‌ பெற்றுக்‌ கொண்ட நிலையத்திற்கு அறிவிக்கவும்‌.

செய்கையை ஆரம்பிப்பதற்கு மண்ணை ஆழமாக புரட்டி, தூர்வையாக்கி, வரம்பு,சால்களை அல்லது உயர்‌ பாத்திகளை அமைக்கவும்‌.

எதிர்பாராத மழையின்‌ போது நீர்‌ நன்கு வடிந்தோடூவதற்காக 10 – 18 அடி இடைவெளியில்‌ காண்களை அமைக்கவும்‌

நோய்‌, பீடைகளைத்‌ தவிர்க்க பொருத்தமான இரசாயனத்தினால்‌ விதைகளைப்‌ பரிகரிக்கவும்‌.

நோய் பூச்சி கட்டுப்பாடு

அடி அழுகலைத்‌ தடுக்க – பொருத்தமான பங்கசு நாசினியைப்‌ பயன்படுத்தவும்‌

போஞ்சி ஈயின்‌ தாக்கத்தைத்‌ தடுக்க – பொருத்தமான பூச்சிநாசினியைப்‌ பயன்படுத்தவும்‌.

விதைகளை நடுவதற்கு முன்‌ சேதனப்‌ பசளையை மண்ணுடன்‌ கலக்கவும்.

தயார்‌ செய்யப்பட்ட நிலத்தில்‌ 12 % 6 அங்குல இடைவெளியில்‌ 1 – 1 அங்குல ஆழத்தில்‌ ஒரு நிலையத்தில்‌ 2 விதைகள்‌ வீதம்‌ நடவும்‌.

நாற்றுக்களை நட்டு 10 – 18 நாட்களில்‌ ஆரோக்கியமான ஒரு நாற்றை மீதமாக வீட்டு ஏனையவற்றைப்‌ பிடுங்கி விடவும்‌.

விதைகளை நடுகை செய்யும்‌ சந்தர்ப்பத்தில்‌ மண்ணில்‌ போதுமானளவு ஈரப்பதன்‌ இல்லையெனில்‌ விதைகளை நடுகை செய்தவுடன்‌ நீர்ப்பாசனம்‌ செய்யவும்‌.

மண்ணில்‌ காணப்படும்‌ ஈரப்பதனின்‌ படி தேவையான சந்தர்ப்பங்களில்‌ நீர்ப்பாசனம்‌ செய்யவும்‌.

பூக்கும்‌, காய்கும்‌  சந்தர்ப்பங்களில்‌ மண்ணில்‌ ஈரப்பதனின்‌ அளவை பேணுவது மிகவும்‌ அவசியமாகும்‌. நடுகை செய்து 34, 64 வாரங்களில்‌ களைகளைக்‌ கட்டுப்படுத்தவும்‌.

அதிக போசணையிலும்‌, ஈரப்பதனின்‌ கீழும்‌ கெளபியில்‌ கொடிகள்‌ உருவாகுமாயின்‌ பூத்தலுக்கு முன்‌ அவற்றின்‌ நுனியை வெட்டி அகற்றவும்‌.

நோய்‌, பீடைத்‌ தாக்கத்தைத்‌ தடுப்பதற்கு தேவையான தொழில்நுட்ப்‌ ஆலோசனைகளை  பெற்றுக்‌ கொள்ளவும்‌.

அறுவடை

கெளபீ காய்கள்‌ அவ்வப்போது முதிர்ச்சியடைவதால்‌ காய்கள்‌ உலர்கின்ற போது பல தடவைகளுக்கு அறுவடை செய்யவும்‌.

ஹெக்டேயர்‌ ஒன்றில்‌ 1400 – 1600 கிலோ கிராம்‌ விளைச்சலைப்‌ பெற்றுக்‌ கொள்ள முடியும்‌.கடும்‌ சூரிய வெப்பத்தின்‌ கீழ்‌, உலர்ந்த காய்கள்‌ வெடிப்பதால்‌ அவ்வேளையை வீடுத்து காய்களை அறுவடை செய்வது மிகவும்‌ பொருத்தமானது.அறுவடை செய்யப்பட்ட கெளபீ காய்கள்‌ உலர்த்தப்பட்டு ஒரு பலகையினால்‌ தட்டூவதன்‌ மூலம்‌ விதைகளை வேறு படுத்தவும்‌. அவ்‌ விதைகளை நன்கு உலர்த்தவும்‌.

உலர்தலைப்‌ பரிசோதிப்பதற்காக   விதையை பற்களினால்‌ கடிக்கும்‌ போது “டகஸ்‌” எனும்‌ சத்தத்துடன்‌ இரண்டாக பிளக்க வேண்டும்‌.நன்கு உலர்த்தப்பட்ட விதைகள்‌ தூய்மையான சாக்குகளில்‌ பொதியிட்டு உலர்ந்த குளிர்ச்சியான இடத்தில்‌ களஞ்சியப்‌ படுத்தவும்‌.களஞ்சிய நிலையில்‌ பூச்சிகளில்‌ தாக்கத்தைக்‌ குறைப்பதற்காக சாக்குகளினுள்‌ வேப்பிலை அல்லது எலுமிச்சை இலைகளை இடுதல்‌ பொருத்தமானது.உங்களது அடுத்த போகத்திற்கு தேவையான விதைகளுக்காக இந்த விளைச்சலில்‌ ஒரு பகுதியை வேறுபடுத்தி பாதுகாப்பாக களஞ்சியப்படுத்தவும்‌.

அறுவடை செய்த பின்‌ பயிர்‌ மீதிகளை மண்ணுடன்‌ கலக்கப்படுவதால்‌ அடுத்த போகத்தில்‌ செய்கைக்குத்‌ தேவையான பசளையின்‌ அளவைக்‌ குறைத்துக்‌ கொள்ள முடியும்‌.

Related posts

error: Alert: Content is protected !!