இலங்கை பிரதானம் புதியவை

ஏற்றுமதிக்கான வாய்ப்பை பெறும் இலங்கை கதலி வாழை

இலங்கையின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க பல திட்டங்கள் முன்வைக்கப்படுகின்றன அதில் சிலவற்றின் உண்மைத்தன்மை மற்றும் அதன் நீடித்த தன்மை பற்றி கவனமாக இருத்தல் வேண்டும். சமீப நாட்களாக கதலி வாழையின் ஏற்றுமதி
 தொடர்பான தகவல்கள் அதிகம் முக்கியம் பெறுகிறது.அது பற்றி முக்கியமான தளங்களில் வெளிவந்த தொகுப்பை பற்றி இங்கு பார்க்கலாம்.
இதன் பின்னர் வாழையை அதிகளவில் உற்பத்தி செய்வதற்கான பதிவுகளை நீங்கள் முகநூல்களில் மற்றும் பிற சமூக தளங்களில் காண நேரிடலாம். சில அரச திணைக்கள உத்தியோகத்தர்கள் ஆலோசனையும் வழங்கலாம் ஆயினும் விவசாயிகளுக்கு நன்மை செய்யவிரும்பும் நல்ல உள்ளங்கள் தங்களது ஆர்வத்தை சரியான தகவல் தொகுப்பு பெற்றும் சந்தை வாய்ப்பை ஏற்படுத்திய பின்னர் வெளிப்படுத்தவும்.
ஏனெனில் கடந்த காலங்களில் திட்டமிட்ட முறையிலும் பெறுமதி சேர் பொருட்களை உருவாக்குதல், சந்தை வாய்ப்புக்கள் பற்றிய எந்தவிதமான முன் ஏற்பாடுகளும் இல்லாமல் பல பயிர்களை விவசாய முயற்சிகளை மேற்கொண்டு பலர் நஷ்டமடைந்த கதைகள் உண்டு. உதாரணமாக கற்றாழை, மஞ்சள், உழுந்து என்பவற்றை குறிப்பிடலாம்.
சரி வாழை ஏற்றுமதி தொடர்பாக முக்கிய தளங்களில் வந்த செய்தியை இங்கு பார்க்கலாம்
டெய்லி நியூஸ்
இலங்கையில் உள்ளுரில் உற்பத்தி செய்யப்படும் வாழைப் பழங்களின் முதலாவது தொகுதி எதிர்வரும் நவம்பர் மாதம் சர்வதேச சந்தைக்கு ஏற்றுமதி செய்ய உள்ளதாக இலங்கைய விவசாய அமைச்சர்  ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
உள்ளுர் கதலி  புளிப்பு வாழைப் பழங்களின் முதல் தொகுதி  நவம்பர் 26  2022 அன்று துபாய் சந்தைக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
விவசாய மாதிரித் தோட்டத் திட்டத்தின் கீழ் ராஜாங்கனை பிரதேசத்தில் பயிரிடப்பட்ட வாழைத் தோட்டத்திலிருந்து பெறப்பட்ட அறுவடையில் 12 500 கிலோ புளிப்பு வாழைப்பழத்தை துபாய் சந்தைக்கு விடுவிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் தெரிவித்துள்ளார். விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்   மேலும் தெரிவித்தார்.
நியூஸ் வயர்
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியைத் தணிக்கும் வகையில் அன்னியச் செலாவணியை ஈட்டும் நோக்கில் ராஜாங்கனை புளிப்பு வாழைத் திட்டம் 200 ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டுள்ளது. இதன் முதல் தொகுதி ஏற்றுமதி செய்யப்பட்ட பிறகு ஒவ்வொரு சனிக்கிழமையும் துபாய் சந்தைக்கு 12500 கிலோ புளிப்பு வாழைப்பழங்கள் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுஎன்று அவர் கூறினார். (நியூஸ் வயர்)
கொழும்பு பேஜ் நீயூஸ்
கொழும்பு நியஸ் பேஜ் இன் படி உலக வங்கியின் உதவியுடன் விவசாய அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்பட்ட விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் ராஜாங்கனையில் மேற்கொள்ளப்படும் வாழைப்பயிர்ச் செயற்திட்டம் தற்போது மிகவும் வெற்றியடைந்து நாட்டிற்கு விலைமதிப்பற்ற வெளிநாட்டு வருவாயை ஈட்டியுள்ளதாகவும் இந்த அம்புல் (புளிப்பு) வாழைப்பயிர் சர்வதேச சந்தையை இலக்காகக் கொண்டு ஸ்தாபிக்கப்பட்டுள்ளதுடன் வாழைப் பயிர் அறுவடை பொதியிடல் போன்ற சகல செயற்பாடுகளையும் சர்வதேச தரத்திற்கமைய மேற்கொள்வதற்காக விவசாயிகளுக்கு விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப பயிற்சிகளும் வழங்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ராஜாங்கனை வாழைத்தோட்டம் வருடாந்தம் 152,264 கிலோ உயர்தர அம்புல் வாழைப்பழங்களை உள்ளூர் சந்தைக்கு வழங்குகின்றது. மேலும் இந்த வாழைப்பழங்கள் பல வெளிநாடுகளுக்கு வழங்கப்படுகின்றன மற்றும் ஒரு மெட்ரிக் டன் அமெரிக்க டாலர் 600-700 விலையில் விற்கப்படுகிறது.
ராஜாங்கனையில் புளிப்பு வாழையை பயிரிடும் விவசாயிகள் இவ்வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் அம்புல் வாழைப்பழங்களை ஏற்றுமதி செய்து நாட்டுக்கு 28000 அமெரிக்க டொலர்களை ஈட்ட முடிந்துள்ளதாக திட்டப்பணிப்பாளர் ரொஹான் விஜேகோன் குறிப்பிட்டார்.

விவசாய அமைச்சர் கருத்துத் தெரிவிக்கையில்,  விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட உள்ளூர் விவசாயிகளின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் வேலைத்திட்டம் தற்போது பல மாவட்டங்களில் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்துகிறது.

விவசாயிகள் பாரம்பரிய பயிர்ச்செய்கை கட்டமைப்பில் சிக்கியிருப்பதால் வருமானம் ஈட்டுவது கடினம் என குறிப்பிட்டார்.  விவசாயத்தில் புதிய அறிவு மற்றும் தொழில்நுட்பம் மற்றும் புதிய விதைகளைப் பயன்படுத்தி குறைந்த இடவசதியிலும் விவசாயிகள் அதிக வருமானம் பெறும் திறனை ராஜாங்கனை அம்புல் வாழைத் திட்டம் தெளிவாகக் காட்டுகிறது என்றார்.

Related posts

error: Alert: Content is protected !!