தொழில்நுட்ப துறையில் இந்த தசாப்தத்தில் முக்கியமான நிறுவனங்களில் முதன்மையானது கூகுள் ஆகும்.ஏராளமான சேவைகள் மற்றும் தொழில்நுட்கள் மூலம் அசைக்க முடியாத நிலையில் உள்ள கூகுளின் ஒரு சேவைதான் கூகுள் ஏர்த் ஆகும்.
கூகுளினது செய்மதிப்படங்கள் இந்த மென்பொருளில் கிடைக்கிறது.இது கணனி மற்றும் கையடக்கத் தொலைபேசிகளில் இயக்கப்படக்கூடியது.
கூகுள் ஏர்த் மூலம் கிடைக்கப்பெறும் நன்மைகள்
1.காணியினது வரலாறை அறிந்து கொள்ள முடியும்
30 வருடங்களுக்கு மேலான செய்மதிப்படங்களை கொண்டு காணி எப்போது விவசாயம் செய்யப்பட்டது காணி எப்போது திருத்தப்பட்டது என்பதை அறிந்து கொள்ள முடியும்இதன் மூலம் காணியின் அமைவிடத்தை அறிந்து கொள்ள முடிவதோடு வழிகாட்டியாகவும் இருக்கிறது.
2.காணியினது எல்லைகளை அறிந்து கொள்ள முடிகிறது.
காணி எல்லைகள் முன்னைய காலத்தில் கற்கள் பனைமரங்கள் மூலம் எல்லைப்படுத்தப்பட்டது.இதனால் ஏராளமான பிரச்சனைகள் உள்ளன.காணி பிடித்தல் பனைமரம் வெட்டுதல் வாய்க்கால் வரப்பு பிரச்சனைகளை விவசாயிகள் எதிர்கொள்ளப்படுகின்றன.இந்த தொழில்நுட்பம் மூலம் காணி எல்லைப்பிரச்சனைகளை தவிர்க்க முடியும்
3.காணியின் பரப்பளவினை அறிந்து கொள்ள முடிகிறது
விவசாய நடவடிக்கைக்காக காணியினை உழுதல் இரசாயண தெளிப்பு உரப்பாவணை போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது காணியினது அளவீடுகள் துல்லியமாக இல்லாததால் விவசாயிகள் மேலதீக செலவினை மேற்கொள்கின்றனர்.இந்த முறையில் துல்லியமாக காணியின் ஏக்கரளவினை அறிந்து கொள்ள முடியும்
4.நீர்நிலைகளது அமைவிடங்கள் தொடர்பான தகவல்களை பெறமுடியும்
நீர்நிலைகளது குளங்கள் அமைவிடங்கள் மற்றும் காணியளவு பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும்.