அசோலா என்பது நைதரசனை பதிக்ககூடிய பெரணிவகை தாவரமாகும்.மிகவும் பெரிய வளர்ப்புமுறை இல்லாது வளர்க்ககூடிய தாவரம் இதுவாகும்.கால்நடை உணவு மற்றும் நெல்விவசாயத்துக்கு பயன்படுத்தப்படக்கூடிய இந்த சிறுதாவரத்தினை பல காலமாக விவசாயிகள் சிலர் பயன்படுத்தி வந்தாலும் மிகக்குறுகிய காலத்தில் மக்கள் மத்தியில் பிரபல்யமடைந்து வருகிறது.
இயற்கை விவசாயம் பற்றிய விழிப்புணர்வு பலர் மத்தியில் உருவாகிய பின்னர் அசோலாவை போலவே அசோலாவின் அருமை மற்றும் தேவைப்பாடு அதிகரித்துள்ளது.
அசோலாவின் கேள்வி அதிகரித்துள்ளதை அறிந்த பலர் அசோலாவை உற்பத்தி செய்து பிறருக்கும் வழங்கி வருகின்றனர்.மிகச்சிலர் அசோலாவிற்கு அநியாய விலை நிர்ணயித்து விற்பணை செய்து வருகின்றனர்.கிலோ அசோலா ஆயிரத்திற்கும் விற்பணை செய்கின்றனர்.சிலர் இவற்றினை முகநூல் விளம்பரத்திற்கு கட்டணம் செலுத்தி விற்பணையும் செய்கிறார்கள்.பொதுவாக விவசாயம் சார்ந்த பொருட்களை அதிக விலைக்கு விற்க்கப்பட்டாலும் யாரும் பெரிதாக கண்டு கொள்வதில்லை.
எந்தப்பொருளையும் இணையத்தின் மூலமாக விற்பனை செய்யும் போது கட்டுப்பாடுகள் எதுவுமில்லை.ஆக அசோலாவை இணையம் மூலமாக அதிக விலைக்கு விற்பணை செய்வதை யாரும் தடுக்க முடியாது.எனவே இணையம் மூலம் அசோலா வாங்குபவர்களை தான் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
அதிக விலைக்கு விற்பனை செய்பவர்களிடமிருந்து வாங்குவதை தவிர்க்க வேண்டும்.ஆயிரம் ருபாய்க்கு அசோலா விற்பது அநியாயமாகும்.
நூறு ருபாய்க்கு மேல் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியது இல்லை.
நூறு ருபாய்க்கு அண்மித்த விலையில் அசோலாவை எங்கே பெறலாம்.
வடமாகாணத்துக்குரிய அணைத்து மாவட்ட விவசாயப்பண்ணைகளிலும் அசோலா கிடைக்கும். மாவட்ட விவசாயப்பண்ணைகளை தொடர்பு கொள்ள தொடர்புகளுக்கு
தேவைப்படும் போதெல்லாம் அதிக விலைக்கு அசோலா வாங்குவதை விட நாமே அசோலவை உற்பத்தி செய்து கொள்வது இலாபகரமானது.
சரி அசோலாவை வளர்ப்பது எப்படி
- நன்கு ஒளிபடக்கூடிய இடத்தில் (அதிக வெப்பம் இல்லாத இடத்தில்) சிறியளவில் தொட்டி ஒன்றில் நீரிட்டு சேதன உரத்தினையும் இட்டு அசோலாவினை விட்டால் போதும்
- இடையிடையே நீரினளவு அசோலாவின் பெருக்கத்தினை பார்த்துக் கொள்ள வேண்டும்.
- இரண்டு வாரங்களின் பின்னர் பெருகிய அசோலாவை அகற்றி பயன்படுத்தலாம்
அசோலாவை வளர்ப்பு பற்றி முழமையாக அறிந்து கொள்ள எமது முன்னைய பதிப்பினை பார்வையிடுங்கள்
