தொழில்நுட்ப தகவல்கள் பிரதானம் புதியவை

வீட்டுத்தோட்டத்திற்கு பயன்படுத்தக்கூடிய  40 வகையான சேதன உரங்கள்

இக்கட்டுரையின் pdf வடிவம் 40வது சேதன முறையின் கீழ் காணப்படுகிறது

எமது முன்னைய பதிவில் வீட்டத்தோட்டத்திற்கு பயன்படுத்த கூடிய 100 முக்கியமான குறிப்புக்கள் பற்றி பார்த்’திருந்தோம் இந்த பதிவில் வீட்டுத்தோட்டத்திலற்கு பயன்படுத்த கூடிய 40 சேதன உரம் பற்றி பார்க்க உள்ளோம்

சேதன உரம் 001. அரிசி கழுவிய நீர்

எமது வீடுகளில் நாம் உணவுக்காக அரிசி கழுவிய பின்னர் அரிசிகழுவிய தண்ணீரை நிலத்தில் ஊற்றிவீடுவோம் .அரிசி நீரில் காணப்படும் நீரை தாவரத்திற்கு வழங்குவதோடு அரிசி கழுவிய நீரில் காணப்படும் போசனை பொருட்களையும் தாவரத்திற்கு வழங்க முடியும்

 

சேதன உரம் 002. மீன் கழுவிய நீர்

அரிசி நீரைப்போலவே மீன் கழுவிய தண்ணீரையும் தாவரத்திற்கு வழங்கலாம் குறிப்பாக இலைவகை மரக்கறிகளுக்கு இவற்றினை வழங்குவது நல்லதுஇநல்ல வளர்ச்சியை உடனடியாக காண்பிக்கும்

சேதன உரம் 003. மண்புழு உரம்

மண்புழு உரத்தில் சாதாரணமான மண்ணை விட 5 மடங்கு நைதரசன் கிடைக்கின்றது.இதேபோன்று இருமடங்கு பொஸ்பரசும், 1 மடங்கு பொட்டாசும் காணப்படுகின்றது.மண்புழு உரத்தில் சாதாரணமான மண்ணை விட 1 மடங்கு அதிகமான நுண்ணங்கிகள் காணப்படுகின்றன.பயிர்களுக்கு நோய்,பீடைகளை தாங்கி வளரும்  தன்மை அதிகரிக்கும்.மண்புழு வயிற்றில் உருவாகும் ஆக்டினோ மைசிடிஸ் என்னும் பக்ரீரியா காற்றிலுள்ள நைதரசனை நிலத்தில் நிலை நாட்டும்.

மண்புழு உர உற்பத்தி பற்றி முழுமையாக அறிந்து கொள்ள https://agricultureinformation.lk/earthcompost/

சேதன உரம் 004. மாட்டெரு

நன்கு உக்கிய மாட்டெருவினை தாவர வளர்ச்சிக்காக பயன்படுத்த முடியும் ஏக்கருக்கு 4000 கிலோ என்ற அளவில் இடுதல் வேண்டும்

சேதன உரம் 005. ஆட்டெரு

“ஆட்டெரு அவ்வாண்டு, மாட்டெரு மறு ஆண்டு” – பழமொழி

நன்கு உக்கிய ஆட்டெருவினை தாவர வளர்ச்சிக்காக பயன்படுத்த முடியும் ஏக்கருக்கு 2000 கிலோ என்ற அளவில் இடுதல் வேண்டும்

 

சேதன உரம் 006. கூட்டெரு

பணம் இல்லாமல் எளிய முறையில் கூட்டெருவினை தயாரித்து சேதன முறையில் விவசாயம் செய்ய முடியும்.

சேதன உரம்/கூட்டெரு தயாரிக்கும் முறை  பற்றி முழுமையாக அறிந்து கொள்ள  : https://agricultureinformation.lk/சேதனஉரம்கூட்டெருதயாரி/

சேதன உரம் 007. கோழியெரு

கோழி எரு மக்கும் பொழுது வெளியாகும் அம்மோனியா சுற்றுப்புறச் சூழல் மாசுபடுதலை அதிகரிப்பது மட்டுமல்லாமல் எருவின் உர மதிப்பையும் குறைக்கிறது. ஏனென்றால் கோழிப்  கழிவில் பொதுவாக தழைச்சத்து அதிகமாகவும், கரிமம் – தழைச்சத்தின் விகிதம் குறைவாகவும் உள்ளது. கோழிப் கழிவில் 60% தழைச்சத்தானது யூரிக் அமிலம் மற்றும் யூரியாவாக உள்ளது

சேதன உரம் 008. பன்றி கழிவு

பன்றி என்றால் சாக்கடைகளில் சுற்றித்திரியும் உயிரினம் என்பது நம்மில் பெரும்பாலனவர்களின் நம்பிக்கை. ஆனால் அப்படி அல்லஇ பன்றி பெருஞ்செல்வம் தரக்கூடியது.அதேபோல் பன்றிக்கழிவும் தாவர வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படக்கூடியது

சேதன உரம் 009. செறிவூட்டப்பட்ட  சேதன உரம்

இரசாயண உரம் இல்லாத சந்தர்ப்பத்தில் சேதன உரத்தினது போசணைப்பெறுமதியை அதிகரித்துக் கொள்ள வேண்டும்.சேதன உரத்தில் தாவர வளர்ச்சி மற்றும் விருத்திக்கு தேவையான மூலக்கூறுகளை செறிவாக்கி கொள்ளுதலை செறிவூட்டல் எனலாம்.அவ்வாறு செறிவூட்டப்பட்ட உரம் செறிவூட்டப்பட்ட சேதன உரம் என அழைக்கப்படும்.

செறிவூட்டப்பட்ட  சேதன உர தயாரிப்பு முறை பற்றி முழுமையாக அறிந்து கொள்ள https://agricultureinformation.lk/compost/

சேதன உரம் 010 மனித சிறுநீர்

மனித சிறுநீரில் தாவர வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.இதே பொருட்கள் தான் இரசாயன உரங்களிலும் காணப்படுகிறது. சிறுநீர் இலவசமாகக் கிடைக்கும் அதே போல் பயன்படுத்த எளிதான மற்றும் பாதுகாப்பான உரமாகும்.

சிறுநீரை உரமாக பயன்படுத்துவது பற்றி முழுமையாக அறிந்து கொள்ள  https://agricultureinformation.lk/urinetourea/

சேதன உரம் 011 மாட்டின் சிறுநீர்

ரசாயன உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு மாற்றாக பசு கோமியம் இயற்கை உரமாக அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதனால் பயிர் விளைச்சலுடன் மண்ணின் தரமும் அதிகரிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

சேதன உரம் 012 வௌவால் எச்சம்

உலக இயற்கை உர தொழிற்துறைக்கான மூலப்பொருள் இப்போது ஒரு புதிய இடத்தில் வெளவால் எச்சம் இருந்து வருகிறது.

சேதன உரம் 013 பகுதியாக கருக்கிய உமி

பகுதியாக கருக்கிய உமியை ஏக்கருக்கு 250 கிலோ இடுதல் வேண்டும்.இதன் மூலம் மண்ணில் நீர் பற்றுதிறன் கற்றயன் பரிமாற்றக்கொள்ளவுகள் அதிகரிப்பதால் மண்ணிற்கு வழங்கப்படும் மூலகங்களை தக்க வைத்துக்கொள்ளமுடியும்.  உமியை பகுதியாக கருக்குவதற்கு குந்தனி எனும் உபகரணத்தை பயன்படுத்தலாம்.

சேதன உரம் 014 உயிர்பசளையாகிய அசோலா

ஏக்கருக்கு 80 தொடக்கம் 100 கிலோ என்ற அளவில் இடுதல் வேண்டும்.இவ்வாறு  அசோலாவை இடுவதன் மூலம் மண்ணை வளமாக்கி கொள்வதோடு விளைச்சலையும் அதிகரிக்க முடியும்

சேதன உரம் 015 பஞ்சகவ்வியா

தொடரும் 15 தொடக்கம் 21 வரை பஞ்சகவ்வியாவை  தயாரிக்கும் முறை பற்றி கூறப்படுகிறது 7 வேறுபட்ட வழிகளில் பஞ்சக்கவியாவை தயாரிக்கலாம்

 • கையால் பிசைவதற்கு முன் கையை சவர்க்காரம் இட்டு கழுவவும்
 • சாணத்தில் காணப்படும் புல் வைக்கோல் கூளத்தை அகற்றல்
 • வாழைப்பழம் கனிந்திருக்க வேண்டும்.
 • பிசைந்து அரைத்து பாவிக்கவும்.
 • உடன் சாணம் பாவிக்கவும்
முறை -1 தேவையான பொருட்கள்
 • சாணம் – 1 கிலோ
 • சலம் – 1 லீற்றர்
 • பால் 400 ml
 • தயிர் 400 ml
 • நல்லெண்ண ய் – 100 ml
 • கள் 400ml
 • கருப்பஞ்சாறு 600 ml
 • இளநீர் 600ml
 • வாழைப்பழம் 3
தயாரிப்பு முறை
 • சாணத்தையும் நல்லெண்ணையையும் பிசைந்து கலக்க வேண்டும்
 • தொடர்ந்து 3 நாட்களுக்கு காலை மாலை பிசைந்து விட வேண்டும்.
 • மூடி வைக்க வேண்டும்.
 • 4ம் நாள் மீதி பொருட்களை இட்டு நன்கு கலக்கி விட வேண்டும்.
 • 15 நாட்கள் மூடி வைத்திருக்க வேண்டும்
 • தினமும் கலக்கி விட வேண்டும்.
 • 18 ம் நாள் கலவையை வடித்து பயன்படுத்தலாம்.

குறிப்பு:-கள் கிடைக்காத விடத்து இள நீரை போத்தலில் ஒரு வாரத்துக்கு அடைத்து வைத்திருந்து பாவிக்கலாம் கருப்பஞ்சாறு கிடைக்காதவிடத்து 100g சக்கரையை 4 லீற்றர் நீரில் கலந்து பாவிக்கலாம்.6மாதங்களுக்கு கலவையை வைத்து பாவிக்கலாம்.இடையிடையே இளநீர், கருப்பஞ்சாறு சேர்த்து புதுப்பிக்க வேண்டும்.

சேதன உரம் 016. முறை 2 ( தமிழ் நாடு பல்கலைக்கழக சிபார்சு ) தேவையான பொருட்கள்

 • சாணம் 1 KG
 • சலம் 600 ml
 • பால் 400 ml)
 • தயிர் 400 ml
 • நெய் 200ml
 • கருப்பஞ்சாறு 600 ml
 • இளநீர் 600 ml
 • வாழைப்பழம் 200 g
தயாரிப்பு முறை
 • சாணத்தையும் நெய்யையும் கையால் பிசைந்து கலக்க வேண்டும்.
 • 3 நாட்கள் மூடி வைத்திருக்க வேண்டும்.
 • 4ம் நாள் சாண நெய்க்கலவையுடன் ஏனைய பொருட்களை சேர்த்து நன்கு கலக்கி விட வேண்டும்.இறுதியாக கவனிக்க வாழைப்பழத்தை பிசைந்து அரைத்து கலந்து விட வேண்டும்.
 • 12 நாளின் பின் பயன்படுத்தலாம்

சேதன உரம் 017. முறை 3 தேவையான பொருட்கள்

 • சாணம்
 • சலம்
 • இளநீர்
 • தயிர்
 • சக்கரை
 • வாழைப்பழம்
 • பால்
 • நெய்
 • நீர்

தயாரிக்கும் முறை

 • சாணத்தையும் நெய்யையும் பிசைந்து கலந்து 2 நாட்கள் மூடி வைத்திருக்க வேண்டும்.
 • 3ம் நாள் கலவைக்கு 10 லீற்றர் நீரும் 10 லீற்றர் சிறு நீரும் கலந்து 15 நாட்கள் வைத்திருக்க வேண்டும்.
 • 16 ம் நாள் மேற்பட்ட கலவையுடன் ஏனைய பொருட்களை சேர்த்து நன்கு கலக்க வேண்டும்
 • 25 நாட்கள் மூடி வைத்திருந்து பாவிக்க வேண்டும்.

சேதன உரம் 018. முறை 4 தேவையான பொருட்கள்

 • சாணம் 1kg
 • சலம் 1
 • நெய் 200 மி.லீற்றர்
 • பால் 400 ml
 • தயிர் 400 ml
 • இளநீர் 600 ml
 • வாழைப்பழம் 2
 • சக்கரை – 50 கிராம்
 • நீர் 1/4 லீற்றர்
 • ஓமம் சிறிதளவு

தயாரிக்கும் முறை

 • சாணம், சலம், நெய் மூன்றையும் கலந்து 3 நாட்களுக்கு மூடி வைக்க வேண்டும்.
 • ஒரு நாளைக்கு 4 தடவை கலக்க வேண்டும்.
 • 28 நாட்களின் பின்னர் பாவிக்கலாம்.

சேதன உரம் 019. முறை 5 தேவையான பொருட்கள்

 • சாணம் 1 % Kg
 • சலம் 750 ml
 • சோயா | கடலை
 • பிண்ணாக்கு 375 கிராம்
 • பால் 5 லீற்றர்
 • தயிர்5 லீற்றர்
 • வாழைப்பழம் 3
 • இளநீர் 750 ml
 • கள் 750 ml
 • கருப்பஞ்சாறு 750 ml

தயாரிக்கும் முறை

 • எல்லாவற்றையும் பாத்திரத்திலிட்டு கலக்கி வைக்க வேண்டும்
 • பாத்திரத்தை இறுக்கி மூட வேண்டும்.
 • மண் பாவனையாயின் வாழை சீலையால் கட்டி விட வேண்டும்
 • தினம் தோறும் காலை, மாலை கலக்க வேண்டும்.
 • 25ம் நாள் கலவையை எடுத்து வடித்து பயன்படுத்தலாம்

குறிப்பு

 • தினமும் இரு முறை கலக்கினால் பழுதடையாமல் 6 மாதம் வரை வைத்து பாவிக்கலாம்.
 • கலவை இறுகினால் நீர் அல்லது இளநீர் தேவையானளவு சேர்த்து இளக்கலாம்
 • 30 ml கலவையை 1 லீற்றர் நீரில் கலந்து விசிறவும்.

சேதன உரம் 020. முறை 6 தேவையான பொருட்கள்

 • சாணம் – 1 kg
 • சலம் – 600 ml
 • பால் – 500 ml
 • தயிர் – 500 ml
 • நெய் – 200g
 • கருப்பஞ்சாறு – 200ml
 • இளநீர் – 200 ml
 • வாழைப்பழம் – 200g

 

தயாரிக்கும் முறை

 • சாணத்தையும் நெய்யையும் கலந்து பிசைந்து விட வேண்டும்.
 • 3 நாட்கள் வரை தினமும் பிசைய வேண்டும்.
 • 4 ம் நாள் ஏனைய பொருட்களை கரைத்து கலந்து விட வேண்டும்.
 • 5ம் நாளிலிருந்து தினமும் 20 நிமிடம் நன்றாக கலக்க வேண்டும்.
 • 15 ம் நாள் வடிகட்டி எடுத்து பாவிக்கலாம்.

சேதன உரம் 021. முறை 7 தேவையான பொருட்கள்

 •  சாணம் -1Kg
 • சலம் – 600ml
 • நெய் – 200g
 • பால் – 400 ml
 • தயிர் – 400ml
 • இளநீர் -600ml
 • சக்கரை-200g

தயாரிக்கும் முறை

 • சாணம் , சலம், நெய் ஆகிய மூன்றையும் பாத்திரத்திலிட்டு கலந்து பின் மூடி வைக்க வேண்டும்.
 • ஒரு வாரத்துக்கு தினமும் காலை , மாலை கலக்க வேண்டும்.
 • ஒரு வாரத்தின் பின் ஏனைய பொருட்களைச் சேர்த்து நன்கு கலக்கி வைத்து ஒரு வாரத்தின் பின் பயன்படுத்தலாம்.

சேதன உரம் 022. ஆட்டு ஒட்டம்

பஞ்ச காவ்யா பசுவின் 5ம் பொருளை பயன்படுத்தி தாயரிப்பது போன்று இங்கு ஆட்டின் புழுக்கை , சலம் பால், தயிரை பயன்படுத்தி தயாரிப்பதே ஆட்டு ஒட்டம் எனப்படுகிறது. பசு மாடு இல்லாதவர்கள் ஆட்டை வளர்த்து பயன்பெறலாம்.

தேவையான பொருட்கள்

 • ஆட்டு புழுக்கை 1 kg
 • ஆட்டு சலம் 400ml
 • ஆட்டு பால் – 400ml
 • ஆட்டு தயிர் – 400ml
 • ஈஸ்ட் – 150g
 • வாழைப்பழம் – 2
 • பசு நெய் -200g
 • கருப்பஞ்சாறு – 400 ml
 • இளநீர் – 400ml
 • கள் – 400ml)
 • சக்கரை – 150g
 •  நீர் – 1 l

தயாரிக்கும் முறை

 • புழுக்கையையும் சலத்தையும் கலந்து ஓர் இரவு முழுவதும் வைக்க வேண்டும்
 • மறுநாள் காலை பசு நெய்யை கலந்து 4 நாள் வைத்திருக்கவும்
 • 4ம் நாளின் பின் மீதமுள்ள பொருட்களை சேர்த்து கலக்க வேண்டும்
 • 2 வாரங்களுக்கு தினமும் காலை, மாலை கிளறி விடவும்
 • 18 ம் நாள் கலவையை வடித்து பயன்படுத்தலாம்.
 • பாவனையளவு 30 ml கலவையை 1 லீற்றர் நீரில் கலந்து பாவிக்கலாம்

சேதன உரம் 023 மீன் அமினோஅமிலக்கரைசல்

உணவுக்குப் பயன்படாத மீன் கழிவுகளுடன் சம அளவு பனை வெல்லம் சேர்த்து கலக்க வேண்டும். இதனை ஒரு பிளாஸ்டிக் வாளியில் அல்லது டப்பாவில் போட்டு காற்று புகாமல் மூடி வைக்க வேண்டும். நாற்பது நாட்கள் கழித்து தேன் போன்ற நிறத்தில் ஒரு திரவம் வாளிக்குள் இருக்கும். மீன் கழிவுகள் அடியிலேயே தங்கியிருக்கும். இந்த திரவத்திலிருந்து கெட்டை வாடை வீசாது. பழவாடை வீசும். இப்படி பழவாடை வீசினால் மீன் அமினோ அமிலம் தயார் என்பதைத் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு தயார் செய்யப்படும் மீன் அமினோ அமிலத்தை 200 மில்லி எடுத்து 10 லிட்டர் தண்ணீரில் கலந்து பயிர்களின் மேல் தெளிக்கலாம். ஒரு முறை தயார் செய்யப்படும் மீன் அமினோ அமிலத்தை 6 மாத காலம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

சேதன உரம் 024 சாதம் வடித்த கஞ்சி

அரிசி வடிகட்டிய கஞ்சி நல்ல வளர்ச்சியூக்கி. ஏனெனில் சாதத்தில் இருக்கக்கூடிய அதிகமான கார்போ ஹைட்ரட் கலந்திருக்க வாய்ப்புள்ளது இதை நேரடியாக கொடுத்தால் எறும்பு தொல்லைகள் வரலாம் , அதனால் மக்கவைத்து கொடுப்பது சிறந்தது.

100 லிட்டர் தண்ணீரில் 5 லிட்டர் அரிசி கஞ்சி கலந்து, அத்துடன் 1கிலோ நாட்டு சக்கரையும் சேர்த்துக் கலவையாக்கிக்கொள்ளலாம்.
இந்தக் கலவையை மூன்று நாள் மக்கவைத்து பயிர்களில் தெளிப்பதால் சிறந்த பலன் கிடைக்கும்

சேதன உரம் 025 சமையலறைக்கழிவுகளை திரவப்பசளையாக பயன்படுத்தலாம்

வீட்டில் கிடைக்கின்ற சமையல் கழிவுகளை சிறிய சிறிய துண்டுகளாக்கி அதனை ஒருபோத்தலில் இட்டு 21 நாட்களின் பின்னர் தாவரங்களுக்கு தெளிக்கலாம்

சேதன உரம் 026 பழக்கரைசல் தயாரித்தல்

இது பயிர்களுக்கு நல்ல ஊட்டசத்து மருந்தாக செயல்படுகிறது
பப்பாளி 2 கிலோ
நெல்லி 2 கிலோ ,
கொய்யா 2 கிலோ
வாழை, 2 கிலோ
பனம் 2 கிலோ
மாட்டு சிறுநீர் 1 லிட்டர்

செய்முறை :

பழத்தை தட்டி சுமார் 15 லிட்டர் கொள்ளவுள்ள பாத்திரத்தில் போட்டு இறுக்கமாக மூடிவிடவும், 2 நாள் கழித்து மாட்டு சிறுநீர் 1 லிட்டர்
ஊற்றி நன்கு கலக்கி விடவும் . தினமும் கலக்கி விடவும் .30 நாள் கரைசல் தயார் .

பயன்பாடு :

முப்பது நாள் கழித்து பழ கரைசல் பயிர்களுக்கு பயன் படுத்தலாம் . 1 லிட்டர் பழக்கரைசல் 10 லிட்டர் தண்ணீருடன் கலந்து பயிர்களுக்கு கொடுக்கலாம்பயிர்களின் நோயெதிர்ப்பு மற்றும் வளர்ச்சியை அதிகரிக்கும் மிகச்சிறந்த பயிர் ஊக்கியாகும்.

குறிப்பு:
அழுகிய பழகங்களை பயன்படுத்தக் கூடாது ஏனென்றால் அதில் பூஞ்சை இருக்கும் அதனால் பாதிப்புகள் உண்டாகும்

சேதன உரம் 027 கம்போஸ்ட் உரம்

பண்ணைக் கழிவுகளில் இருந்தும், இலை, சருகு மற்றும் குப்பைகளில் இருந்து ஒரு மாதத்துக்குள் மக்க வைத்து இந்த உரம் தயாரிக்கப்படுகிறது

சேதன உரம் 028. தென்னை தும்பு உரம்

தென்னை நார்களில் 50 சதவீதத்திற்கு மேல் லிக்னின் மற்றும் செல்லுலோஸ் உள்ளது. இவற்றை மக்க வைத்து இந்த வகை உரம் தயாரிக்கப்படுகிறது.

சேதன உரம் 029. புண்ணாக்கு உரம்

ஆமணக்கு, நிலக்கடலை, எள், பருத்தி, தேங்காய், புங்கன், இலுப்பை, வேப்பங்கொட்டை ஆகியவற்றில் இருந்து தயாரிக்கப்டும் புண்ணாக்குகளைக் கொண்டு இந்த வகை உரம் தயாரிக்கப்படுகிறது.

சேதன உரம் 030. அவரையினத்தாவர இலைகளிலிருந்து திரவப்பசளை

அவரையத் தாவர இலைகளைச் சிறு துண்டுகளாக வெட்டிப்  பீப்பாவில் இட்டுக் கொள்ளுங்கள்.

அப்பீப்பாவில் நீரை இட்டு மூடியால் மூடி இரண்டு வாரங்கள் விடவும்.

இரண்டு வாரங்களின் பின் அப்பசளையைப் பயன்படுத்தமுடியும்

சேதன உரம்031 அமிர்த கரைசல்

மாட்டுச் சாணம், கோமியம் ஆகியவற்றை வாளியில் எடுத்துக் கொண்டு, அதில் வெல்லம் மற்றும் தண்ணீர் ஆகியவற்றைச் சேர்த்து 24 மணிநேரம் நிழலான இடத்தில் வைக்க வேண்டும் இப்போது அமிர்த கரைசல் தயார். 15 நாளைக்கு ஒருமுறை கொடுக்கலாம். தேவைப்பட்டால் வாரம் ஒருமுறையும் கொடுக்கலாம். ஒரு பங்கு கரைசலுடன் பத்து பங்கு தண்ணீர் சேர்த்து கரைசலுக்கு கொடுக்கலாம்.

சேதன உரம்032 தேமோர் கரைசல்

புளித்த மோர் – 5 லிட்டர், தேங்காய்ப்பால் – 1 லிட்டர், தேங்காய் துருவல் – 10 தேங்காய், அழுகிய பழங்கள் – 10 கிலோ ஆகிய பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும். புளித்த மோர் மற்றும் தேங்காய்ப்பால் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து ஒரு மண்பானை அல்லது பிளாஸ்டிக் கேனில் இட்டு, நிழலான இடத்தில் வைக்க வேண்டும். இவற்றுடன் 10 தேங்காய்களின் துருவல், அழுகிய பழங்கள் 10 கிலோ இவற்றை பொட்டலம் போல் கட்டி அதில் போட வேண்டும். தினமும் கரைசலைக் கலக்கி வரவேண்டும். ஏழு நாட்களில் தேமோர்க் கரைசல் தயாராகி விடும். 8-ம் நாள், ஒரு லிட்டர் தண்ணீரில் 50 மில்லி தேமோர்க் கரைசல் என்ற விகிதத்தில் கலந்து, காலை அல்லது மாலை நேரத்தில் செடிகளுக்குத் தெளிக்கலாம்.

சேதன உரம் 033 பீஜாமிர்தம்

 • பசு மாட்டு சாணம் 5 கிலோ
 • பசு மாட்டு கோமியம் 5 லிட்டர்
 • சுத்தமான சுண்ணாம்பு 50 கிராம்
 • ஜீவனுள்ள மண் ஒரு கைப்பிடி அளவு

பீஜாமிர்தம் தயாரிக்கும் முறை

முதல் நாள் மாலை 6 மணிக்கு மேற்ச் சொன்ன அனைத்தை பொருள்களையும் ஒன்றாக ஒரு கலனில் கலந்து வைத்துவிட வேண்டும். பின்னர் இந்த கலவையை மறுநாள் காலை 6 மணி வரை நன்றாக ஊற விடவேண்டும். இக்கலவையே பீஜாமிர்தம்மாகும். முதல் நாள் மாலையில் கலந்து வைத்தால் அடுத்த நாள் காலையில் இதை விதைகளின் மேல் தெளிக்கலாம்.

சேதன உரம்034 வளர்ச்சியூக்கி

கடையில் அழுகும் நிலையில் அல்லது அழுகிய பழங்களை (வாழை, பப்பாளி, சீதா பழம், பரங்கிபழம் ) வாங்கி வந்து நன்றாகப் பிசைந்து அதனுடன் 1 கிலோவிற்கு 1/2 கிலோ என்ற அளவில் நாட்டுச்சக்கரை (வெல்லம்) சேர்த்து நன்றாகக் கலக்கி ஒரு பிளாஸ்டிக் டிரம்மில் / பிளாஸ்டிக் வாளியில் மூடி வைக்கவும், 15 நாட்கள் நன்றாக நொதிக்க விட வேண்டும், இடைப்பட்ட நாட்களில் காலையும்., மாலையும் நன்கு கிளறி விட வேண்டும். 15வது நாள் அக்கரைசலை வடிகட்டி 1 லிட்டருக்கு 10 லிட்டர் தண்ணீர் சேர்த்து ஸ்பிரே செய்தால் நல்லதொரு வளர்ச்சி கண்கூட தெரியும். இதனால் பயிர்களுக்கு இலை வழி ஊட்டம் கிடைக்கும்.

சேதன உரம் 035 கன ஜீவாமிர்தம்

பசுஞ்சாணம் 100 கிலோ, 2 கிலோ வெல்லம், 2 கிலோ பயறு மாவு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து கொள்ள வேண்டும். உப்புமா பதம் வருவதற்கு எவ்வளவு தேவையோ அந்த அளவிற்கு நாட்டு மாட்டுச் சிறுநீரை கலக்க வேண்டும். பின்பு உருட்டி நிழலில் காயவைத்து தேவைப்படும் போது உதிர்த்துப் பயன்படுத்தலாம்

சேதன உரம் 036 ஜீவாமிர்தம் தயாரிப்பு

நாட்டு பசுஞ்சாணம் – 10 கிலோ, நாட்டு பசுங்கோமியம் – 5 முதல் 10 லிட்டர், வெல்லம் – 2 கிலோ (அ) கரும்புச்சாறு – 4 லிட்டர், தானிய மாவு – 2 கிலோ (தட்டைப்பயறு (அ) துவரை (அ) கொள்ளு (அ) கொண்டைக் கடலை (அ) உளுந்து), காட்டின் மண் – கையளவு, தண்ணீர் – 200 லிட்டர் (குளோரின் கலக்காதது) ஆகிய பொருட்கள் தேவை. 00 லிட்டர் தண்ணீரில் சாணம், கோமியம், வெல்லம் அல்லது கரும்புச்சாறு, தானியமாவு ஆகியவற்றுடன் கையளவு மண் சேர்த்து ஒரு தொட்டியில் இட்டுக் கலக்க வேண்டும். தினமும் 3 முறை 3 நாட்களுக்குத் தவறாமல் கலக்கி விடவேண்டும். ஒரு கிராம் மண்ணில் 5 லட்சம் கோடிக்கும் அதிகமான நுண்ணுயிரிகள் இருக்கின்றன. ஒவ்வொரு 20 நிமிடத்துக்கும் இந்த நுண்ணுயிரிகள் இரட்டிப்பு அடைகின்றன. இவ்வாறு கலக்கப்பட்ட இந்த நுண்ணுயிர் கலவைதான் ஜீவாமிர்தம். தெளிப்புக்காக எடுக்கும்போது கரைசலின் மேற்புறத்தில் இருக்கும் தெளிவை மட்டும் எடுத்து வடிகட்டிப் பயன்படுத்த வேண்டும். ஒவ்வொரு பயிருக்கும் குறிப்பிட்ட அளவு வடிகட்டிய ஜீவாமிர்தத்தை, குறிப்பிட்ட அளவு நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

சேதன உரம்037 அரப்பு மோர் கரைசல்

புளித்த மோர் – 5 லிட்டர், இளநீர் – 1 லிட்டர், அரப்பு இலைகள் – 1 முதல் 2 கிலோ, 500 கிராம் பழக்கழிவுகள் அல்லது பழக்கழிவுகளில் இருந்து எடுக்கப்பட்ட 1 லிட்டர் சாறு ஆகிய பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தக் கரைசல் கலவையை மண்பானை அல்லது பிளாஸ்டிக் வாளியில் ஒருவார காலத்திற்கு வைத்திருக்க வேண்டும். இந்த ஒருவார காலத்தில் நொதிக்கத் தொடங்கி விடும். இந்த நொதித்த கரைசலே அரப்பு மோர் கரைசல் ஆகும். அரப்பு இலைத் தூள் பயன்படுத்துவதாக இருந்தால், பழக் கலவைகளுக்குப் பதிலாக பழச்சாறு பயன்படுத்த வேண்டும். நான்கு பொருட்களையும் கலந்து அதனை ஏழு நாட்களுக்கு நொதிக்க விட வேண்டும். ஒரு லிட்டர் அரப்பு மோர் கரைசலுடன் 10 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்க வேண்டும்

 

சேதன உரம்0 38 முட்டை அமிலம்

தேவையான பொருட்கள்: 5 முட்டை, 10-15 எலுமிச்சை பழங்களின் சாறு மற்றும் 250 கிராம் வெல்லம் .

தயாரிப்பு:

 • முட்டையை ஜாடியில் போட்டு முற்றிலும் மூழ்கும் வரை எலுமிச்சை சாறு ஊற்ற வேண்டும்.
 • பத்து நாட்கள் வரை மூடி வைக்கவும் . பத்து நாட்களுக்கு பிறகு முட்டையை உடைத்து கரைசல் தயார் செய்ய வேண்டும்.
 • அடர்த்தியான வெல்லப் பாகை சம அளவு சேர்த்து பத்து நாட்களுக்கு வைத்து இருக்க வேண்டும்.
 • கரைசல் தெளித்தலுக்கு தயாராகி விடும்.
 • இது மீன் அமிலத்தைப் போன்று தாவரங்களுக்கு ஒரு சிறந்த ஊட்டச்சத்து மற்றும் தாவர வளர்ச்சியை அதிகரிக்கும்.
 • பயன்பாடு: ஒன்று முதல் இரண்டு மில்லி என்ற அளவில் ஒரு லிட்டர் தண்ணீருடன் சேர்த்து தெளிக்கலாம் ”

சேதன உரம் 039  மண்புழுத் திரவம்

மண்புழு வடிநீர் என்பது மண்புழுக்களிடமிருந்து கிடைக்கும் திரவ உரம். இது உரமாக மட்டுமின்றி பூச்சிக் கொல்லியாகவும் பயன்படுகிறது. இந்த தெளிப்பானை தெளிப்பதன் மூலம் பழ மற்றும் காய்கறி செடிகளின் தரத்தையும் அளவையும் உயர்த்தலாம்.

சேதன உரம் 040 உயிர்வாயுத் தொகுதியின் மீதிகள்

சமையலறைக் கழிவுகளிலிருந்து உயிர்வாயு தயாரிப்பு மேற்கொள்ளப்படும் போது எஞ்சுகின்ற கழிவுகளை உக்க வைத்து தாவரங்களுக்கு உரமாக பயன்படுத்த முடியும்

 

 

Related posts

error: Alert: Content is protected !!