நிகழ்வுகள்

வீட்டுத்தோட்டமும் தேனீ வளர்ப்பு முறையும்

தேனீ வளப்பும்

வீட்டுத்தோட்டமும் தேனீ வளர்ப்பு முறையும்

வேர்ல்ட்விசன் நிறுவனத்தினரின் காலநிலைக்கு சீரமைவான விவசாய திட்டம் கிளிநொச்சியில் சிறப்பாக நடைபெற்று வருகிறது

தேனீவளர்ப்பை ஊக்குவிக்கும்
முகமாக மக்களுக்கு
“தேனீக்களுக்கு வாழ்விடம் அளிப்போம்” ( Home for Homeless ) எனும் தொனிப்பொருளில் தேனீவளர்ப்பின் முக்கியத்துவமும் அவசியமும் மதுரம் தேனீப்பண்ணையினரால் விளக்கப்பட்டு தேனீப்பெட்டிகளும் வழங்கப்பட்டன

இந்த திட்டத்தில் கண்டவளைப் பிரதேசத்தில் இணைந்து பணியாற்றும் நூறு வரையிலான விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு தொடர்பான முழுமையான பயிற்சிகளும் தேனீ வளர்ப்பு பெட்டிகளும் வழங்கப்பட்டன

யார் இந்த மதுரம் தேனி வளர்ப்பு பண்ணையினர்

காரை நகரைச் சேர்ந்த இவர்கள் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக இயற்கை விவசாயம் மற்றும்
தேனீ வளர்ப்பு தொடர்பாக முழுமையாக ஈடுபட்டு வருகின்ற குழுவாகும்.

இலங்கையின் பல பகுதிகளில் களப்பயணம் மேற்கொண்டு தேனீக்கள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்

வேர்ல்ட்விசன் நிறுவனத்தினரின் காலநிலைக்கு சீரமைவான விவசாய திட்டத்திலும் பங்கு பெற்றி தமது ஆலோசனைகளை விவசாயிகளுக்கு வழங்கியிருந்தனர்

விவசாயி ஒருவரின் வீட்டில் இருந்த தேன்குடி ஒன்று விவசாயிக்கு வழங்கப்பட்ட தேனீ வளர்ப்பு பெட்டியினுள் மாற்றி வைக்கப்பட்டு நேரடி பயிற்சியும் வழங்கப்பட்டது

நேரடியாக விவசாயிகளது களத்திற்கு சென்று தேனீ வளர்ப்பு பற்றிய நுட்பங்களை விவசாயிகளுக்கு கற்பித்தனர்

இந்த நிகழ்வை இந்திரா குழு
( Inthira Group Agrinthira Agri Farm Consultancy )
நேர்த்தியாக ஏற்பாடு செய்திருந்தது.

பல விவசாயிகள் ஆர்வத்துடன் பங்கேற்றிருந்தனர்
விவசாயிகள் தங்களது சந்தேகங்களை கேட்டு தெளிவடைந்தர்கள்

குறித்த நிகழ்வானது வேர்ல்ட்விசன் நிறுவனத்தினரின் காலநிலைக்கு சீரமைவான விவசாய திட்டத்தின் ஒரு பகுதியாகும்

கட்டுரையாக்கம்
ரஜிதன் மகேஸ்வரன்

Related posts

error: Alert: Content is protected !!