2022 ஆண்டில் புதிய நியமனங்கள் ஏதும் இல்லை என்று அரசாங்கம் அறிவித்தாலும் சில பதவிகளுக்கான பரீட்சைகளை நடாத்த விவசாயத்திணைக்களம் தீர்மானித்து உள்ளது.அந்த வகையில் என்னபரீட்சைகள் என்ன பதவிக்கு நடாத்தப்பட உள்ளது எப்போது நடைபெறும் என்பதை பார்ப்போம்
MN 01 சேவை வகுதியின் விதை தொழில்நுட்பவியலாளர் / தேனீ வளர்ப்பு செய்து காட்டுநர் பதவிகளுக்கு இணைத்துக் கொள்வதற்கான போட்டிப் பரீட்சை
- விண்ணப்பபடிவங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் இறுதி திகதி-பின்னர் அறிவிக்கப்படும்
- பரீட்சையினை நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள கால எல்லை- மார்ச் மாதம்
விவசாய உற்பத்தி தொழில்நுட்பம் தொடர்பான உயர் தேசிய டிப்ளோமா பாடநெறிக்காக (NVQ -06) மாணவர்களை இணைத்து கொள்வதற்கான நேர்முகப் பரீட்சை
பரீட்சையினை நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள கால எல்லை மே மாதம் 1ஆம் வாரம்
விவசாய உற்பத்தி தொழில்நுட்பம் தொடர்பான தேசிய டிப்ளோமா பாடநெறிக்காக (NVQ -05) மாணவர்களை இணைத்து கொள்வதற்கான போட்டிப் பரீட்சை
பரீட்சையினை நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள கால எல்லை மே மாதம் 2ஆம் வாரம்
MT 01 சேவை வகுதியின் கீழ்வரும் பதவிகளுக்கு இணைத்து கொள்வதற்கான போட்டிப் பரீட்சை
தொழில்நுட்ப உதவியாளர் (விவசாய விரிவாக்கம் / விவசாய ஆராய்ச்சி) தொழில்நுட்ப உதவியாளர் (பொறியியல் – சிவில் / இயந்திரவியல், மின்னியல்)
பரீட்சையினை நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள கால எல்லை ஆகஸ்ட் – ஒக்டோபர் மாதம்
MT 01 சேவை வகுதியின் ஓவியர் பதவிக்கு இணைத்துக் கொள்வதற்கான போட்டிப் பரீட்சை
பரீட்சையினை நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள கால எல்லை செப்டம்பர் மாதம்