இந்த பதிவானது கஞ்சா செய்கை தொடர்பான விவசாய நடைமுறையைபற்றி தருவதாகும்.தவிர சட்டவிரோதமான முறையில் கஞ்சா செய்கையை ஊக்குவிப்பதல்ல.இலங்கையில் கடந்த டிசம்பர் மாதம் நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே இந்த யோசனையை நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ளார்.இது பலவிதமான வாதிபிரதிவாதங்களை உருவாக்கியிருந்த போதும் நாடாளுமன்றத்தில் கஞ்சாவை ஏற்றுமதிக்காக பயிர் செய்வதற்கான சட்டத்தை தயாரிக்க அனுமதி கிடைக்கப் பெற்றது. சட்ட மாஅதிபர் திணைக்களம் நீதி அமைச்சு ஆயுர்வேத திணைக்களம் இணைந்து சட்ட மூலத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவிக்கிறது.
இது தொடர்பான நீண்ட கருத்து வெளிப்படுத்கைகள் சமூக மட்டத்தில் பரவலாக காணப்படுகின்றமையை அவதானிக்க முடிகிறது.பிற பயிர்களை போல கஞ்சா பயிரும் செய்கை பண்ணப்படும் பயிராக மாறுகின்ற போது அதற்கான தகவல்களை முன்னதாகவே வழங்குகிறோம்.(தவிர சட்டவிரோதமான முறையில் கஞ்சா செய்கையை ஊக்குவிக்கவில்லை)
ஏற்றுமதியை நோக்கமாக கொண்ட கஞ்சா செய்கை சாதாரண முறையில் திருட்டுத்தனமாக நிலத்தில் விதைத்து அறுவடை செய்து திருட்டுத்தனமாக ஏற்றுமதி செய்வது அல்ல.ஏனெனில் இவற்றை முறைப்படியே வெளிநாடுகளும் அவற்றின் முகவர்களும் வாங்குவார்கள்.இதன் போது உற்பத்தியின் தரம் மற்றும் இரசாயண பயன்பாடு தொடர்பாக கருத்தில் கொள்ளப்படும்
கஞ்சா செடிகளை வளர்த்து அறுவடை செய்து பூவாக விற்பனை செய்து விளைபொருட்களாக தயாரிக்கின்றனர். முறைப்படி பதிவு செய்தால் கஞ்சா உற்பத்தி செயல்பாடுகள் மற்ற விவசாய நடவடிக்கைகளைப் போலவே இருக்கும் .
கஞ்சா செய்கையின் செயல்முறைகள்
- மண் மற்றும் வளரும் ஊடகம் தயாரித்தல்
- விதைகள் அல்லது குளோன்களை நடவு செய்தல்
- நீர்ப்பாசனம்இ உரமிடுதல் மற்றும் பூச்சிகளை நிர்வகித்தல்
- அறுவடை செய்யும் தாவரங்கள்
- தாவரங்களை உலர்த்துதல், குணப்படுத்துதல் மற்றும் வெட்டுதல்
கஞ்சா வளர்ப்புக்கு சில நிபந்தனைகள் தேவை.
முறைப்படியான அனுமதி/கஞ்சா செய்கைக்கான உரிமங்கள்
நமது நாட்டில் இதற்கான உரிமம் இதுவரை மருத்துவதேவைக்காக செய்பவர்களுக்கே உள்ளது.கேள்வி மூலம் வெளிப்படையாக இல்லை.இருந்தாலும் கஞ்கா உற்பத்தியில் வணிக ரீதியிலான குறியீடுகளை சரியாக பேனும் கலிபோர்னியாவில் உரிமம் எவ்வாறு வழங்கப்படுகிறது என பார்ப்போம்.
நீங்கள் கஞ்சாவை வளர்த்து கலிபோர்னியாவில் விற்க விரும்பினால் உங்களுக்கு உரிமம் தேவை. உங்களுக்கு தேவையான உரிமத்தின் வகை இதைப் பொறுத்தது:
- உங்கள் பயிர்செய்கையின் பரப்பளவு ( முதிர்ந்த தாவரங்களை வளர்க்கும் பகுதி)
- என்ன வகையான ஒளி விளக்குகள் பயன்படுத்தப்படுகின்றன
நாற்றுகள் மற்றும் முதிர்ச்சியடையாத தாவரங்களை மற்ற வணிகங்களின் பயன்பாட்டிற்காக அல்லது நுகர்வோருக்கு விற்க மட்டுமே (நர்சரி உரிமம்)
அறுவடைக்குப் பிறகு கஞ்சாவை உலர்த்தவும் குணப்படுத்தவும் மற்றும் ஒழுங்கமைக்கவும்; பிற உரிமதாரர்களுக்கான விற்பனை (செயலி உரிமம்)
வளர்ச்சி ஊடகம்
ஹைட்ரோபோனிக்ஸ் அல்லது ஏரோபோனிக்ஸ் மூலமும் வளர்க்கலாம் மண் முறை மூலமும் வளர்க்கலாம்.போதுமான ஊட்டச்சத்துக்கள் – தாவர வளர்ச்சிக்கு தேவையான நைதரசன் பொட்டாசியம் பொசுபரசு வழங்கப்பட வேண்டும் இவை பெரும்பாலும் சேதன உரங்கள் மூலம் மண்ணுக்கு வழங்கப்படுவது நல்லம்.ஆனால் அத்தகைய நடைமுறை கட்டாயமானதல்ல
ஒரு மண்ணின் pH 5.8 மற்றும் 6.5 க்கு இடையில் இருத்தல் வேண்டும் பார்க்கவும்.
வெப்பம்
கஞ்சாவிற்கு உகந்த நாள் வெப்பநிலை வரம்பு 24 முதல் 30 °C (75 முதல் 86 °F) ஆகும். 31 °C (88 °F) க்கு மேல் மற்றும் 15.5 °C (60 °F)க்குக் கீழே உள்ள வெப்பநிலை இதன் ஆற்றலைக் குறைத்து வளர்ச்சியைக் குறைக்கிறது. 13 °C (55 °F) வெப்பநிலையில் லேசான அதிர்ச்சிக்கு உள்ளாகிறது, இருப்பினும் தற்காலிகமாக உறைபனியைத் தாங்கும்.
ஒளி
சூரிய ஒளி அல்லது செயற்கை ஒளியைப் பயன்படுத்தலாம்.
தண்ணீர்
நீர்ப்பாசனத்தின் அளவு வெப்பநிலை மற்றும் ஒளி, வயது, மற்றும் தாவரத்தின் வளர்ச்சியின் நிலை மற்றும் தண்ணீரைத் தக்கவைக்கும் திறன் உள்ளிட்ட பல காரணிகளால் தீர்மானிக்கப்படுகிறது. தண்ணீர் பிரச்சனையின் ஒரு தெளிவான அறிகுறி இலைகள் வாடுவது. அதிக தண்ணீர் கொடுப்பதால், வளரும் ஊடகம் அதிகமாக செறிவூட்டப்பட்டால் கஞ்சா செடிகளை அழித்துவிடும்.
இது முக்கியமாக ஆக்ஸிஜன் வேர் அமைப்பினுள் நுழைய முடியாததால் ஏற்படுகிறது. காற்றில்லா பாக்டீரியாக்கள் நீர் தேங்கி நிற்கும், பழுதடைந்த நிலைகள் காரணமாக குவியத் தொடங்குகின்றன. அவை தாவர வேர்கள், நன்மை பயக்கும் (ஏரோபிக்) பாக்டீரியாக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் மற்றும் உரங்களை உட்கொள்ளத் தொடங்குகின்றன. ஒரு வளர்ச்சி ஊடகமாக மண்ணைப் பயன்படுத்தும் போது, மீண்டும் நீர்ப்பாசனம் செய்வதற்கு முன் மண் போதுமான அளவு உலர அனுமதிக்கப்பட வேண்டும்.
ஈரப்பதம்
தாவர வளர்ச்சியில் ஈரப்பதம் ஒரு முக்கிய அங்கமாகும். வறண்ட நிலைகள் ஒளிச்சேர்க்கை விகிதத்தை குறைக்கின்றன. உகந்த வளர்ச்சிக்கான உகந்த ஈரப்பதம் 40-60% RH ஆகும்.
ஊட்டச்சத்துக்கள்
மண்ணிலிருந்து ஊட்டச்சத்துக்கள் வேர்கள் மூலம் எடுக்கப்படுகின்றன. மண்ணின் ஊட்டச்சத்து குறையும் போது ஊட்டச்சத்து சேர்க்கப்படுகின்றன. பொதுவாக, கஞ்சாவிற்கு அனைத்து வாழ்க்கைக் கட்டங்களிலும் P மற்றும் K ஐ விட N அதிகமாக தேவைப்படுகிறது.
இரண்டாம் நிலை ஊட்டச்சத்துக்கள் (கல்சியம், மெக்னீசியம், சல்பர்) இருப்பது பரிந்துரைக்கப்படுகிறது. நுண்ணூட்டச்சத்துக்கள் (எ.கா. இரும்பு, போரான், குளோரின், மாங்கனீசு, தாமிரம், துத்தநாகம், மாலிப்டினம்) குறைபாடுகளாக அரிதாகவே வெளிப்படுகின்றன.
பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு
பூச்சிக்கொல்லி ஒழுங்குமுறைத் துறை அமைத்துள்ள வழிகாட்டுதல்களைப் பூர்த்தி செய்தால் நீங்கள் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தலாம். பின்வரும் விடயங்கள் தொடர்பாகவும் கவணம் கொள்ளப்பட வேண்டும்
என்ன பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவது நல்லது
என்ன பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்த முடியாது
பூச்சி மேலாண்மை நடைமுறைகள்
பூச்சிக்கொல்லி பாதுகாப்பு
பூச்சிக்கொல்லி பயன்பாடு
சிலநாடுகளில் கஞ்சா செய்கை மற்றும் விற்பனை சட்டபூர்வமாக அணுமதியளிக்கப்பட்டுள்ளன.அவை வருமாறு
கனடா, ஜார்ஜியா, மால்டா, மெக்சிகோ, தென்னாப்பிரிக்கா மற்றும் உருகுவே ஆகிய நாடுகள், மேலும் 18 மாநிலங்கள், 2 பிரதேசங்கள் மற்றும் அமெரிக்காவில் உள்ள கொலம்பியா மாவட்டம் மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள ஆஸ்திரேலிய தலைநகர் பிரதேசம் ஆகியவை
உயர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உலகில் சில நாடுகள் சரியான சட்ட அணுகுமுறைகளுடன் கஞ்சா உற்பத்தியை மேற் கொண்டு பொருளாதார ரீதியில இலாபமடைகின்றன.