இலங்கையில் சேதன விவசாயத்தை நடைமுறைப்படுத்திய அரசு அதனை சரிவரச் செய்ததா என்ற பல கேள்விகள் குற்றச்சாட்டுக்கள் விவசாயிகள் பொதுமக்கள் விற்பணையாளர்கள் உத்தியோகத்தர்கள் பேராசிரியர்கள் என பலரிடம் உள்ளன.
வழமை போல யார் என்ன சொன்னாலும் பாதிக்கப்படுவது விவசாயி என்ற யதார்த்த உண்மை தான் அனைவரையும் விலத்தி விவசாயியையும் விவசாயத்தையும் பற்றி அதிக அக்கறை கொள்ளச்செய்கிறது.
ஒரு சிறிய மாற்றம் பெரும் நம்பிக்கை தரும்.அந்த வகையில் மன்னார் மாவட்டத்தில் ஆட்காட்டிவெளி விவசாய போதனாசிரியர் பிரிவில் குணபாலன் ஜெயக்குமார் எனும் விவசாயி முற்று முழுதாக சேதன முறையில் தனக்கு கிடைத்த வளத்தை மாத்திரம் பயன்படுத்தி ஒரு ஏக்கரளவில் சேதன நெற்செய்கை செய்துள்ளார்.
அவரது செய்கை முறை
இரண்டாம் உழவில் 2000 கிலோ செறிவூட்டப்பட்ட சேதன உரத்தை இட்டார். இந்த சேதன உரத்தயாரிப்பில் 300 கிலோ எப்பாவல றொக் பெசுபேற் பயன்படுத்தப்பட்டது. பசுந்தாள் பசளையாக அகத்தி எருக்கல பூவரசு வேம்பு போன்றவற்றையும் இட்டார்
களையை கட்டுப்படுத்திய முறை
நடுகை முறையில் நெற்களை நடுகை செய்தார் 3கிலோ நெல்லினை இதற்காக பயன்படுத்தியுள்ளார் 10 இற்கு 10 அங்குல இடைவெளியில் நாற்றுக்களை நட்டு கொனோ களை கட்டுபடுத்தும் கருவியை பயன்படுத்தி களையை கட்டுப்படுத்தியிருந்தார்.
கரைசல்கள்
- மீன் அமினோ அமிலக்கரைசல்
- முட்டைக்கரைசல்
- பூச்சி விரட்டிக்கரைசல்
விவசாயியின் அணுபவக்கருத்து
விவசாயிகள் அனைவரும் தங்களது நிலத்தினைப் பற்றிய புரிதலை முதலில் பெற வேண்டும்.பின்னர் அதற்கான தீர்வுகளை உருவாக்கி அதன்படி செய்தால் சேதன விவசாயத்தில் வெற்றி பெறலாம்
விவசாய உத்தியோகத்தரது பங்களிப்பு
குறித்த விவசாயிக்கு அந்த பகுதி விவசாய போதனாசிரியர் தனது அறிவுரை மற்றும் சேதன உரத்தயாரிப்பு கரைசல்கள் தயாரிப்பு பற்றிய ஆலோசனைகளை வழங்கியதோடு அடிக்கடி களத்திற்கு சென்று மாற்றங்களை கண்டறிந்து அறிவுரை வழங்கியிருந்தார்(விவசாயி மூலமாக கேட்டறிந்தோம்) இந்த விவசாயியினது முயற்சியை பிறரும் அறிந்து கொள்வதற்காக இதற்கான வயல்விழாவினையும் ஒழுங்குபடுத்தி நடாத்தியிருந்தார்.குறித்த பகுதி விவசாயபோதனாசிரியர் அவர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்
வயல்விழா
குறித்த விவசாயின் சேதன விவசாயத்தின் அறுவடை விழா 08-03-2022 அன்று காலை 8 மணிக்கு இடம்பெற்றது.குறித்த விழாவில் மன்னார் மாவட்ட செயலாளர் பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பாட விதான உத்தியோகத்தர்கள் விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டனர்
அறுவடை
குறித்த விவசாயினது நெற்செய்கை மூலம் அவருக்கு 1170 கிலோ நெல் கிடைத்துள்ளது.இது விற்பனை விலையில அதிக விலை போகக்கூடிய BG 360நெல் ஆகும்.08.03.2022 தினத்தில் இந்த நெல்லின விலை 7000 ஆகும் எனவே இவருக்கு 126000 ருபாய் கிடைத்திருக்கும் .
இலாப நட்டக்கணக்கு
குறித்த விவசாயி உழவு மற்றும் அறுவடைக்கு மாத்திரமே செலவு செய்தார் (மொத்தமாக 20000) சேதன கரைசல் தெளித்த கூலி 6000 என்றாலும் அவருக்கு 100000 பணம் இலாபமாகும்.தவிர இரசாயணங்களை பாவித்து நஞ்சூட்டப்பட்ட அரிசிக்குப் பதில் சேதன நெல் விலை மதிப்பற்றது.இதனை நன்கு உணர்ந்த விவசாயி இந்த நெல்லினை விற்பனை செய்ய விரும்ப இல்லை
விவசாயிக்கு வாழ்த்துக்கள்
சமூகத்தில் சிறந்த மாற்றத்திற்கான விதைகள் இருக்கத்தான் செய்கின்றன. இந்த வகையில் சேதன விவசாயத்துக்கான ஒரு பொறியாகத்தான் இந்த விவசாயியை பார்க்கலாம்.தனி மனிதனாக சேதன விவசாயத்தினை பூரமாக செய்து அதில் வெற்றியும் கண்டுள்ள இந்த விவசாயியை வாழ்த்துகிறோம்.தொடர்ந்தும் இவரது சேதன விவசாயம் அனைவரையும் ஈர்த்து அவர்களும் பயன் பெற பாராட்டுகிறோம்.குறித்த விவசாயியினது விருப்பமும் அது தான்.
பிற விவசாயிகள்
சேதன விவசாயத்தினை செய்த குறித்த விவசாயிகளும் வழமையை விட இரசாயண பாவனையை குறைக்க வேண்டிய கட்டாயத்தில் தான் உள்ளனர். காரணம் பயன்படுத்திய எந்த இரசாயணமும் பூரணமாக செயற்பட இல்லை. குறிப்பாக களைக்கட்டுபாட்டு இரசாயணங்கள் அதிக விலை விலைக்கு ஏற்றமாதிரி செயற்பட இல்லை.மேலும் 25000 தொடக்கம் 30000 வரை பணம் செலவழித்தும் 20 தொடக்கம் 22 பொதி(1400 தொடக்கம் 1500 கிலோ) நெல்லினையே பெற்று உள்ளனர்.
விவசாயத்தகவலின் கருத்து
விவசாயிகள் சேதனம் அசேதனம் என்று இல்லை இவர்களுக்கு இலாபம் தரக்கூடியதை செய்வார்கள்.இரசாயணத்தினை நோக்கி விவசாயிகள் போக காரணம் உடனடித்தீர்வு.விதைத்ததை இலாபத்துடன் அறுவடை செய்ய வேண்டும் என்ற தகைப்பு உள்ளது.இந்த தகைப்பு நெற்செய்கை அறுவடைக்கு பின்னரும் அடுத்த அறுவடை வரைக்குமான வாழ்க்கை செலவுக்கான தகைப்பு ஆகும்.இதனை ஈடு செய்யக்கூடியவாறான நுட்ப முறைகளை நாம் கண்டறிய வேண்டும். இதற்கான உபாயங்கள் விவசாயிக்கு ஏற்புடையதாக இருத்தல் வேண்டும் சேதன விவசாயிகளை ஊக்குவிக்க பெரும் நிதியை அரசு வழங்க வேண்டும்
சேதன விவசாயம் தொடர்பாக எமது தளத்தில் வெளிவந்த சில கட்டுரைகள் உங்களுக்கு பயனுடையதான இருக்கும்
இயற்கை பூச்சி கொல்லியான வேப்ப விதை சாறு பயனுடையதா??? Link>>>>>> https://agricultureinformation.lk/?p=1639
நெற்ச் செய்கையில் உரப்பசளை இன்றி உயர் விளைச்சல்பெறமுடியுமா? Link>>>>>>https://agricultureinformation.lk/?p=1522
நீள அகலம் உயரம் கொண்டு தயார் செய்யப்படும் சேதன உரத்தின் அளவை அளவிடுவதற்கான இலகு முறை Link>>>>>> https://agricultureinformation.lk/?p=1357
குறைந்த இரசாயனப்பாவணையோடு அதிக விளைச்சலைப் பெறுவதற்கான வழிமுறைகள் Link>>>>>> https://agricultureinformation.lk/?p=1212
நாற்று நடுகை இயந்திரம் மூலம் நெற்செய்கையில் உயர் விளைச்சலை அடையும் வழிகள் https://agricultureinformation.lk/paddy/
கோனோ களைகட்டும் கருவி https://agricultureinformation.lk/conaweeder/
சேதன உரத்தினை வயல்களுக்கு போட்டால்வயல் மேட்டு நிலமாகாதா??? Link>>>>>> https://agricultureinformation.lk/?p=1308
சேதன உரம்/கூட்டெரு தயாரிக்கும் முறை Link>>>>>> https://agricultureinformation.lk/?p=1116
வேப்பமிலை,வேப்பம்விதைக்கரைசல் வேப்பம் எண்னைய் போன்றவற்றை பீடைக்கட்டுப்பாட்டிற்கு பயன்படுத்துதல் Link>>>>>> https://agricultureinformation.lk/?p=1113
உள்ளூர் சேதன உரங்கள் பூச்சிக்கொல்லிகள் மற்றும் களைக்கொல்லிகள் உற்பத்தியாளர்களுக்கான சிறப்பு கடன் திட்டம் https://agricultureinformation.lk/localpesticide/
நெல் நாற்று நடுதல் – Paddy Transplanting Project (PPT)
செறிவூட்டப்பட்ட சேதன உர தயாரிப்பு முறை
மண்புழு உரம் தயாரிப்பு எவ்வளவு இலகுவானது