க.பொ.த உயர் தர பெறுபேறுகள் வெளியாகியுள்ள இந்த தருணத்தில் விவசாய பாடத்தை உயிரியல் துறையில் ஒரு பாடமாககற்று அதன் மூலம் பல்கலைக்கழகத்திற்கு செல்ல விரும்புகின்றவர்கள் விண்ணப்பிக்ககூடிய கற்கை நெறிகள் பற்றிய தொகுப்பை இங்கு வழங்குகிறோம். இத்தொகுப்பு 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டிற்கான பல்கலைக்கழக அணுமதி தொடர்பாக பல்கலைக்கழக மானியங்களின் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட கையேட்டு புத்தகத்தை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டது.
பௌதிக விஞ்ஞானம் (Physical Science) |
|
2020/21 ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்தின் உத்தேச அனுமதி | 2327 |
அனுமதிக்கான ஆகக் குறைந்த தகைமைகள்
|
க.பொ.த. (உ/த) பரீட்சையில் கீழே நிரல்படுத்தப்பட்டுள்ள பாடங்களில் மூன்றில் குறைந்தது ‘S’ தரத்தைப்
பெற்றிருத்தல் வேண்டும். அதாவது, அவ்வாறு சித்தி பெற்ற பாடங்களில் (i) இணைந்த கணிதம் அல்லது உயர் கணிதம் அத்துடன் (ii) இரசாயனவியல் அல்லது பௌதிகவியல் ஆகியவற்றில் சித்தியுடன் மூன்றாவது பாடத்தை கீழ்வரும் நிரலிலிருந்து தெரிவுசெய்ய வேண்டும் • விவசாய விஞ்ஞானம் • இணைந்த கணிதம் • உயிரியல் • உயர் கணிதம் • இரசாயனவியல் • பௌதிகவியல் |
பட்ட நிகழ்ச்சித்திட்டம் | பீ.எஸ்.சி. பௌதீக விஞ்ஞானம் |
பல்கலைக்கழகம் | கொழும்புப் பல்கலைக்கழகம்
பேராதனைப் பல்கலைக்கழகம் ஸ்ரீ ஜயவர்த்தனபுரப் பல்கலைக்கழகம் களனிப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் உறுகுணைப் பல்கலைக்கழகம் கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை இலங்கைத் தென் கிழக்குப் பல்கலைக்கழகம |
காலம் | 04 வருடங்கள் |
பிரயோக விஞ்ஞானங்கள் (பௌதிக விஞ்ஞானம்) [Applied Sciences (Physical Science)] |
|
2020/21 ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்தின் உத்தேச அனுமதி | 768 |
அனுமதிக்கான ஆகக் குறைந்த தகைமைகள்
|
க.பொ.த. (உ/த) பரீட்சையில் கீழே நிரல்படுத்தப்பட்டுள்ள பாடங்களில் மூன்றில் ஆகக் குறைந்தது ‘S’ தரத்தைப் பெற்றிருத்தல் வேண்டும். ஆயினும், அவ்வாறு சித்தி பெற்ற பாடங்களில் (i) இணைந்த கணிதம் அல்லது உயர் கணிதம் கல்வியாண்டு 2020/2021 – 70 – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அத்துடன் (ii) இரசாயனவியல் அல்லது பௌதிகவியல் ஆகியவற்றில் சித்தியுடன் மூன்றாவது பாடத்தை கீழ்வரும் நிரலிலிருந்து தெரிவுசெய்ய வேண்டும் • விவசாய விஞ்ஞானம் • இணைந்த கணிதம் • உயிரியல் • உயர் கணிதம் • இரசாயனவியல் • பௌதிகவியல் • தகவலும் தொடர்பாடல் தொழில்நுட்பமும் |
பட்ட நிகழ்ச்சித்திட்டம் | பீ.எஸ்.சி. பௌதீக விஞ்ஞானம் |
பல்கலைக்கழகம் |
இலங்கை ரஜரட்டை பல்கலைக்கழகம் பீ.எஸ்சி. பிரயோக விஞ்ஞானங்கள் காலம்: 3 வருடங்கள் பீ.எஸ்சி. பிரயோக விஞ்ஞானங்கள் கௌரவம் காலம்: 4 வருடங்கள் பீ.எஸ்சி. (கூட்டு பிரதானம்) பிரயோக விஞ்ஞானங்கள் பட்டம் காலம்: 4 வருடங்கள் பீ.எஸ்சி. தொழில்முறை கணிதவியல் – கௌரவ விஞ்ஞானமாணி பட்டம் காலம்: 4 வருடங்கள்
இலங்கை சபரகமுவ பல்கலைக்கழகம் பீ.எஸ்சி. (பிரயோக விஞ்ஞானங்கள்)கௌரவப் பட்டம் – இரசாயனத் தொழில்நுட்பம் பீ.எஸ்சி. (பிரயோக விஞ்ஞானங்கள்) கௌரவப் பட்டம் – கணனி விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் பீ.எஸ்சி. (பிரயோக விஞ்ஞானங்கள்) கௌரவப் பட்டம் – பிரயோக பௌதிகவியல் பீ.எஸ்சி. (பிரயோக விஞ்ஞானங்கள்) பௌதிக விஞ்ஞானங்கள்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் (வவுனியா வளாகம்) பீ.எஸ்சி. பிரயோக கணிதமும் கணித்தலும் காலம்: 3 வருடங்கள் பீ.எஸ்சி. கணனி விஞ்ஞானம் (கௌரவம்) காலம்: 4 வருடங்கள்
கிழக்கு பல்கலைக்கழகம் (திருகோணமலை வளாகம்) பீ.எஸ்சி. பிரயோக பௌதிகவியல் மற்றும் இலத்திரனியல் (பொது) பீ.எஸ்சி. பிரயோக பௌதிகவியல் (கௌரவம்) பீ.எஸ்சி. இலத்திரனியல் (கௌரவம்)
இலங்கை வயம்ப பல்கலைக்கழகம் பீ.எஸ்சி. (பொது) பட்டம் (ஆங்கில மொழி மூலம், 3 வருடங்கள்) பீ.எஸ்சி. (இணைந்த பிரதான பட்டம்) பிரதான பாடம் 1 மற்றும் 2† இல ; (ஆங ;கில மொழி மூலம ;, 4 வருடங ;கள 😉 பீ.எஸ்சி. (விசேட பட்டம்) பிரயோக இலத்திரனியல் (ஆங ;கில மொழி மூலம ;, 4 வருடங ;கள 😉 பீ.எஸ்சி. (விசேட பட்டம்)தொழில்சார் முகாமைத்துவம் (ஆங்கில மொழி மூலம், 4 வருடங்கள்) பீ.எஸ்சி. (விசேட பட்டம்) புள்ளிவிபரத்துடன் கூடிய கணிதம் (ஆங்கில மொழி மூலம், 4 வருடங்கள்) † பிரதான பாடம் 1 மற்றும் 2 என்பன கணக்கிடலும் தகவல் முறைமைகளும், இலத்திரனியல், தொழில்சார் முகாமைத்துவம், மற்றும் கணிதமும், கணித மாதிரிகளும் மற்றும் புள்ளிவிபரவியல் ஆகிய பாடங்களிலிருந்து இரு பாடங்களாகும். |
புள்ளிவிபரவியலும் செயற்பாட்டு ஆராய்ச்சியும் (Statistics & Operations Research) |
|
2020/21 ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்தின் உத்தேச அனுமதி | 79 |
அனுமதிக்கான ஆகக் குறைந்த தகைமைகள்
|
க.பொ.த. (உ/த) பரீட்சையில் ஆகக் குறைந்தது ‘S’ தரத்தை இணைந்த கணிதத்திலும் மற்றும் S ‘ தரத்தை கீழ்வரும் பாடங்கள் இரண்டில் பெற்றிருக்க வேண்டும். • உயிரியல் • இரசாயனவியல் • பௌதீகவியல் • விவசாய விஞ்ஞானம் • கணிதம் • உயர் கணிதம் • தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம் |
பட்ட நிகழ்ச்சித்திட்டம் | விஞ்ஞான இளமானி புள்ளிவிபரவியலும் செயற்பாட்டு ஆராய்ச்சியும்
கௌரவப் பட்டம் |
பல்கலைக்கழகம் | பேராதனைப் பல்கலைக்கழகம் |
காலம் | 04 வருடங்கள் |