அரசாங்கம் என்று நாம் நம்புகின்ற பல அரசியல் வாதிகள் தங்களது விளம்பரத்திற்கு அதிக பயனாளிகளை கவருவதற்கு ஒரு திட்டத்தை உருவாக்கி அதில் தங்களது பங்கை எடுத்துக்கொள்வார்கள். அத்திட்டத்தை உருவாக்கி எழுத்து வடிவில் தந்து அதனை செயலாக்க முனைப்பை காட்டுவது உயர்மட்ட அதிகாரிகளே. இலங்கையின் பொருளாதாரம் மற்றும் உணவுத்தட்டுப்பாட்டிற்கு இலங்கையை ஆண்ட கட்சிகளும் அதன் தலைவர்களாகிய அரசியல் வாதிகள் எந்தளவிற்கு காரணமோ அந்தளவிற்கு அரசியல் தலைவர்களது எண்ணங்களுக்கு இசைந்து நாட்டின் வளம் மற்றும் நிதியை சூறையாடிய உயர்மட்ட அதிகாரிகளும் காரணமே.
உண்மையில் அரசியல்வாதிகளை விட இவர்கள் தான் பெரிய திருடர்கள் ஏனெனில் ஆட்சி மாறும் போது அரசியல்வாதிகள் காணாமல் போய் விடுவார்கள் ஆனால் இந்த அதிகாரிகள் ஒரு திணைக்களத்திலிருந்து இன்னுமொரு திணைக்களம் தான் மாறுவார்கள்.புதிதாக வருகின்றவர்களும் ctrl+c மற்றும் ctrl+ v தான்.
இந்த ஊழல் பெருச்சாளிகள் தங்களது இளைப்பாறும் காலம் வரைக்கும் கொள்ளையடித்தது மாத்திரம் இல்லாமல் இளைப்பாறிய பின்னரும் re-employment என்று வந்து கொள்ளையடிப்பார்கள். சிலரை திணைக்களத்தினை விட்டு மாற்றினாலும் போகமாட்டேன் என அடம்பிடித்து அரசியல்வாதிகள், நீதிமன்றம், மனிதஉரிமைகள் ஆணைக்குழு என பலதரப்பட்ட இடத்திலும் முறைப்பாடு செய்து வருவார்கள். (ஏன் பழைய திணைக்களத்திற்கு கள்ளத்தனமாக கிழமைக்கு ஒரு தடவை கூட வந்து போவார்கள்) இவ்வாறு முறைப்பாடு செய்து நாட்டின் அபிவிருத்தியை மாற்றவா போராடுகிறார்கள். சரி நாட்டின் அபிவிருத்திக்கு தான் போராடுகிறார்கள் என வைத்துக்கொண்டாலும் இதற்கு முன்னர் அவர்கள் செய்த சாதனையின் வழியிலாக நாட்டின் அபிவிருத்தியில் என்ன மாற்றம் நடந்தது, எதுவும் இல்லை.
ஆளுனர் சிறந்த முடிவை எடுத்து ஏதோ ஒரு மாற்றத்தை செய்ய நினைத்தால் உள்ளே கலகங்களை உருவாக்க நினைத்து அதுவும் நடக்காமல் போய்விட்டது.
ஆக சுய இலாபங்களுக்காகவே இவர்கள் போராடுகிறார்கள் என்பதனை தெளிவாக அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். இருந்தாலும் இவர்களது துதிபாட என்று ஒரு கூட்டம் எப்போதும் தயாராக உள்ளது. அது தான் அடுத்து நாட்டினை மேலும் மோசமாக்க தயாராகும் கூட்டம். உயர் அதிகாரிகளின் ஏவளாளிகள். உயர் அதிகாரி ஒரு திணைக்களத்தினை விட்டு சென்று இன்னுமொரு திணைக்களத்திற்கே வேலைக்கு செல்கிறார், ஆக வேலை செய்ய நினைப்பவர் அதுவும் உயர்மட்ட அதிகாரிகள் எங்கு சென்றாலும் வேலை செய்யக்கூடியவராக இருத்தல் வேண்டும் மாறாக அடம்பிடிப்பது அரசியல்வாதிகளை அனுகுவது தான் ஒட்டுமொத்த ஊழலுக்குமான அடிப்படை. இதனை தான் நாட்டின் வருடாந்த இடமாற்றுகைகளின் போதும பல உத்தியோகத்தர்கள் செய்கிறார்கள். இவ்வாறு செய்வதன் மூலம் அரசியல்வாதிகளின் கைக்கூலியாகிறார்கள.அரசியல் வாதிகளின் கைகூலியாகி அவர்களுக்கு தேவையான சலுகைகளை பெற்றுக்கொள்கிறார்கள்
இலங்கையின் அரச இயந்திரத்தில் ஊழல் இல்லாத கட்டமைப்பை காண்பது கடினம். விவசாயத்துறையை பொறுத்தவரை கமநல சேவைகள் திணைக்களத்தினதும் விவசாயத்திணைக்களத்தினதும் ஊழல் என்பது தனிவகை.
இந்த திணைக்களத்து ஆணையாளர்கள்,உதவி ஆணையாளர்கள், பணிப்பாளர்கள்,உதவிபணிப்பாளர்கள், செயலாளர்கள், உதவி செயலாளர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களது திருட்டு பற்றி சாமானிய விவசாயிக்கு கூட தொரிந்து இருக்கும் ஆனாலும் இவை பெரிதுபடுத்தப்படாமை ஆச்சரியமல்ல ஏனெனில் இவற்றை சமாளிக்கும் தந்திரம் இவர்களிடம் உள்ளது. தந்திரம் என்பதை விட அதிகாரம் உள்ளது
இந்த தந்திரங்களை மறைத்து, நாங்கள் வேலைக்கு வந்த காலத்தில் சைக்கிளில் சென்று மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்றும் பெற்றோலியத்தை நம்பி இருக்க கூடாது என்று மனச்சாட்சி இல்லாமல் நடைமுறைக்கு சாத்தியம் இல்லாத கதை கதைப்பார்கள்.சைக்கிளில் சென்று வேலை செய்த கோமான்களதும் கோமான்களது குடம்பத்தினருதும் சொத்து மதிப்பை கேட்டால் தலைசுற்றி விழவேண்டிவரும். சொகுது வாகனங்கள்,பண்னை வீடுகள், கடைகள்,நகைகள்,சொத்துக்கள் என இவர்களது சம்பளத்திற்கும் இருப்புக்கும் சம்பந்தமே இருக்காது.
ஏற்கனவே எமது தளத்தில் திறமை மற்றும் கல்வித்தகமை இல்லாதவர்கள் பலர் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக உள்ளனர் என்பது பற்றி எழுதி இருந்தோம்.
க.பொ.த சாதாரண மற்றும் உயர் தரப்பரீட்சையில் சித்தியடையாதவர்கள் கமநல சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் Link https://agricultureinformation.lk/agarian-ado/
கமநல சேவைகள் திணைக்களத்திலும் விவசாயத்துறையிலும் உள்ள உள்ள ஊழல்கள் மற்றும் தவறுகளை நாம் தொடர்ந்து சுட்டிக்காட்ட உள்ளோம். இவ்வாறு சுட்டிக்காட்டுவதன் மூலம் சமூகத்தில் எதிர்மறையான கருத்தை திணிக்கவோ அல்லது தனிநபர்கள் மீதான வன்மத்தை பெறவோ நாம் விரும்பவில்லை. மாறாக இலங்கையின் விவசாயத்துறையில் ஈடுபடும் விவசாயிகளில் பெரும்பாலானவர்கள் கல்வியறிவு குறைந்தவர்கள் அதேவேளை விவசாயத்துறைசார்ந்து இயங்க கூடியவர்களில் பலருக்கு அணுபமும் முழுமையான திறன்கள் மற்றும் கல்வியறிவு போதாது. இத்துறையில் நடைபெறும் தவறுகளை தொடர்ந்து சுட்டிக்காட்டும் ஊடகங்களும் மிககுறைவு. ஊடகப்பசி உள்ளபோது மாத்திரமே இவற்றினை ஊடகங்கள் வெளிப்படுத்தும்.
மேலும் இத்துறையின் தவறுகளை யார்சுட்டிக்காட்டப்போகிறார்கள் என்ற மனஉறுதியும் இவை வெளிவராமல் விவசாயிகளுக்கும் சங்கங்களுக்கு சில சலுகையை வழங்கி பிரச்சனையை மூடிமறைக்கும் தந்திரமும் அதிகாரிகளிடம் உள்ளது.
ஆனால் இவை வெளிவரும் போது சமூகத்தில் பேசு பொருளாகி அவை இனிவரும் காலத்தில் தொடர்ச்சியாக இடம்பெறாமல் இருப்பதற்குமான வாய்ப்புக்கள் அதிகம் அதே போல் இவற்றிற்கான மாற்றங்களை உருவாக்ககூடிய சந்தர்ப்பமும் உண்டு . இந்த காரணங்களுக்காகவே நாம் இவற்றினை வெளிப்படுத்துகிறோம்
அந்தவகையில் விவசாய விரிவாக்கம் மற்றும் பிற திணைக்களங்களால் வழங்கப்படும் அரைமானிய திட்டம் தொடர்பாக இங்கு பார்க்கலாம்
அரைமானியம் என்பது இவர்களது திருட்டு வேலைக்கான பலவு திறவு கோலில் மிகச்சிறந்த திறவு கோல்
அரைமானிய திருட்டு பற்றி ஒரு ஒரு உதாரணத்துடன் தர முயற்சிக்கிறேன்
- ஒரு சோலார் திட்டத்தை எடுத்துக்கொள்வோம்
- திட்டம் உருவாக்கப்படும்
- சோலர் பனலுக்கான கேள்விகோரல் பத்திரிக்கையில் கோரப்படும் கோரப்பட்ட பின்னர்
சோலர் திட்டத்தில் சோலார் பனலின் விலை 400 000
விவசாயிகளது பங்களிப்பு 200 000
அரசின் பங்களிப்பு 200 000
உண்மையில் சோலர்பனலின் பெறுமதி 400 000 என்பது பொய்யானது இதன் ஆக கூடிய பெறுமதி 350 000 ஆகும்.எனில் ஒரு பனலில் 50000 பணம் மறைக்கப்பட்டு அது விவசாயிகளிடமும் அரசாங்கத்திடமும் பெறப்படுகிறது.இதற்கான நிதி அரசாங்கத்திடம் இருந்து திறைசேரி மூலம் பெறப்படும்
சரி இது எவ்வாறு நடக்கிறது
கேள்வி கோரலின் போது உள்ளுர் வர்த்தகர்களின் கேள்வி கோரல்கள் நிராகரிக்கப்பட்டு விவரம் தெரியாத கம்பெனிகளுக்கு பொருட்களை வழங்குவதற்கான அனுமதி வழங்கப்படும். இதன் போது குறித்த கம்பெனி பணத்தை வழங்கி விடும்.
கம்பெனிக்கு என்ன இலாபம்.
விற்பனை நடைபெறும்
அடையாளம் தெரியாத கம்பெனிக்கு வியாபாரம் கிடைத்துள்ளது
உயர் அதிகாரிக்கு என்ன இலாபம் எவ்வாறு பணம் பெறப்படுகிறது
அடையாளம் தெரியாத கம்பெனி தரம் குறைந்த பொருளை குறைந்த விலைக்கு வழங்கும் அதற்கு பெரிய விலை இட்டு விவசாயிடமும் அரசின் திறை சேரியிடமும் பெறப்படுகிறது. இது குறித்த கம்பெனிக்கு இட்டு கணக்கு காட்டப்படும்.
திறைமறைவில் கணக்குகள் திறக்கப்படும்.
யாருக்கு நட்டம்
1.விவசாய உத்தியோகத்தரை நம்பி திட்டத்தில் இணைந்த விவசாயிகளுக்கு
2. விவசாயிகளுக்கான திட்டம் இது என நம்பி விவசாயிகளை இணைத்த உத்தியோகத்தர்களுக்கு
இவ்வாறு நடந்துள்ளதா ஆம் எனில் எப்போது எங்கு
2017 இல் தொடங்கி 2019 வரை நடைபெற்ற சூரிய சக்தி மூலமான விவசாயத்துக்கு தேவையான நீரை இறைப்பதற்கான திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டு அதன் மூலம் வடமாகாணத்தில் நூறுக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு குறித்த திட்டத்திற்கான சோலர் பனல் வழங்கப்பட்டது.
மன்னார் மாவட்டத்தில் விவசாயி ஒருவரிடம் அரைவாசிப்பணம் வாங்கி பணம் பெற்று சோலர் பனல் வழங்கப்படாத சந்தர்ப்பமும் உண்டு. இதற்காக வேறுதிட்டங்களில் ஒதுக்கப்பட்ட இலவச பொருட்களை வழங்கி சமாளிக்க முயற்சித்த சம்பவமும் அது தொடர்பான உத்தியோகத்தருக்கு எந்தவிதமான சட்டநடவடிக்கையும் எடுக்கப்படாமலும் உள்ளது. மேலும் குறித்த உத்தியோகத்தர் ஒரு அபிவிருத்தி உத்தியோகத்தராவார். ஆயினும் முன்னைய மாகாணப்பணிப்பாளர் இவரை சமபதவி மற்றும் சம சம்பளம் இல்லாத பாடவிதான உத்தியோகத்தர் பதவியில் வைத்திருந்தார் இது தாபனக்கோவையின் படி முற்றிலும் தவறானது. ஆயினும் இதுபற்றி எந்தவிதமான குற்றச்சாட்டுகளும் சட்ட நடவடிக்கைகளும் இல்லை. . இதுபற்றிய முழுமையான விடயத்தை இன்னும் ஒரு கட்டுரையில் பார்க்கலாம்.
இவ்வாறு வழங்கப்பட்ட சோலர் பனல் மிக குறுகிய காலத்தில் செயலிழந்து போய் விவசாயிகளது சொத்து முடங்கி போயுள்ளது.ஆயினும் இது பற்றி எந்த கவலையும் இல்லாமல் இருக்கிறார்கள் வடமாகாண விவசாய பணிப்பாளர் மற்றும் அமைச்சின் செயலாளர்
சோலர் தொகுதிக்கான உத்தரவாதம் மற்றும் சோலர் தொகுதிகளது செயலிழப்பு
வழங்கப்பட்ட சூரிய சக்தி பனல்களில் ஒவ்வொரு பாகத்திற்கும் (solar array, charge controller, inverter) பல வருடங்கள் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.ஆனால் வழங்கப்பட்டு சில வருடங்களுக்கு உள்ளாகவே பல சோலர் தொகுதிகள் வினைதிறனற்று செயலிழந்து வேலைசெய்யாமல் போய் உள்ளது.
உத்தரவாதம் அளிக்கப்பட்ட பொருள் இவ்வாறு உத்தரவாதமளிக்கப்பட்ட பொருளில் பிரச்சனை என்றால் அதனை தீர்த்து வைக்க வேண்டியது விவசாயிகளுக்கு குறித்த பொருளை அறிமுகம் செய்த விவசாயத் திணைக்களமே ஆகும்.விவசாயிகள் தனியார் கம்பனியை நம்பி சோலர் தொகுதியை வாங்கவில்லை விவசாயத்திணைக்களத்தினை நம்பியே வாங்கினார்கள்.
வடமாகாகணத்தில் உள்ள 5 மாவட்டங்களில் நூறுக்கு மேற்பட்ட தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன.இவற்றில் 70 சதவீதமான தொகுதிகள் செயலிழந்து விட்டன. சிலது வினைதிறனற்றுக் காணப்படுகிறது.பத்துக்குட்பட்ட தொகுதிகள் மாத்திரம் செயற்படுகிறது.இதுவும் inverter இல் ஏற்பட்ட பிரச்சனைகளை விவசாயிகளே தற்துணிவில் மாற்றி உள்ளனர்.solar array, charge controller இல் ஏற்படும் பிரச்சனையை குறித்த கம்பெனியே தீர்க்க வேண்டும்
இது பற்றி விவசாயிகள் குறித்த கம்பெனியை தொடர்பு கொண்ட போது உரிய பதில்கள் கிடைக்க இல்லை. விவசாயிகளது களத்திற்கு வந்து பார்க்கவும் இல்லை திருத்தவும் இல்லை..
விவசாயிகள் தங்களது விவசாய உத்தியொகத்தரை அனுகி தெரிவித்த போதும் அவர்களுக்கு உரிய பதில்கள் கிடைக்க இல்லை.
விவசாய உத்தியோகத்தர்கள் பலர் தங்களது மேல் இடத்திற்கு அறிய தந்து விவசாரித்த போதும் குறித்த கம்பெனியினை தொடர்பு கொண்ட போதும் பதில் எதுவுமில்லை
குறுகிய காலத்தில் கம்பெனியின் தொடர்பு இலக்கமும் வேலை செய்ய இல்லை.
பின்னர் கம்பெனியை பற்றி விவசாரித்த போது அது சீனாவிலிருந்து பொருட்களை இறக்கும் நிறுவனம் என்றும் சரியான கட்டமைப்பு இல்லாத நிறுவனம் எனவும் தெரிவிக்கப்பட்டது.
முறைப்படி கேள்வி மணு கோரல் விடுவித்த போது கம்பனியின் நம்பகத்தன்மையை கவனிக்காதது யாருடைய பிழை .
தற்போது நாடு எதிர்கொள்ளும் பெற்றோலிய தட்டுப்பாடு நிச்சயமற்ற மின்சாரத்தினால் விவசாயிகள் நிர் இறைக்க வசதி இல்லாமல் கடந்த சிறுபோகத்தில் திண்டாடினார்கள் மழை குறைவான சிறுபோகத்தில் நீரை இறைப்பு செய்ய வேண்டியது அவசியமாகும். இலங்கையின் தம்புள்ளை சந்தையில் பெறுமதிமிக்கதும் உலகளவில் சின்ன வெங்காயத்துக்கு பேர் போன யாழ்ப்பாண விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டனர் அதே போல் வடமாகணத்தின் சிறுதானிய வலயமாகிய வவுனியாவில் சிறுதானிய விவசாயிகளும் முல்லைத்தீவில் பாரியளவில் நிலக்கடலை செய்யும் விவசாயிகளும் மன்னார் மாவட்டத்தில் கடந்த ஆண்டு தேசியளவில் இரண்டாவதாக பாரிய ஏக்கரளவில் பயறுசெய்கை செய்யப்பட்டது இதன் போதும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்
நாட்டின் அசாதாரண சூழ்நிலையில் விவசாயிகள் பாதிக்கப்படுவது யாருடைய சதியும் அல்ல
ஆனால்
நீர் இறைக்ககூடிய மற்றும் சகாலத்துக்கு பொருத்தமான சோலர்பனல் தன்னிடம் இருந்தும் ஏதும் செய்ய முடியாத விவசாயியினது சோகம் எத்தகையது. ஒரு பக்கம் பயிர் கருகும் மறு பக்கம் இயங்காத சோலர்
சோலர்பனல்களை வழங்ககூடிய நம்பகமான கம்பெனிகள் இலங்கையில் வடமாகாணத்தில் இல்லையா?
இந்த குழப்பங்கள் மற்றும் தவறுகள் பற்றி நாம் ஆராய்ந்த போது வடமாகாணத்தில் குறிப்பாக 2016 தொடக்கம் 2019 காலப்பகுதியில் வவுனியா மாவட்டத்தில் மாத்திரம் 5 இற்கும் மேற்பட்ட நிறுவனங்களும் யாழ்ப்பாணத்தில் இலங்கையை மையமாக கொண்டு நீண்டகாலமாக விவசாயத்திற்கான பொருட்களை வழங்கும் 4 இற்கு மேற்பட்ட கம்பெனிகளும் கொழும்பை மையமாக கொண்டு சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட கம்பெனிகள் பலவும் இருந்தன.
இது குறித்து அந்த காலப்பகுதியில் சோலருக்கான கேள்விகோரலுக்கு விண்ணப்பித்து இருந்த ஒரு நிறுவனத்திடம் தொடர்பு கொண்டு கேட்ட போது தாங்கள் நீண்ட காலமாக விவசாய உற்பத்திக்கான உள்ளீடுகளை வழங்கும் நிறுவனம் தாங்கள் விவசாயத்திணைக்களத்தின் பல திட்டங்களில் வெற்றிகரமாக ஈடுபட்டிருந்ததாகவும் இந்த திட்டம் தங்களுக்கு வழங்கப்பட இல்லை எனவும் தங்களுக்கு வழங்கப்பட்டிருந்தால் தாங்கள் சரியாக செய்திருப்போம் எனவும் ஆக குறைந்தது தங்களுக்கு வழங்காது விட்டு உள்ளுரில் நீண்டகாலமாக இயங்கும் வேறொரு நிறுவனத்திற்கு வழங்கியிருந்தால் கூட தற்போது பழுதடைந்தது போல் பழுதடைந்து இருந்தால் திருத்துவதற்கு ஏதுவாக இருந்திருக்கும் என்றார்.
அடுத்த கட்டுரையில் சேதன விவசாய திட்டம் 2022 அரைமானியம் பற்றி பார்க்கலாம்
மீள ஞாபகமூட்டல்
கமநல அபிவிருத்தி திணைக்களத்திலும் விவசாயத்துறையிலும் உள்ள உள்ள ஊழல்கள் மற்றும் தவறுகளை நாம் தொடர்ந்து சுட்டிக்காட்ட உள்ளோம் இவ்வாறு சுட்டிக்காட்டுவதன் மூலம் சமூகத்தில் எதிர்மறையான கருத்தை திணிக்கவோ அல்லது தனிநபர்கள் மீதான வன்மைத்தை பெறவோ நாம் விரும்பவில்லை. மாறாக இலங்கையின் விவசாயத்துறையில் ஈடுபடும் விவசாயிகளில் பெரும்பாலானவர்கள் கல்வியறிவு குறைந்தவர்கள் அதேவேளை விவசாத்துறைசார்ந்து இயங்க கூடியவர்களில் பலருக்கு அணுபமும் முழுமையான திறன்கள் மற்றும் கல்வியறிவு போதது. இத்துறையில் நடைபெறும் தவறுகளை தொடர்ந்து சுட்டிக்காட்டும் ஊடகங்களும் மிககுறைவு. ஊடகப்பசி உள்ளபோது மாத்திரமே இவற்றினை ஊடகங்கள் வெளிப்படுத்தும்.
மேலும் இத்துறையின் தவறுகளை யார்சுட்டிக்காட்டப்போகிறார்கள் என்ற மனஉறுதியும் இவை வெளிவராமல் விவசாயிகளுக்கும் சங்கங்களுக்கு சில சலுகையை வழங்கி பிரச்சனையை மூடிமறைக்கும் தந்நதிரமும் அதிகாரிகளிடம் உள்ளது.ஆனால் இவை வெளிவரும் போது சமூகத்தில் பேசு பொருளாகி அவை இனிவரும் காலத்தில் தொடர்ச்சியாக இடம் பெறாமல் இருப்பதற்குமான வாய்ப்புக்கள் அதிகம் அதே போல் இவற்றிற்கான மாற்றங்களை உருவாக்ககூடிய சந்தர்ப்பமும் உண்டு . இந்த காரணங்களுக்காகவே நாம் இவற்றினை வெளிப்படுத்துகிறோம்