தொழில்நுட்ப தகவல்கள் பிரதானம் விலங்கு & பாதுகாப்பு

இலங்கையில் வேலையில்லாத இளைஞர்களுக்கு 70,000 ஆடுகள் வழங்கப்படும் – விவசாய அமைச்சு

இலங்கையின் கிராமப்புறங்களில் உள்ள வேலையற்ற இளைஞர்களுக்கு ஆடு வளர்ப்பை அறிமுகப்படுத்த விவசாய அமைச்சு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிராமப்புறங்களில் உள்ள வேலையற்ற இளைஞர்கள் மற்றும் ஆடு வளர்ப்பில் ஆர்வம் உள்ளவர்களுக்கு 70,000 ஆடுகள் வழங்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்ததாக Daily News தெரிவித்துள்ளது.

இலங்கையில் முன்னைய காலத்தினை போன்று தற்போது ஆடு வளர்ப்பு பாரியளவில் மேற்கொள்ளப்படுவதில்லை.இதனால் வெளி நாடுகளில் இருந்து ஆட்டு இறைச்சி மற்றும் ஆட்டுப்பால் இறக்குமதி செய்யப்படுவதாக சுட்டிக்காட்டிய அவர், ஆட்டுத்தோல் மற்றும் ஆட்டு உரம் உற்பத்தி செய்வதன் மூலம் அதிக வருமானம் பெறமுடியும் என்றார்

இலங்கையின் கிராமப்புறங்களில் உள்ள வேலையற்ற இளைஞர்களுக்கு ஆடு வளர்ப்பை அறிமுகப்படுத்த விவசாய அமைச்சு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிராமப்புறங்களில் உள்ள வேலையற்ற இளைஞர்கள் மற்றும் ஆடு வளர்ப்பில் ஆர்வம் உள்ளவர்களுக்கு 70,000 ஆடுகள் வழங்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்ததாக Daily News தெரிவித்துள்ளார் .

இலங்கையில் தற்போது ஆடு வளர்ப்பு பாரியளவில் மேற்கொள்ளப்படுவது இல்லை. இதனால் வெளி நாடுகளில் இருந்து ஆட்டு இறைச்சி மற்றும் ஆட்டுப்பால் இறக்குமதி செய்யப்படுவதாக சுட்டிக்காட்டிய அவர், ஆட்டுத்தோல் மற்றும் ஆட்டு உரம் உற்பத்தி செய்வதன் மூலம் அதிக வருமானம் பெறமுடியும் என்றார்.

இளைஞர்களுக்கு உயர்தர ஆடுகளும், ஆடு மேலாண்மைக்குத் தேவையான தொழில்நுட்பமும், ஆடு வளர்ப்புத் தொடர்பான பொருட்களை வாங்குவதற்குத் தேவையான தொழில்நுட்பங்களும் வழங்கப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.

ஜமன்பாரி, கொட்டுகச்சி, போயர் மற்றும் சனான் போன்ற பொருத்தமான ஆடு இனங்கள் அதிக வருமானம் ஈட்டக்கூடிய பல ஆடு இனங்கள் இதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார

இவ்வருட இறுதிக்குள் 70,000 ஆடுகள் வழங்கப்படும் என தெரிவித்த அமைச்சர், 2024 ஆம் ஆண்டில் இத்தொகையை மேலும் அதிகரிப்பதே இலக்கு எனவும் தெரிவித்தார்.

இத்திட்டத்திற்கு ஆடு மேலாண்மைக்கு இடமளிக்கும் சில மாவட்டங்கள் தேர்ந்தெடுக்கப்படும் என்று கூறிய விவசாய அமைச்சர், தனியார் துறையின் ஆதரவையும் பெற உள்ளதாக தெரிவித்தார்.

கிராம அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவுடன் விவசாய அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் மஹிந்த அமரவீர மேற்கண்டவாறு தெரிவித்தார். (நியூஸ் வயர்)

#unempolyedsrilankan70000goat

Related posts

error: Alert: Content is protected !!