பிரதானம் புதியவை மாணவர் ஒளி

அசோலாவை உற்பத்தி செய்யும் முறை மாணவர் ஒளி தொடர் #006

மூக்குத்தி மற்றும் கம்மல் செடி என அழைக்கப்படும் அசோலா மிகச் சிறிய இலைகளையும் துல்லியமான வேர்களைக் கொண்ட தண்ணீரில் மிதக்கக் கூடிய பெரணி வகையை சேர்ந்த பன்னத் தாவரம். இது கால்நடைகளுக்கு சிறந்த மாற்றுத்தீவனமாக விளங்குகிறது. 35-36 0C வெப்பம் அசோலாவின் வளர்ச்சிக்கு தேவைப்படுகிறது.

 

அசோலாவானது மூன்று முறைகளில் உற்பத்தி செய்யப்படுகிறது.
1. அதிக ஆழமில்லாத நீர் தேங்கும் குட்டைகள்
2. சீமென்ட் தொட்டிகள்
3. சில்பாலின் சீட் விரிக்கப்பட்ட குழிமுறை

அசோலாவை வளர்க்க தேவையான பொருட்கள் (30 சதுர அடிக்கு)
 அசோலா தாய் வித்து – 250கிராம்
 வளமான மண் – 2செ.மீ அளவு / 15 கிலோ கிராம் மேல் மண்
 பச்சை சாணம் – 5 கிலோ கிராம்
 சுப்பர் பொஸ்பேற் – 100 கிராம்
 சில்வாவின் சீட் – 20 சதுர அடி
 தண்ணீர் – 100 லீற்றர்

நிழற்பாங்கான இடத்தில் 10 அடி நீளம் , 3அடி அகலம் ,1அடி ஆழம் கொண்ட பாத்தி அமைக்கவும். பாத்தியின் அடித்தளத்தில் பொலித்தீனை சீராக விரிக்க வேண்டும். இதன் மேல் 2cm அளவுக்கு தண்ணீர் ஊற்றியும் பின் பாத்தி ஒன்றுக்கு 15kg மேல் மண் 100g சுப்பர் பொஸ்பேற், 5kg பச்சை சாணம் கரைத்து இட வேண்டும்.

பின்னர் இப் பாத்தியில் உள்ள மண்ணை நன்கு கலக்குவதால் மண்ணின் சத்துக்கள் தண்ணீரில் கரைந்து அசோலாவிற்கு எளிதாக கிடைக்க செய்கிறது இதன் மேல் 250g அசொல்லாவை தூவி விட வேண்டும்.

15 நாட்களில் 1 பாத்தியில் 30-50kg அசோலா தயாராகிறது. மூன்றில் ஒரு பங்கு அசோலாவை பாத்தியிலேயே விட்டுவிட்டு எஞ்சிய இரண்டாவது பகுதியை அறுவடை செய்யலாம். 10 நாட்களுக்கு ஒருமுறை 5kg பச்சை சாணம்; கரைப்பது நல்லது. அசோலாவை அறுவடை செய்து கால்நடை , கோழிகளுக்கு சத்து நிறைந்த சுவை மிகுந்த உணவாகப் பயன்படுத்தலாம்.

அசோலா பூச்சி நோய் கட்டுப்பாடு

பொதுவாக அசோலாவை பூச்சி, நோய்கள் தாக்குவதில்லை. பாத்தி களில் அசோலாவின் அடர்த்தி அதிகமானால் பூச்சி, நோய்கள் வருவதற்கான வாய்ப்புக்கள் அதிகம். இதிலிருந்து அசோலாவை பாதுகாக்க பாத்தியின் இருபுறமும் காற்று அதிகமாக புகாதவாறு தடுப்புக்கள் அமைக்க வேண்டும். பொதுவாக பூச்சித்தொல்லை வந்தால் 5 மி.லீ வேப்பெண்ணெயை 1 லீற்றர் தண்ணீரில் கலந்து அசோலா பாத்தியில் தெளிக்க வேண்டும்.

கழிவு நீரில் வளர்க்கப்பட்ட அசோலா பசும் உரமாகவும், கால்நடை தீவனமாக வரும், உயிர் எரிபொருளாகவும் பயன்படுகிறது. உலர்ந்த அசோலாவில் உள்ள புரதங்களையும், அமினோ அமிலங்களையும் ஆய்வு மேற்கொண்ட பொழுது கழிவு நீரில் வளர்க்கப்பட்ட அசோலா சற்று அளவுக்கதிகமான கச்சாப் புரதங்களை கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

எனவே அசோலா சிறந்த கால்நடை தீவனமாக பயன்படுத்தப்படுவதுடன், கழிவு நீரை தூய்மையாக்குவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

அசோலாவை ஒரு பசுவிற்கு 2 கிலோ வரை தீவனமாக கொடுப்பதால் 15-20% வரை பால் உற்பத்தி அதிகரிக்கும். புண்ணாக்கு செலவு 25-40% வரை குறையும். பாலின் தரம் அதிகரிப்பது மட்டுமன்றி கால்நடைகளின் ஆரோக்கியம் அதிகரித்து வாழ்நாளும் அதிகரிக்கிறது.

அசோலாவை நாள் ஒன்றுக்கு வழங்கும் அளவு

மாடு : 1-15Kg
இறைச்சிக் கோழி : 20-30g
ஆடு : 300-500g
வெண்பன்றி : 1.5-2 kg
முயல் : 100g

அசோலாவில் 3% கொழுப்பு சத்தும், 14-15% நார்ச்சத்தும், 25-30% புரதச் சத்தும், 45-50% மாவுச்சத்தும் உள்ளது. 1kg அசோலா உற்பத்தி செய்யும் செலவு மிகவும் குறைவு என்பதால் தீவனச் செலவு வெகுவாக குறையும். விவசாயிகள் அசோலா உற்பத்தியில் இறங்கினால் கால்நடை வளர்ப்பை இலாபகரமாக செய்ய முடியும். அசோலா கலந்த தீவனத்தை உண்டு வளரும், கோழியின் முட்டைகளை சாப்பிடுவதால் மனிதர்களுக்கும் கண்பார்வை நன்கு விருத்தியடையும்.

 

அசோலாவின் பயன்கள்

1. அசோலாவை உட்கொள்வதால் பால் உற்பத்தி 15-20% அதிகரிக்கும்.
2. 1Kg அசோலா 1kg புண்ணாக்கிக்கு சமம்.
3. பாலில் கொழுப்பு மற்றும் கொழுப்பற்ற சத்துக்கள் அதிகரிக்கின்றன.
4. கோழிகளுக்கு தீவனமாக பயன்படுத்துவதன் மூலம் அதன் எடையை அதிகரிக்கும்.
5. பன்றிகளுக்கு வழங்குவதன் மூலம் எடை அதிகரிப்பதோடு இறைச்சியின் தன்மையும் நன்றாக இருக்கும்.
6. அவ்விடத்தில் நுளம்பு பெருக்கம் காணப்படாது.

ஆக்கம்:- ஐ. அக்வினா,
NVQ 6 மாணவி,
யாழ்ப்பாணக் கல்லூரி விவசாய நிறுவனம்,
மருதனார்மடம்.

 

Related posts

error: Alert: Content is protected !!