உலகளவில் முன்னேற்றமடைந்த நாடுகள் அல்லது தொழில்நுட்ப ரீதியில் முன்னேற்றமடைந்த நாடுகள் என்று கருதப்படக்கூடிய நாட்டு கற்ற விவசாயிகள் கூட தமது மண்வளம் பற்றிய சரியான புரிதல் இல்லாமலே விவசாயம் செய்கின்றனர்.உலகளவில் யூரியாவின் விலையேற்றம் ஏற்பட காரணம் என்ன என்பதை முன்னைய பதிவில் பார்த்தோம்.அதற்கான காரணத்தை அறிய விரும்பினால் லிங்கை தொடரவும்.
உலக சந்தையில் அதிகரித்து வரும் யூரியா பசளையின் விலையேற்றம்>>>>>>link https://agricultureinformation.lk/ureamarket/
யூரியாவின் விலையேற்றத்தால் பலநாட்டு விவசாயம் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது.இதற்கான மிகச்சரியான தீர்வை நோக்கி பலர் ஆராய்ந்து வருகின்றனர்.ஆனாலும் சில அடிப்படை விடையங்களை மிகச்சரியாக செய்வதன் மூலம் திட்டமான விவசாயத்தை கட்டியெழுப்ப முடியும் என்கிறார் மிசோரி பல்கலைக்கழகத்தின் திட்ட அறிவியல் துறையுடன் ஜஸ்டின் கால்ஹவுன்.இதற்காக செய்ய வேண்டியது மண்பரிசோதனையாகும்.
இதுவரை மண் பரிசோதனை செய்யாத விவசாயிகள் வயல்களுக்கு எவ்வளவு உரம் இட வேண்டும் என்பதைத் தீர்மானிக்க மண் பரிசோதனை செய்ய ஊக்குவிக்கப்பட வேண்டும்
விவசாய வளங்களை ஆதரிப்பதற்கும் நிலைநிறுத்துவதற்கும் சரியான மேலாண்மை மற்றும் மண் வளங்களின் பயன்பாடு முக்கியமானது.
மண் பரிசோதனை அவசியம்.
மண் பரிசோதனையானது மண்ணின் தன்மைகளை தீர்மானிக்க இடம் சார்ந்த மற்றும் துல்லியமான தகவல்களை வழங்குகிறது. புவியியல் சூழலைப் பொறுத்து மண்ணின் pH மற்றும் ஊட்டச்சத்து விநியோகம் மாறுபடும்.
நமது நாட்டில் எங்கே மண்பரிசோதனை செய்ய முடியும்
விவசாயத்திணைக்கள விவசாய போதனாசிரியர்கள் விவசாய ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி உத்தியோகத்தர்களை தொடர்பு கொண்டு
இந்த சேவையை பெற்றுக் கொள்ள முடியும்